search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை தேர்தல்"

    • அரியானா மாநிலத்தின் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.
    • சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு பாஜக, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்தன.

    சண்டிகர்:

    அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய் அக்கட்சியின் வேட்பாளர் அஜய் மாக்கானுக்கு வாக்களிக்காமல் சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்தார். கார்த்திகேய சர்மாவுக்கு பா.ஜ.க, ஜனாயக் ஜனதா கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

    அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற 31 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நிலையில், குல்தீப் பிஷ்னோய் மாற்றி வாக்களித்துள்ளார். மற்றொருவரது வாக்கு ரத்து செய்யப்பட்டது. இதனால் அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது.

    இந்நிலையில், அரியானாவில் கட்சி மாறி வாக்களித்த குல்தீப் பிஷ்னோயை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பதவி உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குல்தீப் பிஷ்னோய் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகாவில் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் பா.ஜ.க. சார்பில் 2 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தேர்வாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.
    • மீதமுள்ள ஒரு இடத்திற்கு காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. 4 இடங்களுக்கு பா.ஜ.க., காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சார்பில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர்.

    பா.ஜ.க. சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், இன்று நடந்த வாக்குப்பதிவின்போது ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஸ்ரீனிவாச கவுடா தங்கள் கட்சி வேட்பாளருக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மாற்றி ஓட்டளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கும். அதனால் அதற்கு ஓட்டு போட்டேன் என தெரிவித்தார்.

    அதேபோல், மற்றொரு ம.ஜ.த. எம்எல்ஏ ரேவண்ணா, தான் ஓட்டளித்த ஓட்டுச்சீட்டை காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளது.

    மாநிலங்களவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ ஒருவர் கட்சி மாறி காங்கிரசுக்கு ஓட்டளித்தது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது.
    • ஏற்கனவே தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று மாலை 4 மணி வரை நடைபெற உள்ள தேர்தலில் எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் 6, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 4, ஹரியானாவில் 2 எம்.பி. இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 4 மாநிலங்களில் உள்ள 16 மாநிலங்களவை இடத்துக்கு 22 பேர் போட்டியிடுவதால் தேர்தல் நடைபெறுகிறது.

    மகாராஷ்டிராவில் 6 இடங்களில் பாஜகவுக்கு 2, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரசிற்கு தலா ஒரு இடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எஞ்சிய ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுவதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது.

    இதேபோல், கர்நாடகாவில் 4 இடத்துக்கு பாஜகவில் 3, காங்கிரஸில் 2, மஜதவில் ஒருவர் என 6 பேர் போட்டியிடுகின்றனர். ராஜஸ்தானில் 4 இடத்துக்கு காங்கிரஸில் 3 பேர், பாஜகவில் ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 5 பேர் போட்டியிடுகின்றனர். அரியானாவில் 2 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸில் தலா ஒருவர், பாஜக ஆதரவுடன் சுயேச்சை என 3 பேர் போட்டியிடுகின்றனர்.

    ஏற்கனவே தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் போட்டியின்றி 41 எம்பிக்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
    • மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    புதுடெல்லி :

    மாநிலங்களவையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு 10-ந்தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

    தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

    ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் பா.ஜனதாவுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும்.
    • கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிடுகிறார்கள்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ஜார்க்கண்ட், அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மேல்சபை எம்.பி.க்களுக்கான தேர்தல் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 16 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்கிறது.

    மகாராஷ்டிரத்தில் 6 இடங்களுக்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் பா.ஜனதாவுக்கு 2 இடம் கிடைப்பது உறுதியாகும். ஆனால் 6-வது இடத்தை பெறுவதில் சிக்கல் உள்ளது. பா.ஜனதா 3 பேரையும், சிவசேனா 2 பேரையும் நிறுத்தி உள்ளது. இதனால் ஒரு இடத்துக்கு போட்டி நிலவுகிறது.

    கர்நாடகாவில் 4 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் 6 பேர் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதா-3, காங்கிரஸ்-2, மதசார்பற்ற ஜனதா தளம் ஒருவர் என களத்தில் உள்ளனர்.

    ராஜஸ்தானில் 4 இடங்களுக்கான ஓட்டுப்பதிவில் காங்கிரஸ் 3 வேட்பாளர்களும், பா.ஜனதா ஒரு வேட்பாளரும், பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சையாக சுபாஷ் சந்திராவும் போட்டியில் உள்ளனர்.

    அரியானாவில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு 3 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மா போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு சந்தேகமாகி உள்ளது.

    4 மாநில மேல்சபை தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ஒவ்வொரு கட்சியும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

    இதற்கிடையே பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனுடன் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளார்.
    பெங்களூரு:

    டெல்லியில் உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவையில் நாடு முழுவதும் காலியாகும் 57 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் கர்நாடகத்தில் 4 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் கான் ஆகியோர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இந்த கடைசி நாளில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

    பா.ஜனதா வேட்பாளர்களான மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் விதான சவுதாவில் சட்டசபை செயலாளர் விசாலாட்சியிடம் மனு தாக்கல் செய்தனர். நிர்மலா சீதாராமன் மனு தாக்கல் செய்தபோது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், சட்டத்துறை மந்திரி மாதுசாமி ஆகியோர் உடன் இருந்தனர். அதேபோல் நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோர் மனு தாக்கல் செய்தபோதும் நளின்குமார் கட்டீல் உள்பட மந்திரிகள் உடன் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் குபேந்திரரெட்டி மனு தாக்கல் செய்தார். அவர் மனு தாக்கல் செய்தபோது, சட்டசபை ஜனதாதளம்(எஸ்) கட்சி துணைத்தலைவர் பண்டப்பா காசம்பூர், ஏ.டி.ராமசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர். சட்டசபையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் இந்த தேர்தல் நடக்கிறது. ஒரு வேட்பாளர் வெற்றி பெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதன்படி பா.ஜனதாவுக்கு 2 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகிவிட்டது. அந்த 3 இடங்களுக்கு பா.ஜனதா வேட்பாளர்கள் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

    4-வது இடத்திற்கு தேவையான வாக்குகள் எந்த கட்சியிடமும் இல்லை. ஆனாலும் அந்த இடத்திற்கு ஆளும் பா.ஜனதா சார்பில் லெகர்சிங்கும், காங்கிரஸ் சார்பில் மன்சூர் கானும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் குபேந்திரரெட்டியும் களம் இறங்கியுள்ளனர். இந்த 3 கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி இன்னொரு கட்சியை ஆதரித்தால் மட்டுமே 4-வது இடத்திற்கான வேட்பாளர் வெற்றி பெற முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் மூன்று கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் 2-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ஜனதா தளம்(எஸ்) மூத்த தலைவர் ரேவண்ணா, 'மாநிலங்களவை தேர்தலில் 4-வது இடத்திற்கு தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமாறு சோனியா காந்தியை தேவகவுடா தொடர்பு கொண்டு பேசி ஆதரவு கேட்டார். ஆதரவு வழங்குவதாக அவர் உறுதியளித்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை குமாரசாமி தொடர்பு கொண்டு பேசி ஆதரவு கேட்டார். அவர் சாதகமான பதிலை கூறினார். மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரிடமும் பேசினோம். ஆனால் காங்கிரஸ் கட்சி இப்போது திடீரென 2-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளது சரியல்ல' என்றார்.

    காங்கிரஸ் மேலிட தலைவர்கள், பா.ஜனதாவை தோற்கடிக்கும் நோக்கத்தில் மதசார்பற்ற கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்கும் மனநிலையில் இருந்தாலும், அதற்கு இங்குள்ள முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கர்நாடகத்தை பொறுத்தவரையில் தென் கர்நாடக பகுதியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. சமீபகாலமாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரசையும், சித்தராமையாவையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு வழங்கவே கூடாது என்பதில் சித்தராமையா பிடிவாதமாக உள்ளார். அவரது வற்புறுத்தலின் பேரிலேயே காங்கிரஸ் 2-வது வேட்பாளரை களம் இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 4-வது இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை பா.ஜனதா ஆதரித்தால் அக்கட்சி வெற்றி பெறும். ஜனதா தளம்(எஸ்) கட்சியை ஆதரிக்கும் மனநிலையில் பா.ஜனதா இல்லை என்றே சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடகத்தில் மாநிலங்களவை தேர்தலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (புதன்கிழமை) மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.

    கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பா.ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதனுடன் தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்துள்ளார். அதில் வருமான வரி தாக்கல் செய்த விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 85 ஆயிரத்து 580, 2017-18-ம் ஆண்டு ரூ.6 லட்சத்து 16 ஆயிரத்து 630, 2018-19-ம் ஆண்டு ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 250, 2019-20-ம் ஆண்டு ரூ.10 லட்சத்து 38 ஆயிரம், 2020-21-ம் ஆண்டு ரூ.8 லட்சத்து 8 ஆயிரம் வருமானம் கிடைத்ததாக கூறியுள்ளார்.

    தனக்கு எதிராக நிலுவையில் எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் ரூ.45 லட்சத்து 4 ஆயிரத்து 479 டெபாசிட் செய்துள்ளார். கையிருப்பு தொகை ரூ.17 ஆயிரத்து 200. ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வங்கி தனிநபர் கடன் பெற்றுள்ளார். ஒரு ஸ்கூட்டர் உள்ளது. அதன் மதிப்பு ரூ.28 ஆயிரத்து 200 ஆகும். ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 315 கிராம் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளன. அவரிடம் மொத்தம் ரூ.63 லட்சத்து 39 ஆயிரத்து 196 அளவுக்கு அசையும் சொத்துகள் உள்ளன.
    அவரிடம் தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் குன்ட்லூர் கிராமத்தில் 4,806 சதுர அடி நிலம் உள்ளது. அதன் இன்றைய மதிப்பில் ரூ.17 லட்சத்து 8 ஆயிரத்து 800 ஆகும். அவரிடம் மொத்தம் ரூ.1 கோடியே 87 லட்சத்து 60 ஆயிரத்து 200 அசையா சொத்துகள் உள்ளன. ரூ.30 லட்சத்து 44 ஆயிரத்து 838 அளவுக்கு கடன் உள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு அசையும், அசையா சொத்துகள், டெபாசிட் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 75 ஆகும்.
    லாலு பிரசாத்தின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பயாஸ் அகமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
    பாட்னா :

    பீகாரில் இருந்து விரைவில் காலியாக உள்ள 5 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மாநில எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் பா.ஜனதா, ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சிகள் தலா 2 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதள கட்சிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். லாலு பிரசாத்தின் மகளும், மாநிலங்களவை எம்.பி.யுமான மிசா பாரதி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பயாஸ் அகமது ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் நேற்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அப்போது மிசா பாரதியின் தந்தையும், கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரும் உடன் இருந்தனர். மிசா பாரதி எம்.பி.யின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த மாதம் 7-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
    ×