நீலகிரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது.அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நீலகிரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஊட்டி

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தி.மு.க அரசைக் கண்டித்தும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க சார்பில் குன்னூரில் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அமைப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு ,கூடலூர்சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் குன்னூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி, குன்னூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஹேம்சந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, பாசறை மாவட்ட செயலாறர் அக்கீம்பாபு, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகரசெயலாளர் நொண்டிமேடு கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com