என் மலர்
நீங்கள் தேடியது "BabarAzam"
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 288 ரன்கள் எடுத்தது.
ராவல்பிண்டி:
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த 11-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 289 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 289 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. சதமடித்து அசத்திய பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
- பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார்.
- 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.
லாகூர்:
பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதேபோல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.
பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடி வருகிறார்.
இதுதொடர்பாக, பாபர் அசாம் கூறுகையில், சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றான சிட்னி சிக்சர்ஸ் உடன் இணைவது உற்சாகம் அளிக்கிறது. அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதை எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
- விராட் கோலி 3ஆம் இடத்திலும், ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.
- பந்து வீச்சாளர் தரவரிசையில் பும்ரா 5வது இடத்தில் இருக்கிறார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் இமாம் உல்ஹக், இந்திய வீரர் கோலியை பின்னுக்கு தள்ளி 815 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்துள்ளார்.
சொந்த மண்ணில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 892 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 811 புள்ளிகளுடன் விராட் கோலி 3ஆம் இடத்திலும், 791 புள்ளிகளுடன் ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர் தர வரிசையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய ஹேசில்வுட் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.இந்த தரவரிசையில் இந்தியாவின் பும்ராவிற்கு 5வது இடம் கிடைத்துள்ளது.






