search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை"

    • குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார்.
    • இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுப்பேன். விசைத்தறி, கைத்தறி கூலி தொழிலாளர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன்.

    பொதுமக்கள் உங்கள் பிரச்சினைகளை, சமூக விரோத செயல்கள் குறித்த தகவல்களை என்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
    • முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறை மாவட்டத்தில் செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா, முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. போதைப்பொருள் என்பது வாழ்க்கையை சீரளிக்கும், உடலை அழிக்கக்கூடியது, எதிர்காலத்தை வீணடிக்கும், இந்த போதைப்பழக்கத்தில் உள்ளவர்களை நாம் அனைவரும் ஒன்றிைணந்து திருத்த வேண்டும். குறிப்பாக நீங்கள் முன்னோடியாக இருந்து போதைப் பழக்கத்தில் உள்ளவர்களை அதிலிருந்து விடுபட சொல்லித்தர வேண்டும்.

    அப்படி யாராவது இருந்தால் நல்வழியில் கொண்டு வர முன்வர வேண்டும். உங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக கொண்டுவர நீங்கள் பாடுபட வேண்டும். முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழியை ஒரு நாள், ஒரு வாரம் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

    உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா, தலைமை ஆசிரியை லீமா ரோஸ் மற்றும் 1300-க்கும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தலைைமயில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
    • போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.

    திருவாரூர்:

    முதலமைச்சரால் போதைப்பொருள் ஒழிப்பு திட்டமானது காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தலைைமயில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்தாவது:-

    முதலமைச்சர் ஆணைக்–கிணங்க போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிெமாழியானது எடுத்துக்கொள்ளப்பட்டது.

    போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.

    குடும்பத்தினர், நண்ப ர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். அேதபோன்று, போதைப் பழக்கத்திற்கு பங்களிப்பும் மிக முக்கியமானது.

    போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவ ற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள ப்படும் என தெரிவித்தார்.

    இதில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மண்டல இணை இயக்குநர் (உயர் கல்வித்துறை) எழிலன், உதவி ஆணையர் (கலால்) அழகிரிசாமி,

    திரு.வி.க. அரசு கலை கல்லூரி முதல்வர் கீதா, ஆர்.டி.ஓ. சங்கீதா, தாசில்தார் நக்கீரன், நகர்மன்ற குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளை போதையின் பிடியிலிருந்து காப்பாற்ற பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றார்.
    • பேசும்போது, பான்மசாலா, கஞ்சா, புகையிலை பயன்பாட்டால் 28 வகையான ரசாயனங்கள் உடலில் சேர்வதால் கேன்சர் ஏற்படும், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அரசு போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமலிருக்க, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆலோசனையின் படி திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு பிரச்சார கருத்தரங்கம் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு தலைமையிலும், முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், முன்னிலையிலும் நடைப்பெற்றது.

    நிகழச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழா பேருரையாற்றினார். அப்போது குழந்தைகளை போதையின் பிடியிலிருந்து காப்பாற்ற பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றினார்.

    உணவு பாதுகாப்பு அலுவலர் முதலியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி ஆகியோர் போதையின் தீமை குறித்து கருத்துரையாற்றினார்கள்.

    அவர்கள் பேசும்போது, பான்மசாலா, கஞ்சா, புகையிலை பயன்பாட்டால் 28 வகையான ரசாயனங்கள் உடலில் சேர்வதால் கேன்சர் ஏற்படும், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்படும். போதையினால் மனநல பாதிப்பு, பாலியல் சீண்டல்கள் சமூக சீர்கேடுகள் ஏற்படும். எனவே நாம் ஒன்றிணைந்து போதை யில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றனர்.

    குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், , நகர்மன்ற துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், போதை தடுப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    முன்னதாக நகராட்சி மேலாளர் சிற்றரசு வரவேற்றார், நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார், நிகழ்ச்சியில் அங்கன்வாடி, மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கலந்துக்கொண்டனர்.

    • ஏ.ஆர்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
    • கல்லூரி தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் தலைமையில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் சுமார் 280 மாணவ -மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்லூரி தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் தலைமையில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் சுமார் 280 மாணவ -மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    போதைப் பழக்கத்தின் தீய விளைவுகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கணேஷ்குமார் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • தமிழ்நாட்டில்போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.
    • போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாட்டில் போதைப் பொருளை ஒழிப்பதற்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறார்.அந்த வகையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ளும்படிசட்டமன்ற உறுப்பினர்களுக்கு கைப்பட கடிதம் எழுதினார்.

    மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.அதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ பங்கேற்று உரையாற்றினார்.

    போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்ததோடு, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.இதல் நாகப்ப ட்டினம் நகர்மன்றதலைவர் இரா.மாரிமுத்துஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
    • உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் பகுதியில் உள்ள கல்லூரிகளில் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் அப்பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இதற்கிடையே கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர்தர ரக போதை பொருளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து போதை தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்போது கேரளாவை சேர்ந்த வாலிபர்களும் கல்லூரி மாணவர்களும் சீரகபாடியில் தங்கி இருந்து மொத்தம் பேட்டமையின் என்ற உயர்ரக போதை பொருளை விற்பனை செய்வது தெரிய வந்தது . நேற்று அவர்கள் தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்த போலீசார் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலன் கே பிலிப் (23), பி.இ. 2-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது மாணவர் மற்றும் பி.இ. இறுதி ஆண்டு படித்து வரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த சித்தாரப்பட்டியை சேர்ந்த மாணவர் உள்பட 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர் .

    அப்போது பெங்களூரில் இருந்து உயர்ரக போதை பொருளை வாங்கி வந்து ஒரு கிராம் ரூ.3 ஆயிரம் என கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. கண்ணாடி இழை போன்ற ஒரு கிராம போதை பொருளை கசக்கி பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை போதை இருக்கும் என கூறப்படுகிறது .

    அவரிடம் இருந்து 35 ஆயிரம் மதிப்பிலான போதை பொருள் ,நவீன எடை எந்திரம் மற்றும் போதைப்பொருள் டெஸ்டிங் மெஷின் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களாக இந்த மாணவர்கள் அங்கே போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது . தொடர்ந்து 3 பேரிட்மௌம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் 3 பேரின் பிண்ணணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? இவர்கள் சேலம் தவிர வேறு எங்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்களா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • தன்னுடன் வேலை பார்க்கும் தனது உறவினரான சுரேஷ் என்பவரை அழைத்துக்கொண்டு கடந்த 25 -ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.
    • பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் மரக்கட்டையால் சுரேசை தாக்கினார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள சாந்தாங்காடுவெட்டி க்காடு கிராமத்தைச்சேர்ந்தவர் மாணிக்கம். இவர் திருப்பூரி ல்பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். தன்னுடன்வேலை பார்க்கும் தனது உறவினரான நாகையை சேர்ந்த சுரேஷ் (வயது 35) என்பவரை அழைத்துக்கொண்டு கடந்த 25 -ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார்.

    இந்நிலையி இருவருக்கும் இடையே குடி போதையில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டது. இதில்மாணிக்கம் ஆத்திரம் அடைந்து மரக்க ட்டையால் சுரேசை தாக்கி னார். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதையடுத்து மாணிக்கம் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து பட்டுக்கோ ட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது குடும்பத்தினரை எண்ணிப்பார்க்க வேண்டும்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் போைத பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். குமரி மாவட் டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு போதை பொருட்களை ஒழித்து வருகிறார்.

    இந்த நிலையில் சர்வதேச போதை ெபாருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி அவர், ஒரு வீடியோ வெளி யிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26-ந் தேதியன்று உலக போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. இந்த நாளில் போதை பொருட்களை ஓழிப்போம் என முக்கியமாக உறுதி மொழியை அனைவரும் எடுப்போம். ஆரோக்கி யமான சமூதாயத்தை சீரழிப்பதில் முக்கிய காரணமாக இருப்பது போதை பொருட்கள் பழக்கம்.

    ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது குடும்பத்தினரை எண்ணிப்பார்க்க வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் பிற நல்ல வழிகளில் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது. உடற்பயிற்சி, யோகா, புத்தகங்கள் வசிப்பது இப்படி பல வழிகளை இளைஞர்கள் கடைபிடித்து மனதை ஒழுக்கத்துடன் வைத்திருக்க வேண்டும்.

    போதை பொருட்களின் பக்கவிளைவுகள் மிக கொடூரமாக இருக்கும். நமது உடல் ஆரோக்கியம், மனதையும் உருக்குலைக்கும். போலீஸ் சூப்பிரண்டு என்ற முறையில் சொல்கிறேன், போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்கி, அதனை அடியோடு வேறறுக்க வேண்டும்.

    இப்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போதை பொருட்கள் இல்லாத சமூதாயத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி எடுத்து பின்பற்றினால் நமது நாடு அசுர வேகத்தில் தலைசிறந்த நாடாக மாறிவிடும். போதை பொருட்கள் தடுப்பு குறித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • குட்கா மற்றும் கூல் லிப் போன்ற பொருட்களை கடைகளிலிருந்து வாங்கி பயன்படுத்த கூடாது
    • போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்க்கால வாழ்க்கையை இழக்க கூடாது

    கன்னியாகுமரி :

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் புகையிலை போதைக்கு ஆளாகுவதை தடுக்கும் வகையில் குமரி மாவட்ட எஸ்.பி.ஹரி ஹிரண் பிரசாத் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக வி.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ் மாணவர்களிடம் குட்கா மற்றும் கூல் லிப் போன்ற பொருட்களை கடைகளிலிருந்து வாங்கி பயன்படுத்த கூடாது, புகையிலை போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்க்கால வாழ்க்கையை இழக்க கூடாது. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கி பேசினார்.

    உடன் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்

    கொடைக்கானல் அருகே போதையில் மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

    பெருமாள்மலை:

    கொடைக்கானல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 45). இவரது மனைவி சுசிலா (வயது 41). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காமராஜ் தினமும் குடித்து விட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    குடும்ப செலவுகளுக்காக சுசிலா கூலி வேலைக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு வந்த சுசிலாவிடம் காமராஜ் மது குடிக்க பணம் தருமாறு கேட்டார்.

    அவர் பணம் தர மறுக்கவே காமராஜ் அரிவாள் மனையால் தனது மனைவியை வெட்டினார். படுகாயமடைந்த அவர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கொடைக்கானல் போலீசில் சுசிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

    ×