search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் தடை"

    • வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, லோயர்கேம்ப், ஹைவேவிஸ், மேகமலை, இரவங்கலாறு, உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணப்புரம், மல்லிங்கா புரம், ராயப்பன்பட்டி, கோகிலா புரம், காமயகவுண்டன்பட்டி, ஆனைமலையான்பட்டி,

    அணைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின் பகிர்மான செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    • மின் தடை அறிவிப்பால் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • மின்தடை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

    புளியங்குடி:

    புளியங்குடி பகுதியில் நேற்று (2-ந்தேதி) மின்வினியோகம் ரத்து செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி தொழிற் கூடங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் மின்தடைக்கு ஏற்ப தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொண்டனர். மேலும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று புளியங்குடி பகுதியில் மின் தடை செய்யப்படவில்லை. இதனால் தொழிலாளிகளுக்கு விடுமுறை அளித்திருந்த தொழிற் கூடங்கள், தங்களது பணிகளை மாற்றி அமைத்திருந்த தொழிலாளிகள், விவசாய நிலத்தில் நீர் பாசனத்தை மாற்றி அமைத்து இருந்த விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் குழப்பத்திற்கு ஆளா னார்கள். மின்தடை குறித்து அறிவிப்பு வெளியிட்ட மின்வாரியம், அதனை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு சில தொழிற்கூடங்களுக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும் மின் தடை இல்லை என்ற தகவலை தெரியப்படுத்தி மின்வாரிய ஊழியர்கள் பாரபட்சம் காட்டியுள்ளதாக பெரும்பாலானோர் புகார் கூறினர்.

    இதேபோல் இதற்கு முன்பும் மின்வாரியத்தின் மின்தடை அறிவிப்பில் குளறுபடி நடந்துள்ளது. மின்தடை அறிவிப்பு வெளியிடுவதும், பின்னர்

    ரத்து செய்வதும் புளிய ங்குடி பகுதியில் வாடி க்கையான ஒன்றாகி விட்டது. எனவே இனிவரும் நாட்களில் மின்தடை குறித்து அறிவிக்கும் முன்னரே, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் நிர்வாக காரணங்களை ஆராய்ந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைபுரம்,

    ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், அணை ப்பட்டி, ஆனைமலை யான்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மேற்குறிப்பிட்ட இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது

    கன்னியாகுமரி :

    குழித்துறை உபக்கோட்டத்திற்குட்பட்ட கண்ணுமாமூடு, களியல், அருமனை பிரிவு களுக்குட்பட்ட சில பகுதிகளில் ஆகஸ்ட் 4 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குழித்துறை மின் வினியோக செயற் பொறியாளர் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கண்ணுமாமூடு பிவுக்குட்பட்ட அம்பலக்கா விளை, கொட்டற கோணம், மாங்கோடு, ஐந்துளி, மற்றும் காஞ்சியோடு ஆகிய பகுதிகளிலும், களியல் பிரிவுக்குட்பட்ட பிலாங்காலை, பீலிகோடு மற்றும் ஆலஞ்சோலை ஆகிய பகுதிகளிகளிலும், அருமனை பிரிவுக்குட்பட்ட குஞ்சாலுவிளை, காவூர்கோணம், பாம்புவளச்சான், மற்றும் காரோடு ஆகிய பகுதிகளில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேற்குறிப்பிட்ட இடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போரூர் பகுதியில் முடிச்சூர் எட்டையபுரம், நடு வீரபட்டு, தர்ஷன் கார்டன், பிங்க் ஹவுஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
    • அம்பத்தூர் பகுதியில் திருவேற்காடு புலியம்பேடு, நீதிபதி காலனி, பாலாஜி நகர், பி.எச். ரோடு, ஐஸ்வர்யா கார்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    சென்னை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நாளை 27-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், தாம்பரம், ஐடி காரிடர், கே.கே. நகர், கிண்டி, போரூர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், வியாசர்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    எழும்பூர் பகுதியில் கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு, மருத்துவ கல்லூரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டிபுரம், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    தாம்பரம் பகுதியில் சிட்லப்பாக்கம் ராகவேந்தரா சாலை, எம்.எம்.டி.ஏ. நகர், திருமுருகன் சாலை பள்ளிக்கரணை ஐஐடி காலனி, ஆறுமுகம் நகர், வி.ஜி.பி. சாந்தி நகர், இன்ஜினீயர்ஸ் அவென்யூ, மீனாட்சி நகர், செந்தில் நகர் பல்லாவரம் காவல் நிலையம், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சர்ச் ரோடு, இந்திரா காந்தி ரோடு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு சித்தலாப்பாக்கம் மகேஸ்வரி நகர், விஜயாபுரம், டி.வி. நகர், மாம்பாக்கம் மெயின் ரோடு, சாஸ்தா நகர், கோவிலஞ்சேரி, நூத்தஞ்சேரி இணைப்பு சாலை, மேடவாக்கம் மெயின் ரோடு, பவானி நகர், ஐஸ்வர்யா கார்டன் பெருங்களத்தூர் மங்கள் அப்பார்ட்மென்ட், ஜி.கே.எம். காலேஜ் ரோடு, ஜெய் வாட்டர், கே.கே. நகர், பெருமாள்புரம், எஸ்.வி. பார்ம்ஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    ஐ.டி. காரிடர்

    ஐ.டி. காரிடர் பகுதியில் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், வ.உ.சி. தெரு, பி.டி.சி. குடியிருப்பு, சக்தி கார்டன், சி.டி.எஸ், ஒக்கியம்பேட்டை, கண்ணகி நகர், டி.என்.எஸ்.சி.பி காரப்பாக்கம் ஐ.ஏ.எஸ் காலனி, எம்.ஜி.ஆர். தெரு சிறுச்சேரி சிப்காட் புதுபாக்கம் மெயின் ரோடு, எம்.ஆர். ராதா சாலை பெருங்குடி வீரமணி சாலை, பாலராஜ் நகர், சந்தோஷ் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    கே.கே. நகர்

    கே.கே. நகர் பகுதியில் சின்மையா நகர் சாய் நகர் அனெக்ஸ், காளியம்மன் கோயில் தெரு, சாய்பாபா காலனி, ரத்னா நகர், கம்பர் தெரு, காந்தி நகர் விருகம்பாக்கம் வாரியர் தெரு, இந்திரா நகர், ராஜிவ் காந்தி நகர், ஜெயின் அப்பார்ட்மென்ட், பாலாஜி நகர், தசரதபுரம் எஸ்.பி.ஐ. காலனி 1, 2, 3 மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    கிண்டி பகுதியில் பரங்கிமலை மாங்காளியம்மன் ஆர்ச், பூந்தோட்டம் 2, 3 மற்றும் 4வது தெரு, நந்தம்பாக்கம், நசரத்புரம், காரையார் கோவில் நங்கநல்லூர் வோல்டாஸ் காலனி, ஐய்யப்பா நகர், எஸ்.பி.ஐ. காலனி மற்றும் அனைத்து பகுதிகள்.

    போரூர் பகுதியில் முடிச்சூர் எட்டையபுரம், நடு வீரபட்டு, தர்ஷன் கார்டன், பிங்க் ஹவுஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    ஆவடி பகுதியில் சாந்திபுரம், பாலாஜி நகர், மணிகண்டபுரம், கலைஞர் நகர் திருமுல்லைவாயில் ஐஸ்வர்யம் நகர், செல்வி நகர், சிவா கார்டன், ஜெயலட்சுமி நகர், அலமாதி பாபா கோவில், வேல்டெக் சந்திப்பு, ஷீலா நகர், மோராய் எஸ்டேட் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    அம்பத்தூர் பகுதியில் திருவேற்காடு புலியம்பேடு, நீதிபதி காலனி, பாலாஜி நகர், பி.எச். ரோடு, ஐஸ்வர்யா கார்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    மாதவரம் பகுதியில் சி.எம்.பி.டி.டி. ஜி.என்.டி ரோடு, சிவா கணபதி நகர், ஜவஹர்லால் நேரு 200 அடி ரோடு, ஏரிக்கரை, அருண் உணவகம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள்.

    வியாசர்பாடி பகுதியில் ஓ.எச்.பி எஸ்.என் செட்டி தெரு, நியூ அமர்ஜிபுரம், நியூ காமராஜ நகர், புது மனைக்குப்பம் மசூதி, எம்.எல்.ஏ. அலுவலகம், சிங்கார வேலன் நகர், பவர் குப்பம், ஓய்.எம்.சி.ஏ. குப்பம் 1 முதல் 12 வது தெரு, ஜி.எம். பேட்டை குடியிருப்பு, ராஜவேலு தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை
    • பொது மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை உப கோட்டத்திற்குட்பட்ட மார்த்தாண்டம், குழித்துறை, அருமனை, களியக்காவிளை, புத்தன்சந்தை, கண்ணுமாமூடு, களியல் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் நாளை (27-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மார்த்தாண்டம் பிரிவுக்குட்பட்ட கொல்லஞ்சி, மாம்பள்ளித்தோட்டம், விரிகோடு மற்றும் மாமூட்டுக்கடை, குழித்துறை பிரிவுக்குட்பட்ட நெடியப்பனவளை, பாறைகுளம், ஆசாரிகுடிவிளை, குலகுழிகுளம் மற்றும் இளம்பிலாந்தோட்டம், அருமனை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சாலுமூடு, தாணிமூடு, ஜெயந்தி காலனி மற்றும் முக்கூட்டுகல், களியக்காவிளை பிரிவுக்குட்பட்ட சமுதாயப்பற்று, மலையடி, மலைகோயில் மற்றும் மூவோட்டுகோணம், புத்தன்சந்தை பிரிவுக்குட்பட்ட தெற்றிகுழி, மேக்கேதட்டுவிளை, மணலுக்காலை மற்றும் அம்பேற்றின்காலை, கண்ணுமாமூடு பிரிவுக்குட்பட்ட மேழக்கோடு, வெட்டுக்குழி மற்றும் குருவிக்குந்நு, களியல் பிரிவுக்குட்பட்ட ஆலஞ்சோலை, மருதம்பாறை, பத்துகாணி, ஆறுகாணி மற்றும் அணைமுகம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மின் தடை நாட்களில் பொது மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என குழித்துறை மின்விநியோக செயற்பொறி யாளர் தெரிவித்துள்ளார்.

    • கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை (19ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொடைக்கானல் சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் நாளை (19ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, கூக்கால், பழம்புத்தூர், குண்டுப்பட்டி, கோம்பைக்காடு, வில்பட்டி, பெருமாள்மலை, பி.எல்.செட், ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பாச்சலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • 11-ந் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
    • மருதூர் துணை மின் நிலையம் மற்றும் பவானி பேரேஸ் துணை மின் நிலையங்களிலும் 11-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    கோவை,

    பெரியநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வருகிற 11-ந் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை, நரசிம்ம நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக கு.வடமதுரை மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல மருதூர் துணை மின் நிலையம் மற்றும் பவானி பேரேஸ் துணை மின் நிலையங்களிலும் 11-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளது.

    தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சி பாளையம், கன்னார்பா ளையம், காளட்டியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு காபி கடை, சமயபுரம், பத்திகாளியம்மன்கோவில், நல்லித்துறை, தேக்கம்பட்டி, நஞ்சைய கவுண்டன் புதூர், கெண்டேபாளைம், தொட்ட தாசனூர், தேவனாபுரம் பகுதியில் மின் தடை ஏற்படும் என மேட்டுப்பா ளையம் மின் வினியோக செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே வண்ணாத்திபாறை துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் பகிர்மான செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது.
    • திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் லேசான மழை பெய்தது. அப்போது நள்ளிரவு 11 மணியளவில் திடீரென மின்னலுடன் கூடிய இடி இடித்தது. இதில் மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. இருந்த போதும் கீழ் மயிலம், ராஜீவ்காந்தி நகருக்கு மின்சாரம் வரவில்லை. இது தொடர்பாக இன்று காலை மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, பலத்த இடி, மின்ன லால் கீழ் மயிலத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது.

    இதனை சரிசெய்ய நடவடி க்கைகள் எடுக்க ப்பட்டு வருகிறது. இன்று மாலை 3 மணிக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என கூறினர். திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ள்ளாயினர்.

    • அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்க தகவல் தெரிவித்தனர். ஆனால் மின்தடை சரி செய்யப்பட வில்லை.
    • 15 மணிநேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.

    புது வண்ணாரப்பேட்டை சுடலைமுத்து தெருவில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்க தகவல் தெரிவித்தனர். ஆனால் மின்தடை சரி செய்யப்பட வில்லை. இன்று மதியம் வரை சுமார் 15 மணிநேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    திருப்பூர் குமார்நகர், சந்தைப்பேட்டை, கலெக்டர் அலுவலக துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    அதன்படி குமார் நகர் துணை மின் நிலையத்துக்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர, டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ்காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம், லட்சுமி நகரில் மின் வினியோகம் இருக்காது.

    சந்தைபேட்டை துணை மின்நிலையத்துக்குட்பட்ட அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம்ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன்மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்ங்காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, தாராபுரம்ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய பகுதிகளிலும்

    கலெக்டர் அலுவலக துணை மின் நிலையத்துக்குட்பட்ட பூம்புகார், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர், தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    ×