search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கட்டண உயர்வு"

    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.
    • தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கோவை:

    கோவை இடையர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபா கங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு, பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் கூட சென்னை சென்று, அமைச்சர்களை சந்தித்து பேசினர். ஆனாலும் தொழில் முனைவோரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடைய ர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. அங்கு பணியாற்றியவர்களும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

    மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இதேபோல் கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்று 50 ஆயிரம் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. அன்று மின்தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், இன்று மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்று வருகிறது.

    நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். மேற்கூரை சூரியஒளி ஆற்றல் உற்பத்திற்கு நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பி-யிலிருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல், 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவி டுதல் என்பன 5 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில் 12 கிலோவாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3பியில் இருந்து 3ஏ1 பிரிவின் கீழ் மாற்றுதல் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் அரசு நிறைவேற்றியுள்ளது.

    மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எங்கள் கூட்டமைப்பில் உள்ள 300-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள் சார்பில் இன்று கோவை உள்பட தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

    தொழில் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டியவர்கள் தெருவில் வந்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த கட்டமாக சென்னையில் வருகிற 16-ந் தேதி 25 ஆயிரம் தொழில் முனைவோர் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத போரா ட்டம் நடத்தப்படும். எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மதுரை சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது;-

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 8 ஆண்டுகள் மின் கட்டணம் உயர்வு இல்லை, சொத்து உயர்வு இல்லை. அப்போது மத்திய அரசு நிர்பந்தம் செய்து கூட மக்கள் மீது விலைவாசி ஏற்றத்தை சுமத்தவில்லை.

    தமிழக மக்களின் வாழ்க்கையை உயர்த்திட மக்கள் வாக்களித்தால், இன்றைக்கு மக்கள் மீது விலைவாசி உயர்வை இந்த அரசு சுமத்தி உள்ளது. எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தபோது அங்கு அண்ணாயிசம் இல்லாத தால், அ.தி.மு.க.வை தொடங்கினார். ஆனால் இன்றைக்கு மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து எம்.ஜி.ஆர். பெரியப்பா என்று கூறு கிறார் .

    தி.மு.க.வில் கருணா நிதியை முதலமைச்சராக்க எம்.ஜி.ஆர். உழைத்தார். ஆனால் அவரை கட்சியை விட்டு நீக்கினார்கள். உழைத்தவருக்கு அங்கு இடம் இல்லை. மக்களும் அவரை தூக்கி வைத்துக் கொண்டதால் இதன் மூலம் அ.தி.மு.க.வை தொடங்கினார். 51 ஆண்டுகாலம் அ.தி.மு.க. மக்களுக்காக பொது சேவையில் தன்னை முழுமையாக அர்ப்ப ணித்துக் கொண்டது.

    அண்ணாயிசம், அம்மாயிசம், எம்.ஜி.ஆர்.யிசம் ஆகியவை அ.தி.மு.க.விற்கு தான் சொந்தம். மு.க.ஸ்டாலின் பேச்சை எந்த தொண்டனும் நம்ப மாட்டார்கள். எம்.ஜி.ஆர். கருணாநிதிக்காக உழைத்தார். அவரை கசக்கி எறிந்ததை தாய்மார்கள் இன்னும் மறக்க மாட்டார்கள். இன்றைக்கு எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து தி.மு.க. செல்வாக்கு காணாமல் போய்விட்டது என்பதற்கு இன்றைக்கு மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மழையே பெய்யதாலும் கூட எடப்பாடி கொடுத்த ஒரு உத்தரவுக்காக தொண்டர்கள் குவிந்துள்ள னர். இந்த கூட்டமே விரைவில் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக வர அத்தாட்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஊட்டி

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தி.மு.க அரசைக் கண்டித்தும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ,கூடலூர்சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் குன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, பாசறை மாவட்ட செயலாறர் அக்கீம்பாபு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகரசெயலாளர் நொண்டிமேடு கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மின் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்ட ணத்தை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட அ.தி. மு.க. சார்பில் மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கறுப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். இதில் செல்லூர் ராஜூ அப்போது அவர் பேசியதாவது-

    கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. விபத்தில் ஜெயித்துவிட்டது. 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மாறிவிட்டது.தி.மு.க ஆட்சியில் கட்சியும் கண்ட்ரோல் இல்லை, ஆட்சியும் கண்ட்ரோல் இல்லை. இந்துக்கள் குறித்து ஆ.ராஜா எம்பி தரக்குறைவாக பேசி உள்ளார். இவ்வாறு அவர் பேசியதற்கு கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும்.ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது முதல மைச்சரின் இயலாமை யை காட்டுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டன உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியவர் மு க ஸ்டாலின். 8 வழி சாலை வேண்டாம் என்று கூறி மக்களை திசை திருப்பியவர் மு. க. ஸ்டாலின். ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்ததும் இரட்டை வேடம் போடுகிறார். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வருகிறார்கள். இப்போது மின்கட்டண உயர்வை ஏற்றி மேலும் சுமையை அதிகரித்து உள்ளனர். இதனால் மக்களின் கோபத்துக்கு ஆளாகி உள்ளனர். மக்களுக்காக போராடும் இயக்கம் அ.தி.மு.க. தான். மின் கட்டன உயர்வை ரத்து செய்யும் வரை

    அ.தி. மு.க. தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க.வை நம்பி மக்கள் ஏமாந்து விட்டனர் என்று அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நடிகை விந்தியா ேபசினார்.
    • திருப்பரங்குன்றத்தில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. விடியல் ஆட்சி தருவோம் எனக் கூறி மக்களிடம் பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்களை நிதியை காரணம் காட்டி நிறுத்தி வைத்தது. தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிதி இல்லை என காரணம் காட்டி தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.

    ஆனால் அதே சமயத்தில் ரூ. 100 கோடியில் நூலகம், ரூ. 80 கோடியில் பேனா என அரசு நிதியை தங்களது சொந்த சுயலாபத்திற்காக வீணடித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, தற்போது மின் கட்டண உயர்வு என தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் அரசாக தி.மு.க. உள்ளது. தி.மு.க.வை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விட்டனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் பாரி, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், வட்டச் செயலாளர்கள் பொன்.முருகன், பாலமுருகன், எம்.ஆர். குமார் உள்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
    • தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து நடத்தி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று இரவு திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது. இந்தநிலையில் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. நாளுக்குநாள் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அதிகம் பங்கேற்க செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் 2-வது ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதை எழுச்சியோடு நடத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து கையெழுத்து இயக்கத்தை வரும் 1 மாதகாலம் நடத்தி அதை தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் ஹரிகரசுதன், கருணாகரன், திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், சார்பு அணி செயலாளர்கள் கண்ணபிரான், சிட்டி பழனிசாமி, மார்க்கெட் சக்திவேல், கலைமகள் கோபால்சாமி, காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன், வெள்ளகோவில் நகர செயலாளர் மணி, அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • மின் கட்டண உயர்வுக்கு தடை விதித்து தனி நீதிபதி, உத்தரவிட்டிருந்தார்.
    • இடைக்கால தடையை நீக்கி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.

    தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நூற்பாலைகள் சங்கம் உள்பட பல நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கும் வரை மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மின் கட்டண உயர்வுக்கு எதிரான இடைக்கால தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நூற்பாலைகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இரு நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கில் தங்களது தரப்பு கருத்தை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • முதலாவது கருத்து கேட்பு கூட்டம் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது.
    • மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் எங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். தொழிலும் பாதிக்கப்படும்.

    கோவை,

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி முதலாவது கருத்து கேட்பு கூட்டம் கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. கூட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், தொழில் துறையினர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    கூட்டத்தில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    8 லட்சம் பேர் இந்த விசைத்தறி தொழிலை செய்து வருகிறோம். பல ஆண்டுகளாக கூலி உயர்வு கேட்டு போராடிய நாங்கள் தற்போது தான் கூலி உயர்வினை பெற்றுள்ளோம்.இந்த சமயத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது எங்களுக்கு வேதனையாக உள்ளது. மின்சாரம் கட்டணம் உயர்ந்தால் மீண்டும் செலவுகள் அதிகரிக்கும்.

    ஏற்கனவே இங்கு வர வேண்டிய ஆர்டர்கள் அனைத்தும் குஜராத்துக்கு சென்று விட்டது. இதனால் மிக குறைந்த அளவிலான ஆர்டர்களே வருகின்றனர்.

    தற்போது மின்சார கட்டணத்தையும் உயர்த்தி விட்டால், எங்களிடம் வேலை பார்ப்பவர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டு நாங்களே தொழில் செய்ய வேண்டும். இல்லையென்றால், விசைத்தறியை மூடி சாவியை அரசிடம் ஒப்படைத்து விடுகிறோம். தற்போதைக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கூறும்போது, கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது தான், எங்களது தொழில் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஏற்கனவே சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கே நாங்கள் பெரும் சிரமத்தை சந்தித்தோம்.

    தற்போது மின்கட்டணமும் உயர்த்தப்பட்டால் தொழில் பெருமளவில் பாதிப்படையும். தொழில் நகரான கோவையில் தொழில்கள் பெரும் அளவில் பாதிக்கப்படும்.எனவே தற்போதைக்கு அரசு மின்சார கட்டணம் உயர்த்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனர்.

    மோட்டார் பம்ப் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் கூறும்போது, மோட்டார் பம்ப் உற்பத்திக்கான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜாப்-ஆர்டர்கள் குறைந்துள்ளது. இந்த நிலையில் மின்சார கட்டணத்தை உயர்த்துவதால் எங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். தொழிலும் பாதிக்கப்படும். எனவே அரசு மின்கட்டணம் உயர்த்துவது தற்போதைக்கு வேண்டாம் என்றனர்.

    • தி.மு.க. அரசு மக்களை திணற வைக்கிறது.
    • கைகளில் சிமினி விளக்கேந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    மின்கட்டண உயர்வை கண்டித்துஎஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சிமினி விளக்கேந்தி திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பசீர் அகமது தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா வரவேற்றார். தி.மு.க. அரசின் மக்களை திணற வைக்கும் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்தக்கோரியும், மின்கட்டண உயர்வு முடிவை கைவிடக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சேக் அலாவுதீன் கோரிக்கை குறித்து பேசினார்.மாவட்ட பொதுச்செயலாளர் இதாயத்துல்லா, தொழிற்சங்க தலைவர் முஜிபுர் ரகுமான், பெண்கள் அணி மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, மாவட்ட செயலாளர் அன்வர் பாஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் சிமினி விளக்கேந்தி கலந்து கொண்டனர்.

    ×