search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹிந்திரா"

    • காஸ்மடிக் அப்டேட்கள் மற்றும் கேபின் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
    • மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

    இந்திய சந்தையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களின் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நான்கு புதிய கார் மாடல்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

     


    மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட்:

    ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 மாடல் இன்னும் ஒன்றிரண்டு மாதங்களுக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் காஸ்மடிக் அப்டேட்கள் மற்றும் கேபின் பகுதிகளில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

     


    டாடா கர்வ்:

    டாடா நிறுவனம் தனது கர்வ் ப்ரோடக்ஷன் வெர்ஷனை வரும் மாதங்களில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த கார் சிங்கில் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் உடன் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என தெரிகிறது.

     


    புதிய தலைமுறை மாருதி சுசுகி ஸ்விஃப்ட்:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மாடல் நீண்ட காலமாக டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், வரும் மாதங்களில் இந்த கார் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி நிகழ்வில் கான்செப்ட் வடிவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இன்டீரியர் அப்டேட் செய்யப்பட்டு, மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினுடன் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

     


    டொயோட்டா அர்பன் குரூயிசர் டைசர்:

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபிரான்க்ஸ் மாடல் தான் டொயோட்டா பிரான்டிங்கில் அர்பன் குரூயிசர் டைசர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. கூப் மாடல் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்றும் இதில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களாக வழங்கப்படும் என தெரிகிறது.

    • 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது.
    • மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. ஆண்டு இறுதியை முன்னிட்டு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை கார்ப்பரேட் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV300 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     


    மஹிந்திரா XUV300 மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் கேமரா, 1-டச் லேன் சேன்ஜ் இன்டிகேட்டர், குரூயிஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் டெயில்கேட் ரிலீஸ் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த காரின் டாப் எண்ட் வேரியண்ட்களில் 6 ஏர்பேக் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் இரண்டு ஏர்பேக் வழக்கமாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டர்போ பெட்ரோல் யூனிட் 129 ஹெச்.பி. பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    • சிறுவனின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    • சிறுவனின் வீடியோவை பார்த்து ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார்.

    மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் காரை 700 ரூபாய்க்கு வாங்க முடியுமா? என்று சிறுவன் ஒருவன் தந்தையிடம் கேட்கும் க்யூட்டான பேச்சு கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், சிறுவனின் வீடியோவை பார்த்து ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார்.

    ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் சிறுவனின் வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், 700 ரூபாய்க்கு மஹிந்திரா தார் காரை விற்கவேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கை ஏற்றுக் கொண்டால் ரொம்ப சீக்கிரமாகவே நாங்கள் திவாலாகிவிடுவோம் என கூறியுள்ளார்.

    • மஹிந்திரா XUV400 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • மஹிந்திரா XUV400 இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடல் XUV400-க்கு டிசம்பர் மாத சலுகையை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் மஹிந்திரா XUV400 மாடலுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 16 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் EC மற்றும் EL என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுக்கு முறையே ரூ. 3 லட்சம் மற்றும் ரூ. 4 லட்சம் வரையிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தொகை வேரியண்ட், விற்பனையகம் மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப வேறுபடும். மேலும் இவை டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும்.

     


    மஹிந்திரா XUV400 மாடல்- 34.5 கிலோவாட் ஹவர் மற்றும் 39.4 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 கிலோமீட்டர்கள் மற்றும் 456 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவன கார் மாடல்கள் விலை மாற்றம்.
    • மஹிந்திரா கார்களின் விலை மாற்றம் அடுத்த ஆண்டு அமலுக்கு வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி மஹிந்திரா எஸ்.யு.வி. மாடல்கள் விலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படுகிறது. எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    பணவீக்கம் காரணமாக உதிரி பாகங்கள் விலை உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்று தெரிகிறது. பணவீக்க சூழலிலும் முடிந்தவரை விலையை கட்டுப்படுத்த முயற்சித்ததாகவும், வேறு வழியின்றிதான் கார்களின் விலையை உயர்த்தும் முடிவை எடுத்ததாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

     


    இந்த அறிவிப்பு மூலம் இந்தியாவில் தனது வாகனங்கள் விலையை உயர்த்தும் புதிய நிறுவனமாக மஹிந்திரா இணைந்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய், எம்.ஜி. மோட்டார்ஸ், ஆடி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது வாகனங்கள் விலை அடுத்த மாதத்தில் இருந்து உயர்த்தப்படும் என அறிவித்தன.

    • மஹிந்திரா நிறுவனம் நவம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
    • மஹிந்திரா நிறுவன எஸ்.யு.வி.க்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக XUV400, XUV300 மற்றும் பொலிரோ நியோ காம்பேக்ட் எஸ்.யு.வி., மராசோ எம்.பி.வி. மற்றும் பொலிரோ எஸ்.யு.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி மற்றும் அக்சஸரீக்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.

    நவம்பர் மாதத்திற்கு மஹிந்திரா XUV400 மாடல் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடியில் கிடைக்கிறது. இது டாப் எண்ட் மாடலுக்கு மட்டுமே பொருந்தும். இதன் EL வேரியண்டிற்கு ரூ. 3 லட்சம் வரையிலான தள்ளுபடியும், EC வேரியண்டிற்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதே போன்று XUV300 மாடலுக்கு ரூ. 1.2 லட்சமும், மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 73 ஆயிரத்து 300, பொலிரோ மாடலுக்கு ரூ. 70 ஆயிரமும், பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 50 ஆயிரமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை காரின் வேரியண்டிற்கு ஏற்ப மாறுபடும். இத்துடன் ஒவ்வொரு நகரம் மற்றும் ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப சலுகைகளிலும் வேறுபாடு இருக்கலாம்.

    • மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
    • முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அக்டோபர் 2023 மாதத்திற்கான வாகனங்கள் விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில், ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் 80 ஆயிரத்து 679 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும்.

    இதன் மூலம் ஒட்டுமொத்த ஆட்டோ விற்பனையில் மஹிந்திரா நிறுவனம் 32 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக மஹிந்திரா நிறுவனம் எஸ்.யு.வி. விற்பனையில் சாதனை படைத்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் 43 ஆயிரத்து 708 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது விற்பனையில் 36 சதவீதம் அதிகம் ஆகும்.

     

    ஏற்றுமதியை பொருத்தவரை மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த யுடிலிட்டி வாகனங்கள் விற்பனை 556 ஆக இருந்தது. மஹிந்திராவின் வர்த்தக பிரிவு வாகனங்கள் உள்நாட்டு விற்பனையில் 25 ஆயிரத்து 715 ஆக பதிவாகி இருக்கிறது. இதேபோன்று பயணிகள் வாகன பிரிவிலும் மஹிந்திரா நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    வருடாந்திர அடிப்படையில், மஹிந்திரா நிறுவனம் இதுவரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 622 பயணிகள் வாகனங்களை உள்நாட்டில் விற்பனை செய்திருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 29 சதவீதம் அதிகம் ஆகும்.

    • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகி வரும் பொலிரோ நியோ மாடல் விலையை மாற்றுகிறது. நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலின் விலை தற்போது ரூ. 1,505 வரை அதிகரித்து இருக்கிறது.

    புதிய விலை விவரம்:

    மஹிந்திரா பொலிரோ நியோ N4 ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்து 300

    மஹிந்திரா பொலிரோ நியோ N8 ரூ. 10 லட்சத்து 16 ஆயிரத்து 500

    மஹிந்திரா பொலிரோ நியோ N10 ரூ. 11 லட்சத்து 37 ஆயிரத்து 499

    மஹிந்திரா பொலிரோ நியோ N10 (O) ரூ. 12 லட்சத்து 15 ஆயிரத்து 499

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் பி.எஸ். 6-2 விதிகளுக்கு பொருந்தும் வகையிலான டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • மஹிந்திரா தார், ஸ்கார்பியோ N, XUV700 போன்ற மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.
    • மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 73 ஆயிபம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. சலுகை மற்றும் தள்ளுபடிகள் XUV400, மராசோ, XUV300, பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. தார், ஸ்கார்பியோ N, XUV700 போன்ற மாடல்களுக்கு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை.

    சலுகைகளின் படி XUV400 மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் EC மற்றும் EL என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 375 மற்றும் 456 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. இவற்றின் முன்புறம் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 150 ஹெச்.பி. பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

     

    மஹிந்திரா மராசோ மாடலுக்கு ரூ. 73 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடல் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 123 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா XUV300 மாடலுக்கு வேரியண்ட்களை பொருத்து ரூ. 46 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 71 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. பொலிரோ நியோ மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. 

    • மஹிந்திரா நிறுவனம் 2026 ஆண்டு வாக்கில் ஐந்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வரும் ஐந்து புதிய எலெக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

    மஹிந்திரா நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஐந்து புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இவை XUV.e8, XUV.e9, BE.05, BE Rall-E மற்றும் BE.07 பெயர்களில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதில் முதல் மாடல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த டீசரில், XUV.e9, BE.05 மற்றும் XUV.e8 மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் புதிய எலெக்ட்ரிக் கார்களில் ஃபிலஷ்-ஃபிட் டோர் ஹேண்டில்கள், எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. இத்துடன் BE.05 மற்றும் XUV.e9 கார்களில் எல்.இ.டி. லைட் பார் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    முன்னதாக மஹிந்திரா நிறுவனம் தனது தார் மற்றும் ஸ்கார்பியோ சார்ந்த பிக்-அப் டிரக் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை காட்சிக்கு வைத்து இருந்தது. இவை தார்.இ மற்றும் குளோபல் பிக்-அப் என்று அழைக்கப்படுகின்றன. இதுதவிர மஹிந்திரா நிறுவனம் தனது தார் (5 கதவுகள் கொண்ட மாடல்) மற்றும் XUV300 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை டெஸ்டிங் செய்து வருகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • மஹிந்திராவின் ஐ.சி.இ. பிரான்டுகள் அனைத்தும் எலெக்ட்ரிக் வடிவம் பெறுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் சுதந்திர தினத்தன்று ஸ்கார்பியோ N சார்ந்த பிக்கப் மாடல் மற்றும் எலெக்ட்ரிக் தார் கான்செப்ட் மாடல்களுடன் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் தார், ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ போன்ற மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என்றும் மஹிந்திரா நிறுவனம் அறிவித்து விட்டது.

    இதுதவிர மஹிந்திரா நிறுவனம் தனது பார்ன்-EV (பிறந்த-EV) எஸ்.யு.வி. மாடல்களுக்கென புதிய லோகோவை அறிமுகம் செய்து இருக்கிறது. மஹிந்தரா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஜெஜுரிக்கர், "எங்களின் அனைத்து ஐ.சி. என்ஜின் பிரான்டுகளையும் எலெக்ட்ரிக் வடிவம் கொடுப்போம்," என்று தெரிவித்தார்.

     

    பவர்டிரெயினை பொருத்தவரை ஸ்கார்பியோ மற்றும் பொலிரோ EV மாடல்களில் RWD செட்டப், டுவின் மோட்டார்கள் வழங்கப்படுகிறது. ஸ்கார்பியோ.e மாடலில் AWD வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது. மற்ற வெர்ஷன்கள் அனைத்தும் ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது. இரண்டு எஸ்.யு.வி.-க்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ N மற்றும் பொலிரோ போன்ற மாடல்கள் தொடர்ந்து ஐ.சி. என்ஜின் வடிவிலும் விற்பனை செய்யப்படும். இந்த மாடல்கள் இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனத்திற்கு அதிக விற்பனையை ஈட்டிக்கொடுக்கின்றன.

    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடல் தற்போது ஐந்து வித வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய XUV300 மாடலின் W8 (O) AT வேரியன்ட் டாப் எண்ட் மாடலாக இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 மாடலின் இரண்டு புதிய வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இவை W2 மற்றும் W4 என்று அழைக்கப்படுகின்றன. புதிய மஹிந்திரா XUV300 மாடல்களின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகின்றன. புது வேரியன்ட்களின் மூலம் மஹிந்திரா XUV300 மாடல் W2, W4, W6, W8 மற்றும் W8 (ஆப்ஷனல்) என ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    இவற்றில் மஹிந்திரா XUV300 மாடலின் W4 வேரியன்ட்-இல் சன்ரூஃப், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. W4 டர்போ ஸ்போர்ட் வேரியன்ட் விலை ரூ. 9 லட்சத்து 29 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இதில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த என்ஜின் 129 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை ஐந்து நொடிகளுக்குள் எட்டிவிடும். முன்னதாக இந்த என்ஜின் W6 வேரியன்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போதைய புது வேரியன்ட்கள் மூலம் மஹிந்திரா XUV300 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் W8 (O) AT வேரியன்ட் விலை ரூ. 14 லட்சத்து 59 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ×