என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாநிலங்களவை சீட்: யாருடன் கூட்டணி? - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம்
- தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.
- தி.மு.க. பொதுக்குழுவில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஐ.எஸ்.இன்பதுரை, ம. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2026-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலின்போது, அ.தி.மு.க., தே.மு.தி. க.வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை சீட்டு தருவதாகக் கூறி தனது கடமையை செய்துள்ளது அ.தி.மு.க.
* அனைத்து கட்சிகளிலும் அரசியல் என்பது தேர்தலை நோக்கிதான் செல்கிறது.
* 2026 தேர்தலையொட்டி தான் ராஜ்யசபா சீட் அறிவிக்கப்பட்டு உள்ளது.
* தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.
* 2024 தேர்தலின்போது மாநிலங்களவை சீட் குறித்து எந்த வருடம் என குறிப்பிடாமல்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
* அறிவிக்கும் இடத்தில் அ.தி.மு.க. உள்ளதால் அதன் கடமையை தற்போது செய்துள்ளது.
* யாருடன் கூட்டணி? என்பது குறித்து ஜனவரி மாதம் நடக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் அறிவிக்கப்படும்.
தி.மு.க. பொதுக்குழுவில் விஜயகாந்திற்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






