search icon
என் மலர்tooltip icon

    கார்

    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் டீசரை வெளியிட்ட மஹிந்திரா
    X

    புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களின் டீசரை வெளியிட்ட மஹிந்திரா

    • மஹிந்திரா நிறுவனம் 2026 ஆண்டு வாக்கில் ஐந்து எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வரும் ஐந்து புதிய எலெக்ட்ரிக் கார்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.

    மஹிந்திரா நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஐந்து புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இவை XUV.e8, XUV.e9, BE.05, BE Rall-E மற்றும் BE.07 பெயர்களில் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

    இதில் முதல் மாடல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த டீசரில், XUV.e9, BE.05 மற்றும் XUV.e8 மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இதில் புதிய எலெக்ட்ரிக் கார்களில் ஃபிலஷ்-ஃபிட் டோர் ஹேண்டில்கள், எல் வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. இத்துடன் BE.05 மற்றும் XUV.e9 கார்களில் எல்.இ.டி. லைட் பார் மற்றும் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    முன்னதாக மஹிந்திரா நிறுவனம் தனது தார் மற்றும் ஸ்கார்பியோ சார்ந்த பிக்-அப் டிரக் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை காட்சிக்கு வைத்து இருந்தது. இவை தார்.இ மற்றும் குளோபல் பிக்-அப் என்று அழைக்கப்படுகின்றன. இதுதவிர மஹிந்திரா நிறுவனம் தனது தார் (5 கதவுகள் கொண்ட மாடல்) மற்றும் XUV300 ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை டெஸ்டிங் செய்து வருகிறது.

    Next Story
    ×