என் மலர்
நீங்கள் தேடியது "சிட்னி சிக்சர்ஸ்"
- பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார்.
- 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.
லாகூர்:
பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதேபோல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.
பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடி வருகிறார்.
இதுதொடர்பாக, பாபர் அசாம் கூறுகையில், சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றான சிட்னி சிக்சர்ஸ் உடன் இணைவது உற்சாகம் அளிக்கிறது. அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதை எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய பிரிஸ்பேன் அணி 166 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய சிட்னி அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சிட்னி:
பிக்பாஷ் லீக் தொடரின் 13-வது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிரவுன் 53 ரன்னும், ரென்ஷா 40 ரன்னும் அடித்தனர்.
சிட்னி அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் சிட்னி அணி 17.3 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.
பிரிஸ்பேன் அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டும், பார்ட்லெட், ஸ்வெப்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஸ்பென்சர் ஜான்சனுக்கு அளிக்கப்பட்டது.






