search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
    X

    பொள்ளாச்சி அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

    • பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்க பணம், 1½ பவுன் தங்க கம்மல் கொள்ளை போனது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மானூர் அருகே உள்ள அய்யப்பா காலனியை சேர்ந்தவர் லட்சுமண குமார் (வயது 38). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கிணத்துக்கடவு கோதவாடி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு ெசன்றார். அப்போது லட்சுமண குமார் வீட்டில் உள்ள முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்க பணம், 1½ பவுன் தங்க கம்மல் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய லட்சுமணகுமார் வீட்டின் கதவு உடைப்பட்டு பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள குப்புச்சி பாளையத்தை சேர்ந்தவர் அய்யாலுசாமி (48). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது கடையின் பூட்டை உடைத்து 4 பேர் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் கல்லாவில் இருந்த ரூ.2,300 ரொக்க பணம், 5 கிலோ அரிசி மூட்டை 2 ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அய்யாலுசாமி கடைக்கு வந்தார். அவர் கடையில் 4 பேர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர்களில் ஒருவரை மடக்கி பிடித்தார்.

    மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அவரை பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஊட்டி காந்தலை சேர்ந்த வினித்குமார் (20) என்பது தெரிய வந்தது.

    பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சபரி, இமான், ஹரீஷ் ஆகியோரை ேதடி வருகிறார்கள்.

    Next Story
    ×