search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெடிமேட்"

    • அதிக மூலதனத்துடன் ரெடிமேட் தயாரிப்பு செய்து வருபவர்கள் மட்டும் தொழிலில் நிலையாக உள்ளனர்.
    • காலை 9 மணி முதல் நிறுத்தப்பட்ட மின்சாரம் மதியம் 2 மணிக்குத்தான் வந்தது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூரில் ரெடிமேட் தயாரிப்பு தொழில் முன்பு சிறப்பாக நடந்து வந்தது. 2 வருடங்களாக இத்தொழில் பல்வேறு காரணங்களால் நசிந்து வருகிறது.

    புதியம்புத்தூர் மட்டுமின்றி அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் துணிகளின் விலையேற்றம், டெய்லர் கூலி உயர்வு போன்ற காரணங்களால் ரெடிமேட் தொழில் தற்சமயம் நலிவடைந்த நிலையில் உள்ளது.

    ரெடிமேட் கடைகளில் வேலை பார்த்தவர்களும் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டனர். அதிக மூலதனத்துடன் ரெடிமேட் தயாரிப்பு செய்து வருபவர்கள் மட்டும் தொழிலில் நிலையாக உள்ளனர்.

    இந்நிலையில் மின் வாரியத்தினர் சிறு மராமத்து பணி நடைபெறுகிறது என்ற காரணத்தைக் காட்டி அடிக்கடி மின்வெட்டு செய்கின்றனர்.

    சமீபத்தில்தான் முழு மராமத்து பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு செய்திருந்தனர். 24 -ந்தேதி காலை 9 மணி முதல் நிறுத்தப்பட்ட மின்சாரம் மதியம் 2 மணிக்குத்தான் வந்தது.

    மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால் சிறு மராமத்து பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக ரெடிமேட் வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் கூறியதாவது:-

    ரெடிமேட் தொழில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் இருந்து புதியம்புத்தூர் வரை தனி மின் பாதை ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மராமத்து பணிகள் வேறு பகுதியில் நடந்தாலும் புதியம்புத்தூர் மின்சாரம் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. எனவே இனிமேல் இதுபோன்ற மின்வெட்டு ஏற்படுத்தாமல் ரெடிமேட் தொழில் சிறந்தோங்க மின்வாரிய அதிகாரிகள் உதவ வேண்டும் என தெரிவித்தார்.

    ×