என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை தேர்தல்"

    • அ.தி.மு.க. மேல் சபை எம்.பி.யாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ஐ.எஸ். இன்பதுரை அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார்.
    • அ.தி.மு.க. சார்பில் இன்னொரு மேல்-சபை எம்.பி.யாக பதவியேற்றுள்ள தனபால் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மேல்-சபையில் எம்.பி.க்களாக இருக்கும் தமிழர்களில் 6 பேரின் பதவிக்காலம் கடந்த 24-ந்தேதி நிறைவுபெற்றது. இதையடுத்து புதிய எம்.பி.க்களாக தி.மு.க.வைச் சேர்ந்த வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் எம்.பி.யாக தேர்வானார். இவர்கள் 4 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் புதிய எம்.பி.க்களாக தேர்வாகி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் 28-ந்தேதி பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) அவர்கள் மேல் சபையில் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு மேல்சபை துணைத் தலைவர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார்.

    அ.தி.மு.க. மேல் சபை எம்.பி.யாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ஐ.எஸ். இன்பதுரை அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளராக இருந்து வருகிறார்.

    நெல்லை மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்த இவர் அ.தி.மு.க.வில் சிறுபான்மை பிரிவு ,தேர்தல் பிரிவு ஆகியவற்றிலும் பொறுப்புக்களை வகித்திருக்கிறார்.

    கடந்த 2023-ம் ஆண்டு முதல் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக பணியாற்றி வரும் இன்பதுரை அ.தி.மு.க. தொடர்பான பல்வேறு வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதாடி வெற்றி தேடி தந்திருக்கிறார்.

    அரசு பிளீடர்,தமிழ்நாடு மின்வாரிய நிலை குழு பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார். தென் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021-ல் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே அங்கு தோல்வியை தழுவினார்.

    இந்த நிலையில் தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி , இன்பதுரையை மேல்சபை எம்.பி.யாக்கி உள்ளார்.

    இதன்மூலம் தமிழகத்தில் மட்டுமே ஒலித்து வந்த வக்கீல் இன்பதுரையின் குரல் இனி டெல்லி மேல் சபையிலும் தமிழகத்தின் குரலாக வலுவாகவே ஒலிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. சார்பில் இன்னொரு மேல்-சபை எம்.பி.யாக பதவியேற்றுள்ள தனபால் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார்.

    திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் 1991-ம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் சொக்கலிங்கம் மற்றும் பா.ம.க. வேட்பாளர் பழனிச்சாமி ஆகிய இருவரையும் தோற்கடித்து 56 சதவீத வாக்குகளை பெற்று தனபால் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த ஜூன் மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.
    • தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

    கமல்ஹாசன், வருகிற 25-ந்தேதி அன்று பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
    • மாநிலங்களவை தேர்தலில் கமல் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது.

    இந்த தேர்தல் வேட்புமனுவில் மொத்தம் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 4, அதிமுக சார்பில் 2, சுயேட்சைகள் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

    உரிய எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனு ஏற்கப்படும் என கூறப்படுகிறது.

    மாநிலங்களவை தேர்தலில் கமல் உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
    • நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

    பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

    இதையடுத்து புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி இம்மாதம் (ஜூன்) 19-ந்தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.

    தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கடந்த 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இன்றுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

    வரும் 12-ந்தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிருந்தால் வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும்.

    • நேற்று வேட்மனுவுடன் சொத்து விவரங்களையும் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ளார்.
    • மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்கள் இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் காலியாகும் பாராளுமன்ற மாநிலங்களவை 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று வேட்மனுவுடன் சொத்து விவரங்களையும் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.49.67 கோடி இருப்பதாகவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்கள் இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார். 

    • பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19-ந்தேதி நடைபெறுகிறது.
    • பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோரை அறிவித்து இருந்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19-ந்தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களாக இன்பதுரை, தனபால் ஆகியோரை அறிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால்

    சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    • தி.மு.க. வேட்பாளர்களாக, பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்சபைக்கு (ராஜ்ய சபா) தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் ஜூன் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த காலி இடங்களை நிரப்புவதற்காக ஜூன் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இருந்து 4 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும் போட்டியிடுகிறார்கள். தி.மு.க. வேட்பாளராக பி.வில்சன் எம்.பி., எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகிய 4 பேரும் போட்டியிடுகிறார்கள்.

    இவர்கள் 4 பேரும் இன்று காலையில் தலைமைச் செயலகம் சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டசபை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். வேட்பு மனு தாக்கல் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்கள் 4 பேருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

    வேட்புமனு தாக்கலின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் எ.வ.வேலு, சேலம் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஜூன் 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஒரு ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி இம்மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது. தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. வழக்கறிஞர் வில்சன், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் நாளை நண்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19-ந்தேதி அன்று நடைபெற உள்ளது.
    • வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் தனபால் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் 19.6.2025 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் தனபால் ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை, நாளை நண்பகல் 12.45 மணிக்கு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்ய உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.
    • தி.மு.க. பொதுக்குழுவில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ்.இன்பதுரை, ம. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி. க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை சீட்டு தருவதாகக் கூறி தனது கடமையை செய்துள்ளது அ.தி.மு.க.

    * அனைத்து கட்சிகளிலும் அரசியல் என்பது தேர்தலை நோக்கிதான் செல்கிறது.

    * 2026 தேர்தலையொட்டி தான் ராஜ்யசபா சீட் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    * தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.

    * 2024 தேர்தலின்போது மாநிலங்களவை சீட் குறித்து எந்த வருடம் என குறிப்பிடாமல்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    * அறிவிக்கும் இடத்தில் அ.தி.மு.க. உள்ளதால் அதன் கடமையை தற்போது செய்துள்ளது.

    * யாருடன் கூட்டணி? என்பது குறித்து ஜனவரி மாதம் நடக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிக்கப்படும்.

    தி.மு.க. பொதுக்குழுவில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
    • தே.மு.தி.க. உடனான கூட்டணி தொடர்கிறது.

    மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதற்கிடையே, புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

    தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மாநிலங்களவை எம்.பி சீட் வழங்குவது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசிய நிலையில், 2026 மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில்,

    தே.மு.தி.க. உடனான கூட்டணி தொடர்கிறது. 2026 மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார்.

    • தி.மு.க.விற்கு 4-ம், அ.தி.மு.க.விற்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
    • தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர்.

    மாநிலங்களவை உறுப்பினர்களான வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. இதற்கிடையே, புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

    தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களாக வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய 3 பேர் அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கு தி.மு.க. ஒதுக்கியது. அதில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பாக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    ×