என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏ .ஆர் .ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தாளாளர் டாக்டர் ஜீவகன்அய்யநாதன் தலைமையில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஏ.ஆர்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
- ஏ.ஆர்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
- கல்லூரி தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் தலைமையில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் சுமார் 280 மாணவ -மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்லூரி தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் தலைமையில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் சுமார் 280 மாணவ -மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
போதைப் பழக்கத்தின் தீய விளைவுகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கணேஷ்குமார் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
Next Story






