search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொள்ளாச்சி"

    • ஆயுத பூஜை, காலாண்டு விடுமுறையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

    கோவை

    பொள்ளாச்சி நகரில் மையப்பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

    தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ் இயக்கப்படும்.

    இந்த ஆண்டில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு வரை அவ்வப்போது முகூர்த்த நாட்கள் இருந்ததால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர்களுக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட்டது. பின்னர் கடந்த 2 வாரமாக பஸ் நிலையத்தில் கூட்டம் குறைவால், வெளியூர் பஸ்களிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

    இதற்கிடையே, வரும் 30-ந் தேதியுடன் பள்ளி அரையாண்டு தேர்வு நிறைவடைந்து அக்டோபர் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அந்த நாட்களில் காந்தி ஜெயந்தி விடுமுறையும் அதன்தொடர்ந்து 4 மற்றும் 5-ந் தேதிகளில் சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து விடுமுறைகள் இருப்பதால், வெளியூர் பயணிகள் வசதிக்காக, வரும் 30-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை முதல் 5-ந் தேதி வரை என தொடர்ந்து 5 நாட்களும், வழக்கம்போல் இயக்கப்படுவதை விட, பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதிலும் குறிப்பாக கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருப்பூர், கரூர், ஈரோடு, திருச்சி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 35 பஸ்கள் சிறப்பு பஸ்களாக கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று வால்பாறையில் வசிக்கும் பலரும் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பணியாற்றுவதால், சரஸ்வதி பூஜையையொட்டி வால்பாறைக்கு அக்டோபர் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கும், வெகுதூர பகுதிகளுக்கும் என தினமும் 190 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் வெகுதூர பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

    விசேஷ நாட்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வரும் 30-ந் தேதி வரை பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறையாக இருந்தாலும், சரஸ்வதி பூஜை பண்டிகை இருப்பதால், பெரும்பாலானோர் குடும்ப த்துடன் வெளியூர்களுக்கு செல்வர்.

    இதனால், வெளியூர்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.இந்த முறை சரஸ்வதி பூஜை மற்றும் பள்ளி விடுமுறை என்பதால், 35 பஸ்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    இதேபோன்று கோவையில் இருந்தும் நெல்லை, தென்காசி மதுரை, சேலம், ஊட்டி, உள்பட மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.  

    • இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    ஆனைமலை

    பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது கணவரின் நண்பரான 30 வயதுமதிக்கத்தக்க வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணுடன் வாலிபருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மனைவி மற்றும் நண்பரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தனது குழந்தையுடன் மாயமாகி விட்டார். இளம்பெண்ணின் கணவர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் கோட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளுடன் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகு திக ளில் தொழிலாளர் உதவிஆய்வாளர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
    • முரண்பாடு கண்டறியப் பட்டதொழில் நிறுவனங்களின் மீது விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டது.

    கோவை

    கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் வெளி யிட்ட செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:

    கோவை கூடுதல் தொழிலா ளர் ஆணையாளர் வழிகாட் டுதலின் படியும், இணை ஆணையாளர் அறிவுரையின் படியும் எடையளவு சட்ட விதிகளின் கீழ் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகு திக ளில் தொழிலாளர் உதவிஆய்வாளர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில், பொட்டலபொருட்கள் விதிகளின் கீழ் உரிய பதிவு சான்று பெறாதது. உரிய அறிவிப்பு இல்லாதது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

    இது தொடர்பாக மொத்தம் 51 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், முரண்பாடு கண்டறியப் பட்டதொழில் நிறுவனங்களின் மீது விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனங்க ளுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

    மேலும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் எடைகு றைவு, மறு முத்திரையிடப்ப டாத எடையளவு வைத்திருத் தல் உள்ளிட்டவை தொடர்பாக 105 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடு கண் டறியப்பட்டது. மொத்தம் 156 நிறுவனங் களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடு கண்டறியப்பட்ட 51 தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பொள்ளாச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தார்.

    பொள்ளாச்சி,

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பொள்ளாச்சி வந்தார். அவருக்கு பொள்ளாச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி -கோவை சாலையில் காரில் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது காரில் இருந்து திறந்த வாகனத்தில் ஏறி ஊர்வலமாக வந்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், அமுல்கந்தசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வரவேற்பு அளித்தனர் .

    பொள்ளாச்சி ஜெயராமன், வீரவாள் வழங்கி வரவேற்றார். அதற்குப் பிறகு காந்தி சிலை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    எடப்பாடி பழனிசாமி பேச்பேசை தொடங்கும் போது முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை நினைவு கூர்ந்தார். இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பொள்ளாச்சி வருகிறேன். என்னை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இத்தனை பேர் திரண்டு வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். 

    • பொள்ளாச்சியில், 80 ஆயிரம் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
    • 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.

    கோவை, செப்.8-

    கோவை மாவட்டத்தில், 30 லட்சத்து, 21 ஆயிரத்து, 446 வாக்காளர்கள் உள்ள னர். இதில், 6 லட்சத்து, 20 ஆயிரத்து, 26 வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இன்னும், 24 லட்சத்து, 1,420 வாக்காளர்கள் இணைக்க வேண்டியுள்ளது. மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் அதிகப ட்சமாக, பொள்ளாச்சியில், 80 ஆயிரம், வால்பாறையில், 75 ஆயிரம் வாக்காளர்கள், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    சிங்காநல்லுார் தொகுதியில் மிகவும் குறைவாக, 47 ஆயிரத்து, 282 வாக்காளர்கள் மட்டும் இணைத்துள்ளனர். மாவட்ட அளவில், 20.52 சதவீத வாக்காளர்கள் இணைத்துள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறும்போது,

    100 சதவீதம் தவறில்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படுவதோடு, ஒருவருக்கே 2 பதிவு இருந்தால் காட்டிக் கொடுத்து விடும்.

    இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடலாம். இன்னும் 6 மாதங்கள் அவகாசம் இருப்பதால், அனைத்து வாக்காளர்களின் ஆதார் எண்ணும் இணைத்து விடுவோம் என்றனர்.

    • தலை, கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் வெட்டினர்.
    • வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

     மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த ஜாகீர்உசேன்.

    இவர் தனது வாழை தோட்டத்திற்கு செல்வதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு மைதானம் மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தியாகு, சக்திவேல் ஆகியோர் ஜாகீர்உசேனிடம் மது குடிக்க பணம் கேட்டனர். இதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது திடீரென சக்திவேல், தியாகு இருவரும் ஜாகீர் உசேனை தகாத வார்த்தைகளால் பேசி வாழை இலை அறுக்கும் கத்தியால் ஜாகீர் உசேனின் தலை, கை மற்றும் வலது கால் ஆகிய இடங்களில் வெட்டினர். இதுதொடர்பாக ஜாகீர் உசேன் கொடுத்த புகாரின் பேரில் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சென்னகேசவன் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்.

    இந்த வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி சிவகுமார் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட தியாகுவிற்கு 4 ஆண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், சக்திவேலிற்கு 3 ஆண்டு சிறை தண்டணையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து அவர் தீர்ப்பு கூறினார்.  

    • 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் ஜோன்ஷா (வயது 26). டிரைவர். சம்பவத்தன்று இவரும் கிட்டுப்பிள்ளை வீதயை சேர்ந்த பஸ் டிரைவர் ஜெயராம் (36) ஆகியோர் அந்த பகுதியில் உள்ள சிக்கன் கடை அருேக வைத்து மது குடித்தனர்.

    அப்போது ஜோன்ஷாவிடம் ஜெயராம் நீ முத்துராம் என்பவருடன் பழக கூடாது என கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராம் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஜோன்ஷாவின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் வெட்டினார்.

    அப்போது ஜோன்ஷா, ஜெயராமிடம் இருந்து அரிவாளை பறித்து அவரை திருப்பி வெட்டினார். இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் வெட்டு விழுந்தது. சிறிது நேரத்தில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து 2 பேரும் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • அனைத்து ரக வாழைத்தார்க–ளுக்கும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
    • விஷேச நாட்களையட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் வாரத்தில் 2 நாட்கள் வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை வாங்குவதற்காக கேரள, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

    அவ்வப்போது பருவமழையால், வெளி மாவட்டங்களில் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

    கடந்த மாதம் துவக்கத்தில் வரத்து குறைவாக இருந்தாலும், முகூர்த்த நாட்கள் இல்லாததால் வாழைத்தார் விற்பனை மந்தமாக இருந்துள்ளதுடன், குறைவான விலைக்கு விற்பனையானது.

    தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை விழா களைகட்ட தொடங்கியுள்ளது. இதனால் கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து வாழைத்தார் வாங்கி செல்கிறார்கள். இதனால் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.

    கடந்த வாரத்திலிருந்து முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருந்ததால், அனைத்து ரக வாழைத்தார்க–ளுக்கும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    நேற்று நடந்த ஏலத்தின்போது, சுற்று–வட்டார பகுதியிலிருந்து சுமார் 1900 க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

    8-ந் தேதி ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதால் அனைத்துரக வாழைத்தார்களும் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது.

    இதில்செவ்வாழைத்தார் ரூ.55க்கும், பூவந்தார் ரூ.40க்கும், சாம்ராணி ரூ.40க்கும், மோரீஸ் ரூ.40க்கும், ரஸ்தாளி ரூ.45க்கும், நேந்திரன் ஒருகிலோ ரூ.45க்கும், கேரள ரஸ்தாளி ஒருகிலோ ரூ.50க்கும் என, கூடுதல் விலைக்கு விற்பனையானது.

    அதுபோல்ல, நேற்று தேர்நிலையில் உள்ள மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாழை இலைகட்டுகள், தொடர்ந்து விஷேச நாட்களையட்டி கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கோவை, -

    பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலை யாண்டிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 40). தொழிலாளி. இந்தநிலையில் இவர் கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    சோமசுந்தரம் எப்போதும் வீட்டின் அருகே உள்ள பகவதியம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்று தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று சோமசுந்தரம் வழக்கம்போல தூங்குவதற்கு மண்டபத்திற்கு சென்றார். அங்கு தனது நண்பர் பூபதி என்பவருடன் பேசி கொண்டு படுத்திருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் அங்கு மதுபாட்டிலுடன் வந்தார். பின்னர் மண்டபத்தில் அமர்ந்து மதுகுடித்தார். இதனை பார்த்த சோமசுந்தரம் அந்த வாலிபரிடம் கோவில் மண்டபத்தில் மதுகுடிக்க கூடாது என கண்டித்தார்.

    கொலை வழக்கு

    இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து சோமசுந்தரத்தின் தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இதுகுறித்து கோட்டூர் போலீசார் அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் சோமசுந்தரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரவிச்சந்திரன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(38). காய்கறி வியாபாரி. திருமணமாகவில்லை. சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென சுருண்டு கீேழ விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக ரவிச்சந்திரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஷாஜகான் அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.
    • 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஷாஜகானை ஆற்றில் தேடி வருகின்றனர்.

    கோவை:

    பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 34). கூலி தொழிலாளி. இவர் தனது மாமா சாதிக் என்பவருடன் நேற்று அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.

    அப்போது ஷாஜகானின் காலணி ஆற்றில் விழுந்தது. உடனே அவர் ஆற்றில் குதித்து காலணியை எடுக்க சென்றார். அப்போது அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அதன் பின்னர் அவர் ஆற்றில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சாதிக் வீட்டுக்கு சென்று ஷாஜகானின் தாயாரிடம் நடந்தவற்றை கூறினார். உடனே அவர் ஆனைமலை போலீஸ் நிலையம் சென்று புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் காலணி எடுக்க ஆற்றில் குதித்த ஷாஜகானை தேடி வந்தனர். இரவு நேரம் ஆனதால் நேற்று தேடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இன்று காலை மீண்டும் 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஷாஜகானை ஆற்றில் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்க பணம், 1½ பவுன் தங்க கம்மல் கொள்ளை போனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மானூர் அருகே உள்ள அய்யப்பா காலனியை சேர்ந்தவர் லட்சுமண குமார் (வயது 38). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கிணத்துக்கடவு கோதவாடி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு ெசன்றார். அப்போது லட்சுமண குமார் வீட்டில் உள்ள முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்க பணம், 1½ பவுன் தங்க கம்மல் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய லட்சுமணகுமார் வீட்டின் கதவு உடைப்பட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள குப்புச்சி பாளையத்தை சேர்ந்தவர் அய்யாலுசாமி (48). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது கடையின் பூட்டை உடைத்து 4 பேர் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் கல்லாவில் இருந்த ரூ.2,300 ரொக்க பணம், 5 கிலோ அரிசி மூட்டை 2 ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அய்யாலுசாமி கடைக்கு வந்தார். அவர் கடையில் 4 பேர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தார்.

    மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அவரை பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஊட்டி காந்தலை சேர்ந்த வினித்குமார் (20) என்பது தெரிய வந்தது.

    பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சபரி, இமான், ஹரீஷ் ஆகியோரை ேதடி வருகிறார்கள்.  

    ×