search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நத்தம் மாரியம்மன் கோவில்"

    • நத்தம் மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    • மேலும் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்னை செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த மாதம் 20ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி 15நாட்கள் விரதம் தொடங்கினர்.

    அன்றிரவு அம்மன் குளத்தி லிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவி லில் ஸ்தாபிதம் செய்ய ப்பட்டது.

    தொடர்ந்து மாரியம்ம னுக்கு மஞ்சள் திருப்பா வாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தினர்.அன்று அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.நேற்று அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், மாறுவேடமணிந்து வருவது மற்றும் பறவை காவடிகள், போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.

    மேலும் மேளதாளம் முழங்க தாம்பாளத்தில் அம்மனுக்காக அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்க சென்றனர். முன்னதாக கோவில் முன்பாக கழுகு மரம் ஊன்றப்பட்டிருந்தது.

    பின்னர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழியில் பூசாரிகள் இறங்கிய பின்னர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக இறங்கினர்.

    முன்னதாக பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கரும்புதொட்டில்கள் எடுத்தல், அங்கப்பிரத ட்சணம் செய்தல், மாவி ளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்றவைகளும், பூக்குழியில் போடுவதற்காக விறகு கட்டைகளையும், உப்பு, மிளகு பொட்டலங்க ளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

    நேற்று இரவு கோவிலி லிருந்து கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இன்று புதன் கிழமை காலையில் மாரியம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு அலங்கரி க்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்படும்.

    • திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • நத்தம் மாரியம்மனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

    நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக அடையாள காணிக்கையாக கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகம் செய்து வருகின்றனர்.

    மஞ்சள் பொடி-ராஜ ஆட்சியம்

    நெய்-மோட்சம்

    புஷ்பகவ்யம்-புனிதத்துவம்

    தீர்த்தம்-மன அமைதி தரும்

    அரிசிமாவு-கடன் நீங்கும்

    மாதுளைச்சாறு-அரசு லாபம்

    சந்தனம்-பக்தி ஞானம்

    வாசனை திரவியங்களும், எண்ணெய் காப்பும்-சவுக்கியம்

    பால்-ஆயுள் விருத்தி

    தேன்-விஷ்ணு பரிதி

    கரும்புச்சாறு-உடல்நலம், ஆயுள்பலம்

    எலுமிச்சைசாறு-ஞானம்

    புஷ்பங்கள்-செல்வம் குவியும்

    பன்னீர்-தெய்வ திருப்தி

    • இன்று பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காவடி எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல், கழுமரம் ஊன்றுதல் மற்றும் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. அன்றைய தினம் இரவு கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் நாளை மறுநாள் காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து இரவு பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • கடந்த 21ந் தேதி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
    • காப்பு கட்டும் மஞ்சள் துணி ரூ.20க்கு இந்து அறநிலையத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் மாரியம்மன் கோவில், கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்களின் எழுத்தர் முனியாண்டி. தற்போது நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா நடக்கிறது.

    இதையொட்டி கடந்த 21ந் தேதி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். காப்பு கட்டும் மஞ்சள் துணி ரூ.20க்கு இந்து அறநிலையத்துறை சார்பில் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை ஜெராக்ஸ் எடுத்து போலியாக பக்தர்களுக்கு ரசீது வழங்கி ஊழலில் ஈடுபட்டதாக எழுத்தர் முனியாண்டி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து நத்தம் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சூரியனிடம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் சுரேஷ் விசாரணை நடத்தினார். இதில் முனியாண்டி போலி ரசீது பயன்படுத்தியது தெரிய வந்ததால் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் கரந்தமலையில் இருந்து தீர்த்தகுடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடினர். அதன்பிறகு மஞ்சள் ஆடை அணிந்து அங்கிருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சந்தனகருப்பு கோவிலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ண குடைகள், தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக நத்தம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    அதைத்தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த தீர்த்தகுடங்கள் மூலம் கோவில் சன்னதி முன்பு தீர்த்தத்தை தெளித்தனர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். திருவிழாவையொட்டி நேற்று இரவு அம்மன்குளத்தில் இருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் சன்னதி முன்பு ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

    திருவிழாவில் வருகிற 24, 28-ந்தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் நத்தம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வருவார். மேலும் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • பக்தர்கள் கோவிலில் மஞ்சள் காப்புகட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள்.
    • பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மார்ச் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    பின்னர் கொடி மரத்திற்கு பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவின் போது கோவில் செயல்அலுவலர் சூரியன், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, கோவில் பூசாரிகள், விழாக்குழுவினர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி தீர்த்தம் எடுத்து சந்தன கருப்புசுவாமி கோவிலுக்கு வருவார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதனை தொடர்ந்து கோவிலில் மஞ்சள் காப்புகட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். விழாவையொட்டி தினமும் கோவிலில் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வருகிற மார்ச் 7-ந்தேதி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் பூசாரிகளும் செய்து வருகின்றனர். மேலும் பொதுசுகாதாரம், குடிநீர் வசதி ஏற்பாடுகளை பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா, செயல் அலுவலர் சரவணகுமார், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன், மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • மார்ச் 7-ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • மார்ச் 8-ந்தேதி பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது.

    நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி 21-ந்தேதி உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சந்தன கருப்பு சுவாமி கோவிலுக்கு வந்தடைவார்கள். பின்னர் காலை 8.45 மணிக்கு அங்கிருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள்.

    அதையடுத்து கோவிலில் பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதத்தை தொடங்குவார்கள். அன்றையதினம் இரவு அம்மன் குளத்தில் இருந்து, நகர் வலமாக கம்பம் எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிக்கப்படும். பின்னர் 24-ந்தேதி மயில் வாகனத்திலும், 28-ந் தேதி சிம்ம வாகனத்திலும், மார்ச் 3-ந்தேதி அன்ன வாகனத்திலும், மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிசட்டி எடுத்தல், கழுமரம் ஊன்றும் நிகழ்ச்சி மார்ச் 7-ந்தேதி நடக்கிறது. அன்றையதினம் மாலையில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந்தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×