search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் சாவு"

    • ஒரு மோட்டார்சைக்கிளில் பெங்களூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு டைட்டில் பார்க் அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 78). இவர் கடந்த 9-ம் தேதி காலை ஒரு மோட்டார்சைக்கிளில் பெங்களூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு டைட்டில் பார்க் அருகே வந்து கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்ட சதாசிவத்தை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சதாசிவம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே திம்மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் திம்மராயன் (வயது75). விவசாயி. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் உடனே அங்கு வந்து திம்மராயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திம்மராயன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று முனுசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே சிக்கபூவதி பகுதியைச் சேர்ந்த முனுசாமி (வயது80). இவர் நேற்று காமன்தொட்டி அருகே உள்ள ஒரு ஓட்டல் அருகே நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று முனுசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் முத்து சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை எதிரே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • லாரி முதியவரின் மேல் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெருங்காடு கிராமத்தை சேர்ந்த முதியவர் ராஜ்(வயது.70). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை மாரண்டஅள்ளி - அமானிமல்லாபுரம் சாலையில் கணபதி நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடை எதிரே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்,

    அப்போது மாரண்டஅள்ளியிலிருந்து மல்லாபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி சரக்கு லாரி முதியவரின் பின் பக்கம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடியது.
    • பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் ஷேக் கவுஸ் பாஷா பஸ்சிலிருந்து கீழே குதித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரத்தில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூருக்கு இன்று காலை வந்தது. திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பை கடந்து 5 முனை சந்திப்பு சாலை அருகே வந்தபோது பஸ்சில் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக்கில் ஏற்பட்ட பழுதால் பஸ்சில் பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி அந்த பகுதியில் இருந்த ஒரு செல்போன் கடையில் மோதியது. இதனால் கடையின் முன்பக்கம் சேதமானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ் கடையின் மீது மோதி விடும் என்ற அச்சத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஷேக் கவுஸ் பாஷா (வயது 60) என்பவர் பஸ்சிலிருந்து கீழே குதித்தார். செல்போன் கடையில் வேகமாக மோதிய பஸ் பின்னால் வந்ததுபோது ஷேக் பாஷா மீது மோதி கீழே விழுந்தார். இதில் சாலையில் கிடந்த கல் மீது விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே சேக் பாஷா இறந்தார். பஸ்மோதி நின்ற போது பின்னால் வந்த ஆட்டோ மோதியது.

    அதன் பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்றும் மோதியது. ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் பஸ்சில் பயணம் செய்த மூதாட்டி, சிறுமி, டிரைவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் இறந்த ஷேக் கவுஸ் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையில் ஆட்டோ மற்றும் தனியார் பஸ் மோதி விபத்து நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அம்மா உணவகம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
    • அவரை அப்பகுதி யினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் ஆற்றோரம் மார்க்கெட், அம்மா உணவ கம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதி யினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பல னின்றி கடந்த 2-ந் தேதி அந்த முதியவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்து கிடந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ராமமூர்த்திரெட்டி (வயது55). இவர் தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமமூர்த்தி ரெட்டி உயிரிழந்தார்.

    இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காற்று வீசியதால் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.
    • பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி(65). சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.

    மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகர்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார்.
    • பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    அந்தியூர், 

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (65). மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் கோவிந்தராஜ் கடந்த வாரம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதையடுத்து அவர் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பணம் தர மறுதது வட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திடீரென மண் எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்குசேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார். 

    • அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து அர்ஜூனன் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்த ஜிஞ்சம்பட்டி அருகே சரவண கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது60). இவர் இன்று காலை 6 மணியளவில் வீட்டில் இருந்து பர்கூர்-மத்தூர் சாலையில் உள்ள கடைக்கு பால் வாங்க சென்றார்.

    அப்போது பால்வாங்கி விட்டு அங்குள்ள மின்வாரிய துறை அலுவலகம் அருகே வந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து அர்ஜூனன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மத்தூர் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த அர்ஜூனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜ மன்னார் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள்.
    • வீட்டில் இருந்த பெயிண்டிற்கு பயன்படுத்தப்படும் தின்னரை குடித்து மயங்கி கிடந்தார்.

    சேலம், ஏப்.25 -

    சேலம் அன்னதானப்பட்டி சேர்ந்தவர் ராஜமன்னார் (வயது 60). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ராஜ மன்னார் தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள்.

    இந்த நிலையில் மகன்கள் இருவரும் சரிவர கவனிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜமன்னார், வீட்டில் இருந்த பெயிண்டிற்கு பயன்படுத்தப்படும் தின்னரை குடித்து மயங்கி கிடந்தார்.

    இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று காலை பரிதாபமாக இருந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட தயாராக இருந்தது.
    • 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.

    கோவை,

    கோவை ரெயில் நிலையத்தில் கடந்த 18-ந் தேதி 5-வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு சென்ற ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில் முன்பு படுத்துக்கொண்டார். பின்னர் ரெயில் புறப்பட்டபோது ரெயிலில் சிக்கி அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×