search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசி திருவிழா"

    • பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து வலிய படுக்கை பூஜையில் கலந்து கொள்வார்கள்.
    • வலியப்படுக்கையில் படைக்கப்படும் பதார்த்தங்கள், கனிகள் மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. விழாவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை போன்றவை நடந்தது.

    மாலை 4.15 மணிக்கு மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலையில் இருந்து யானை மீது சந்தன குடம் பவனி புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. 6 மணிக்கு தங்கத்தேர் பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி ஆகியவை நடந்தது.

    ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணி முதல் 8 மணி வரை லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரதாமம், 8 மணிக்கு பக்தி பஜனை, 10 மணிக்கு பெரியபுராணம் தொடர் விளக்கவுரை ஆகியவை நடந்தது. 11 மணிக்கு பொருளாளர் சசீதரன் தலைமையில் சமய மாநாடு, பிற்பகல் 2 மணிக்கு சிந்தனை சொல்லரங்கம், மாலை 4 மணிக்கு இசைச்சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, 6 மணி முதல் 7.30 வரை பரத நாட்டியம், 7.30 மணி வரை சமய மாநாடு ஆகியவை நடந்தது.

    விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாசிக்கொடையின் முக்கிய வழிபாடான மகா பூஜை என்னும் வலிய படுக்கை பூஜை நடக்கிறது. வலியபடுக்கை பூஜை என்பது நள்ளிரவில் அம்மனுக்கு மிகவும் பிடித்த உணவு, கனி வகைகள், இனிப்பு போன்றவற்றை அம்மன் முன்பு பெரும் படையலாக படைத்து வழிபடுவதாகும்.

    இந்த வழிபாடு மாசிக்கொடையின் 6-வது நாளும், மீன பரணிக்கொடை அன்றும், கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் என ஆண்டுக்கு 3 முறை மட்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து இந்த வலிய படுக்கை பூஜையில் கலந்து கொள்வார்கள். வலியப்படுக்கையில் படைக்கப்படும் பதார்த்தங்கள், கனிகள் மறுநாள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    • பொதுபிச்சி அம்மன் கோவில் மாசி திருவிழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே உள்ள மேலநெற்குப்பை தேவர்நகர் பகுதியில் பொதுபிச்சி அம்மன் கிழவன்-கிழவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் "ராவாத்தா" என்னும் மாசி மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள செட்டி ஊரணி குளத்தில் மண் எடுத்து கிழவன்- கிழவி சிலைகள் செய்து காப்பு கட்டி, அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் பெண்கள் கும்மியடித்து வழிபடுவார்கள். விழாவின் 10-ம் நாளில் இப்பகுதியில் பிறந்த பெண்கள் திருமணம் முடித்து எந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும் விழாவிற்கு வந்து கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

    விழாவின் 10ம் நாளான நேற்று இரவு அனைவரும் கூடி கும்மியடித்து கிழவன்- கிழவி கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பொங்கலை சுவாமிக்கு படையலிட்டனர். தொடர்ந்து தொட்டி சேலை கட்டி கோவிலை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோவிலுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஏலம்விடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • நத்தம் மாரியம்மனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

    நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக அடையாள காணிக்கையாக கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகம் செய்து வருகின்றனர்.

    மஞ்சள் பொடி-ராஜ ஆட்சியம்

    நெய்-மோட்சம்

    புஷ்பகவ்யம்-புனிதத்துவம்

    தீர்த்தம்-மன அமைதி தரும்

    அரிசிமாவு-கடன் நீங்கும்

    மாதுளைச்சாறு-அரசு லாபம்

    சந்தனம்-பக்தி ஞானம்

    வாசனை திரவியங்களும், எண்ணெய் காப்பும்-சவுக்கியம்

    பால்-ஆயுள் விருத்தி

    தேன்-விஷ்ணு பரிதி

    கரும்புச்சாறு-உடல்நலம், ஆயுள்பலம்

    எலுமிச்சைசாறு-ஞானம்

    புஷ்பங்கள்-செல்வம் குவியும்

    பன்னீர்-தெய்வ திருப்தி

    • நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.
    • 8-ந்தேதி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் வீதியுலா நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசிப்பெரும் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 10-ம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்பட்டு எட்டு ரத வீதிக ளில் உலா வந்து 7.40 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. தொடர்ந்து 7.50 மணிக்கு சுவாமி தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. தேரை மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தேர் எட்டு ரத வீதிகளில் வலம் வந்து நிலையம் சேர்ந்தது.

    விழாவில் மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கதிரேசன் ஆதித்தன், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷீத் குமார், கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், காயாமொழி முப்பிடாதி அம்மன் கோவில் அக்தார்கள் குமர குருபர ஆதித்தன், ரெங்க நாத ஆதித்தன், ராதாகிருஷ் ணன் ஆதித்தன்,காயா மொழி ஊர் பிரமுகர்கள் எஸ்.எஸ்.ஆதித்தன், ஹெக்டேவார் ஆதித்தன், ஜீவானந்த ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், ஜெயேந்திர ஆதித்தன், குமரேச ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், ஏரல் அருணாசல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி நாடார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    11-ம் திருவிழாவான நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் யாதவர் மண்டகப் படி வந்து அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    12-ம் திருவிழாவான வருகிற 8-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் மண்டபம் சேர்தல், அங்கு இரவு 9 மணிக்கு சுவாமி அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பா டுகளை கோவில் அறங்காவ லர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவ லர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • இன்று பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல், கழுமரம் ஊன்றுதல் மற்றும் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. அன்றைய தினம் இரவு கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் நாளை மறுநாள் காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • நாளை காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
    • 7-ம்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    8-ம் திருவிழாவான நேற்று பகல் 1.45 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மீன லக்னத்தில் தேரோட்டம் நடக்கிறது. மாசி திருவிழா தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    11-ம் திருவிழாவான நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் நடக்கிறது. அங்கு 10.30 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவில் ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதுதல், பரத நாட்டியம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா இன்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இந்த விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், அமைச்சர்கள் சேகர்பாபு, மனோதங்கராஜ் பங்கேற்றனர்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.இக்கோவிலில் மாசிக் கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடத்தின் மாசிக் கொடை விழா இன்று காலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது.5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 8.23 மணியளவில் திருக் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி சங்கர நாராயணன் திருக்கொடியேற்றினார். இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பாரதிய ஜனதா மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், தேவசம் மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்சினி, குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாக இணை ஆணையர் ஞானசேகர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சமய மாநாடு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 86-வது இந்து சமய மாநாடு கொடியேற்றம் நடந்தது. தலைவர் கந்தப்பன் தலைமையில் மாநாடு தொடங்கியது. மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் மாநாட்டை தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றினார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் குத்து விளக்கேற்றி சிறப்புரை ஆற்றினார்.

    மாதா அமிர்தானந்தமயி மடம் குமரி மாவட்ட பொறுப்பாளர் நீலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமம் சுவாமி கருணானந்தஜி மகாராஜ், குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசியுரை ஆற்றினர்.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விஜய் வசந்த் எம்.பி., கேரள முன்னாள் மந்திரி சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நண்பகல் 12 மணியளவில் கருமங்கூடல் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் இல்லத்திலிருந்து அம்மனுக்கு சீர் பொருட்கள் கொண்டு வரவழைக்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.தொடர்ந்து அன்னை பகவதி அன்னதான குழு சார்பில் 30 வது ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை மற்றும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு 8 மணி முதல் பரத நாட்டியம் நிகழ்ச்சி 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.

    • திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 14-ந்தேதி ஒடுக்கு பூஜை நடக்கிறது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. தொடக்க விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழக அமைச்சர்கள் 3 பேர் கலந்து கொள்கிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசிப் பெருந்திருவிழா நாளை ( ஞாயிற்றுக்கிழமை) காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு கணபதி ஹோமம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் போன்றவை நடக்கிறது.

    இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், விஜயதரணி, தளவாய் சுந்தரம், ராஜேஷ்குமார், எம்.ஆர். காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி, துணைத்தலைவர் சுஜி, அரசு செயலாளர்கள் சந்திரமோகன், குமரகுருபரன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாந்த், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், கூடுதல் இணை ஆணையர்கள் திருமகள், ஹரிப்பிரியா, கவிதா, இணை ஆணையர்கள் சுதர்சன், ஜெயராம், ஞானசேகர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழில் அதிபர் கல்யாண சுந்தரம் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9 மணிக்கு அத்தாழபூஜை போன்றவை நடக்கிறது.

    2-வது நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் பக்தர்களால் அம்மனுக்கு பூஜை பொருட்கள் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜையும், 3-வது நாள் முதல் 9-வது நாள் வரை காலை 9.30 மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும் நடைபெறும்.

    3-வது நாள் மாலை 6.15 மணிக்கு கீழ்கரை சடையப்பர் கோவிலில் இருந்து யானைமீது சந்தனகுடம் பவனி, 4-வது நாள் பகல் 11.30 மணிக்கு மேற்கு நெய்யூர் ஊரம்மன் கோவிலில் இருந்தும், 12 மணிக்கு வெட்டுமடை இசக்கி அம்மன் கோவிலில் இருந்தும் யானை மீது சந்தனக்குட பவனி, 5-வது நாள் மாலை 6 மணிக்கு மணவாளக்குறிச்சி மணல் ஆலை வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் யானை மீது களபம் பவனி போன்றவை நடக்கிறது.

    6-வது நாள் பகல் 12 மணி மற்றும் 12.30 மணிக்கு பருத்திவிளை மற்றும் உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்து சந்தனகுடம் பவனி, இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலிய படுக்கை என்ற மகா பூஜை, 7-வது நாள் பாலப்பள்ளம் ஊர்மக்கள் சார்பிலும், மணவாளக்குறிச்சியில் இருந்து மாவட்ட பத்திரப் பதிவுத்துறை சார்பிலும் சந்தனகுடம் பவனி, 8-வது நாள் பகல் 12.30 மணிக்கு நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் இருந்து மாவிளக்கு பவனி, மாலை 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களால் களப பவனி, 9-வது நாள் காலை 11 மணிக்கு உண்ணாமலைக்கடை பட்டாரியார் சமுதாயம் சார்பில் சந்தனகுட பவனி, பகல் 12 மணிக்கு சந்தன காப்பு காவடி, இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடைபெறும்.

    திருவிழாவின் 10-வது நாளான 14-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, காலை 6 மணிக்கு குத்தியோட்டம், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், 12.30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • மலர்களால் ஜொலித்த கோவிலில் நின்று பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மக பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    நேற்று தேவர் சமுதாயம் சார்பில் நடந்த 7-வது நாள் திருவிழாவில் காசி விஸ்வநாதர் கோவில் முகப்பு பகுதியில் இருந்து கோவிலின் உள்ளே இருக்கும் கொடிமரம் வரையிலும் வண்ண வண்ண மலர்களால் கோலமிட்டு இருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் மலர்களால் ஜொலித்த கோவிலில் நின்று தங்களின் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திருவிழாவின் 9-ம் திருநாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலையில் சுவாமி மற்றும் அம்பாள் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. மேலும் திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக வருகிற 6-ந்தேதி தீர்த்த வாரி நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

    • பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை கண்டால் வாழ்வில் செல்வம் செழிக்கும், வளம்சேரும் என்பது ஐதீகம்.
    • நாளை தேர் கடாட்சம் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிர மணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    7-ம் திருவிழாவான நேற்று மாலை சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் செம்பட்டு அணிந்து செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    8-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர், பிரம்மன் அம்சமாக வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    தொடர்ந்து பகல் 11.30 மணிக்கு விஷ்ணு அம்சமாக சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.

    பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகரை கண்டால் வாழ்வில் செல்வம் செழிக்கும், வளம்சேரும் என்பது ஐதீகம். எனவே இதனை காண இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர்.

    9-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10 திருவிழாவான நாளை மறுநாள் (திங்கள் கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மீன லக்னத்தில் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 7-ந்தேதி இரவு 10.30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழாவான 8-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளில் உலா நடைபெற்று இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மாசி திருவிழா வருகிற 12-ந் தேதி நிறைவு பெறுகிறது.
    • கோவில் திருவிழாவுக்கான மொத்த செலவு ரூ.3.22 கோடியாகும்.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில ங்களில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    திருவிழாவின் முதல் நாளில் யானைகள் ஓட்டப்பந்தயம் நடைபெறும். இதற்காக தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகளில் இருந்து குலுக்கல் முறையில் 5 யானைகள் தேர்வு செய்யப்பட்டன.

    இந்த யானைகள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம் கோவில் முன்பு தொடங்கியது. இதில் கோகுல் என்ற 33 வயதான யானை முதலிடம் பிடித்தது.

    யானைகள் ஓட்டத்தில் முதலிடம் பிடித்த கோகுல் யானைக்கு ஒரு தந்தம் இல்லை. ஒரு விழாவில் பங்கேற்ற போது தென்னை மரத்தில் இருந்து ஓலை விழுந்ததில் யானையின் ஒற்றை தந்தம் முறிந்தது.

    இதனால் பக்தர்கள் இந்த யானையை ஒற்றை கொம்பன் யானை என்றே அழைப்பார்கள்.தற்போது இந்த யானைக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது.

    குருவாயூர் கோவிலில் நடைபெறும் மாசி திருவிழா வருகிற 12-ந் தேதி நிறைவு பெறுகிறது. 10 நாட்களும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதற்காக ரூ.2.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவுக்கான மொத்த செலவு ரூ.3.22 கோடியாகும். இதில் அன்னதானத்திற்கான செலவு மட்டும் ரூ.2.31 கோடி.

    அன்னதானத்தின் போது சாதம், ரசம், கூட்டு வகைகள் பரிமாறப்படும். இது தவிர பக்தர்களுக்கு பிரசாதமாக கஞ்சியும் வழங்கப்படும்.

    • திங்கட்கிழமை சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
    • 7-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின், உருகு சட்டசேவை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி சண்முகர், வள்ளி- தெய்வானையுடன் ஸ்ரீபெலி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு தங்கம், வைர ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    காலையில் சுவாமி, அம்பாள்களுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகில் உள்ள பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4.45 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி பின்புறம் சிவ அம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    8-ம் நாளான இன்று (சனிக்கிழமை) அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளுடை அணிந்து, வெண்ணிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மா அம்சமாக பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    காலை 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

    10-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 11-ம் நாளான 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×