search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசாமி வருகை"

    • அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.
    • விழாவில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

    கிருஷ்ணகிரி,

    அ.தி.மு.க. கொடியேற்று விழா அ.தி.மு.க. பொன் விழா நிறைவு பெற்று 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூளகிரியில் நடக்கிறது.

    சூளகிரி பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்குகிறார்.

    விழாவில் தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    இதனால் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க பேனர்கள், கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளது. சூளகிரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    • பொள்ளாச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தார்.

    பொள்ளாச்சி,

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பொள்ளாச்சி வந்தார். அவருக்கு பொள்ளாச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பொள்ளாச்சி -கோவை சாலையில் காரில் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது காரில் இருந்து திறந்த வாகனத்தில் ஏறி ஊர்வலமாக வந்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், அமுல்கந்தசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வரவேற்பு அளித்தனர் .

    பொள்ளாச்சி ஜெயராமன், வீரவாள் வழங்கி வரவேற்றார். அதற்குப் பிறகு காந்தி சிலை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

    எடப்பாடி பழனிசாமி பேச்பேசை தொடங்கும் போது முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை நினைவு கூர்ந்தார். இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பொள்ளாச்சி வருகிறேன். என்னை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இத்தனை பேர் திரண்டு வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். 

    • அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம்.
    • எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வருகை தர உள்ளார்.

    அதையொட்டி அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து இன்று காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×