search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வெட்டு"

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • செயற்பொறியாளர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மின்கோட் டத்தை சேர்ந்த கொரட்டி, குனிச்சி, மிட்டூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) பராம ரிப்பு பணிகள் நடைபெறு கிறது.

    இதன் காரணமாக பச்சூர், தோரணம்பதி, குமா ரம்பட்டி, காமாட்சிப்பட்டி, கொரட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு,சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்ப னூர், காக்கங்கரை, குனிச்சி, பல்லப்பள்ளி, அரவமட்ற பள்ளி, பெரியகரம், கசிநாயக் கன்ப்ட்டி, லக்கிநாயக்கன் பட்டி, கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, செவ்வாத் தூர், எலவம்பட்டி, பஞ்சனம் பட்டி, புதூர், மிட்டூர், ஆண்டியப்பனூர், லாலாபேட்டை, ஓமகுப்பம், நாச்சியார்குப்பம், இருணாபட்டு, பாப்பானூர், பூங்குளம், பலப்பநத்தம், ஜல்தி,பள்ளத்தூர், ரெட்டிவ லசை, குண்டுரெட்டியூர், நஞ் சப்பனேரி, டேம் வட்டம், ராணி வட்டம் உள்பட 38 கிராமங்களில் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு திருப்பத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைெபறுவதையொட்டி நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கோட் டத்தை சேர்ந்த ராணிப் பேட்டை நகரம், வாலாஜா, ஒழுகூர் மற்றும் முசிறிதுணை மின்நிலையங்களில் அத்தி யாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்ப தால் நாளை (வியாழக்கி ழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரைராணிப் பேட்டை நகரம், முத்துக் கடை, ஆட்டோ நகர், வி.சி. மோட்டூர், ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந் திநகர், மேல்புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிகுளம், சின்னத கரகுப்பம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூர், வி.சி.மோட்டூர், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லி யப்பா நகர், டி.கே.தாங்கல், சென்னசமுத்திரம், பூண்டி, சாத்தம்பாக்கம், பாகவெளி, முசிறி, வள்ளுவம்பாக்கம், அனந்தலை, ஒழுகூர், வாங் கூர், கரடிகுப்பம், ஜி.சி.குப் பம், தலங்கை, செங்காடு மோட்டூர், செங்காடு, கன்னி காபுரம், எடையகுப்பம், படி யம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இந்த தகவலை ராணிப் பேட்டை மின்வாரிய செயற் பொறியாளர் குமரேசன் தெரி வித்துள்ளார்.

    இதேபோல ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த ஆற்காடு, திமிரி, கத் தியவாடி, ஆணைமல்லூர், தாமரைப்பாக்கம், புதுப்பாடி ஆகிய துணை மின் நிலையங் களில் அத்தியாவசிய மின்சா தன பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆற்காடு நகரம், அவுசிங்போர்டு, வேப்பூர்,

    விஷாரம், நந்தியாலம், தாழ னூர், ராமநாதபுரம், கூராம் பாடி,உப்புப்பேட்டை, கிருஷ் ணாவரம், லப்பப்பேட்டை, முப்பதுவெட்டி, தாஜ்புரா, தக்கான்குளம், களர், கத்திய வாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ஆயிலம்புதூர், ராமாபுரம், திமிரி, விளாப் பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத் தூர் (ஒருபகுதி), மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடபந்தாங்கல் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது இந்த தகவலை செயற்பொறியள விஜயகுமார் தெரிவித்துள்ளார்

    • இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
    • அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

    கடலூர்:

    அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24-ந் தேதி புயலாக உருவெடுக்க கூடும் என கூறப்படுகிறது.

    இதையொட்டி இன்று அதிகாலை 2 மணி முதல் விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 7 மணி வரை தொடர்ந்து பெய்த வண்ணம் இருந்தது. மழை காரணமாக அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

    • கடந்த 2 நாட்களாக கன்னியகோவில் புதுநகர், வாக்கால்ஓடை ஆகிய கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    பாகூர்:

    புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

    இதனை கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் அவ்வப்போது போராட்டங்களில் குதித்துள்ளனர். அதிகபட்சமாக சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பாகூர், கன்னியகோவில், கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்தது. மழையின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு அந்த மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கன்னியகோவில் புதுநகர், வாக்கால்ஓடை ஆகிய கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மேலும் குடிநீர் விநியோகமும் அவ்வப்போது நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த புதுநகர் மக்கள் கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 7.45 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த மறியலின் போது வீட்டில் இருந்த பெஞ்ச், மரப்பொருட்களை ரோட்டில் கொட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தால் வாகனங்கள் மூலம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    நீண்ட நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தது. அருகிலுள்ள கல்லூரிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் நடந்தே சென்றனர். அதுபோல் தொழிலாளர்களும் நடந்து சென்றனர்.

    தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த நிலையில் போலீசாரின் உதவியுடன் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் சுமார் ½ மணி நேரம் நீடித்தது.

    இதே போல பாகூர் அடுத்த குருவிநத்தம் தூக்குப்பாலம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 24 பேரை பாகூர் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல பாகூர் நகரப் பகுதியில் நேற்று இரவு முதல் காலை வரை மின்சாரம் தடைபட்டு இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதற்குள் மின்விநியோகம் செய்யப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.

    • காற்றாலை மின்சாரம் என்பது முற்றிலும் வானிலையை, குறிப்பாக காற்றின் வேகத்தை பொறுத்து கிடைக்கக்கூடியது.
    • கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றாலை மூலம் 28.11 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்ட நிலையில், மின்சாரத் தேவை என்பது 350 மில்லியன் யூனிட் என்ற அளவில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 13 மின் பகிர்மானக் கழகங்கள் மின்சாரத்தை வாங்க அல்லது விற்பதற்கான எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் பங்கேற்க மத்திய அரசின் நிறுவனம் தடை விதித்து உள்ளது.

    இதற்குக் காரணம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகியவை இணைந்து 17-08-2022 வரை 926 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்தாததுதான் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த மின்சாரத்துறை அதிகாரிகள், மின்சாரத்தின் தேவை தற்போது குறைந்து இருப்பதாகவும், காற்றாலை மூலம் தமிழ்நாட்டிற்கு போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைத்து வருவதாகவும், நிலுவைத் தொகையான 926 கோடி ரூபாயை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், எனவே இதுகுறித்து பதற்றம் அடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், அமைச்சரோ 70 கோடி ரூபாய் தான் நிலுவைத் தொகை என்கிறார்!

    இருப்பினும், காற்றாலை மின்சாரம் என்பது முற்றிலும் வானிலையை, குறிப்பாக காற்றின் வேகத்தை பொறுத்து கிடைக்கக்கூடியது. கடந்த சில நாட்களாக காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் குறைந்து கொண்டே வருவதாகவும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றாலை மூலம் 28.11 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்ட நிலையில், மின்சாரத் தேவை என்பது 350 மில்லியன் யூனிட் என்ற அளவில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

    மின்சாரத் தேவை என்பது எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம் என்ற நிலையில், ஒரு நாட்டின் பொருளாதாரமே மின்சாரத்தை நம்பியுள்ள நிலையில், எரிசக்தி பரிமாற்றச் சந்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்திற்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்கி, மின் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயத்தை போக்கவும், வருங்காலங்களில் இது போன்ற சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அதிக மூலதனத்துடன் ரெடிமேட் தயாரிப்பு செய்து வருபவர்கள் மட்டும் தொழிலில் நிலையாக உள்ளனர்.
    • காலை 9 மணி முதல் நிறுத்தப்பட்ட மின்சாரம் மதியம் 2 மணிக்குத்தான் வந்தது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் ரெடிமேட் தயாரிப்பு தொழில் முன்பு சிறப்பாக நடந்து வந்தது. 2 வருடங்களாக இத்தொழில் பல்வேறு காரணங்களால் நசிந்து வருகிறது.

    புதியம்புத்தூர் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் துணிகளின் விலையேற்றம், டெய்லர் கூலி உயர்வு போன்ற காரணங்களால் ரெடிமேட் தொழில் தற்சமயம் நலிவடைந்த நிலையில் உள்ளது.

    ரெடிமேட் கடைகளில் வேலை பார்த்தவர்களும் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர். அதிக மூலதனத்துடன் ரெடிமேட் தயாரிப்பு செய்து வருபவர்கள் மட்டும் தொழிலில் நிலையாக உள்ளனர்.

    இந்நிலையில் மின் வாரியத்தினர் சிறு மராமத்து பணி நடைபெறுகிறது என்ற காரணத்தைக் காட்டி அடிக்கடி மின்வெட்டு செய்கின்றனர்.

    சமீபத்தில்தான் முழு மராமத்து பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு செய்திருந்தனர். 24 -ந்தேதி காலை 9 மணி முதல் நிறுத்தப்பட்ட மின்சாரம் மதியம் 2 மணிக்குத்தான் வந்தது.

    மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால் சிறு மராமத்து பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக ரெடிமேட் வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் கூறியதாவது:-

    ரெடிமேட் தொழில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் இருந்து புதியம்புத்தூர் வரை தனி மின் பாதை ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மராமத்து பணிகள் வேறு பகுதியில் நடந்தாலும் புதியம்புத்தூர் மின்சாரம் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே இனிமேல் இதுபோன்ற மின்வெட்டு ஏற்படுத்தாமல் ரெடிமேட் தொழில் சிறந்தோங்க மின்வாரிய அதிகாரிகள் உதவ வேண்டும் என தெரிவித்தார்.

    • மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம்
    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்தது. அணைக்கு 514 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 632 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் மழை சற்று குறைந்திருந்தது.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் கன மழை கொட்டித் தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் கோட்டார் சாலை மீண்டும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, பூதப்பாண்டி, அருமநல்லூர் பகுதிகளில் இன்று காலையில் மழை வெளுத்து வாங்கியது. காற்றும் வீசியதையடுத்து கொல்லன் துருத்தியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. மின்சாரம் தடைபட்டது.

    பண்ணியோடு, காந்தி நகர், உரக்கோணம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியை மேற்கொண்டனர். குருந்தன்கோட்டில் அதிகபட்சமாக 21.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குளச்சல், புத்தன் அணை, இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்துகொண்டே இருக்கிறது.

    இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அருவியில் குளிப்பதற்கும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்தது. அணைக்கு 514 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 632 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை, அனந்தனார் சானலில் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.25 அடியாக உள்ளது. அணைக்கு 204 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.81 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.61 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.60 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 29.04 அடியாகவும் உள்ளது.

    ×