search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்பட கண்காட்சி"

    • மதுரையில் வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சி நடக்கிறது.
    • இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஊமச்சிகுளத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரை ஊமச்சிகுளம் மேனேந்தலில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த நெடிய பயணம் குறித்த புகைப்படங்களும், மிசா போன்ற அடக்குமுறை காலத்தில் அவர் பங்கேற்ற போராட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறுகின்றன.

    மேலும் மதுரையில் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை காண பள்ளி மாணவர்கள் வருகை தரும் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த புகைப்பட கண்காட்சி பிற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக இருக்கின்ற வகையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் குழந்தைவேல், தீர்மான குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவைத்த லைவர்கள் ஒச்சுபாலு, பாலசுப்பிரமணியன், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாநில தலைமை குழு உறுப்பி னர்கள் தனசெல்வம், ஆறு முகம், மாமன்ற குழு தலை வர் ஜெயராமன், ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், மணிமேகலை, வேட்டையன், வக்கீல் கலாநிதி, இளைஞர் அணி ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் மருதுபா ண்டி, சசிகுமார், ஈஸ்வ ரன், கிருஷ்ணா பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ஜெயராமன், ரேணுகா ஈஸ்வரி, கவுன்சிலர்கள் காளிதாஸ், ரோகிணி பொம்மதேவன், இளைஞர் அணி மூவேந்திரன், மதி வெங்கட், சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சிைய பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
    • முதல்- அமைச்சரால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைக்க ள்ள முதல்-அமைச்சரின் முத்தான திட்டங்கள் குறித்த அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

    இதனை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று திறந்து வைத்தார், ராம நாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதல்-அமைச்சர் முத்தான திட்டங்கள் குறித்த ''ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த புகைப்பட கண்காட்சியில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் முதல்- அமைச்சரால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

    மேலும் முதல்-அமைச்சர் தலைவர்களுடன் சந்தித்த புகைப்படங்கள், தொழில் முதலீட்டாளர்களுடன் சந்தித்த புகைப்படங்கள், தொழில் முதலீட்டருக்கான வெளிநாடு சென்று தலைவர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன அதிபர்களுடன் சந்தித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இதே போல் அரசின் மற்ற துறைகளில் வழங்கப்பட்ட திட்டங்களின் பயன்கள் குறித்து கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி ஆலோசனையின் பேரில் செய்தி-மக்கள் தொடர்பு பணியாளர்கள் புகைப்படகண்காட்சி அரங்கில் நின்று கொண்டு புகைப்பட விளக்கத்தினை பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.

    ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் புகைப்பட கண்காட்சியினை கண்டுகளித்தனர்.

    • தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • பொதுமக்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    நாகர்கோவில்:

    திற்பரப்பு பேரூராட்சிக் குட்பட்ட தும்பக்கோடு பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை யின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.இதுகுறித்து கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு ஏழை, எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், குமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங் கள் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. பொதுமக்கள் இதனை பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்து திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரா்கள் ஏராளமாக உள்ளனா்.
    • 100 சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    திருப்பூர் :

    மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சாா்பில் திருப்பூரில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் தொடா்பான புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி தொடங்கியது. திருப்பூா், கருவம்பாளையத்தில் உள்ள ஏ வி எஸ். மஹாலில் நடைபெற்ற இக்கண்காட்சிதொடக்க விழாவில், தருமபுரி மத்திய தகவல் தொடா்பகத்தின் கள விளம்பர அலுவலா் பிபின் எஸ்.நாத் வரவேற்புரையாற்றினாா்.

    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரா்கள் ஏராளமாக உள்ளனா்.

    நமது நாட்டுக்காக போராடியவா்கள் பலரை நாம் அறியாமல் இருந்தோம். தியாகிகளின் வரலாறு மற்றும் தியாகங்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள இத்தகைய கண்காட்சிகள் அவசியமாகும். இந்த கண்காட்சி மாணவா்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

    இதைத்தொடா்ந்து பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற 14 மாணவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மத்திய அரசின் நலத்திட்டங்களின்கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ. 4.50 லட்சம் வழங்கப்பட்டது. 3 மாணவா்களின் கல்விக் கடனுக்காக ரூ.65.07 லட்சம் வழங்கப்பட்டது.

    இந்தக் கண்காட்சியில் திருப்பூா் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 100 சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்திய அஞ்சல் துறை, கனரா வங்கியின் சுயவேலைவாய்ப்பு நிறுவனம், காச நோய் தடுப்பு, பொது சுகாதாரத் துறை சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி 5-ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரையில் நடக்கிறது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இலவசமாகப் பாா்வையிடலாம்.

    கண்காட்சி தொடக்க விழாவில் திருப்பூா் மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா், மத்திய மக்கள் தொடா்பக தொழில்நுட்ப உதவியாளா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு
    • 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து சென்றனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக, வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக, ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி தமிழ்நாடு என்ற அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி,

    உணவுத் திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. அதன்நிறைவு விழா நேற்று நடந்தது. திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி ஆகியோர், சிறப்பாக அரங்குகள் அமைத்த துறைகளுக்கு கேடயங்களும், கலை பண்பாட்டுத் துறை சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய கலைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.

    அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

    கண்காட்சியை கடந்த 10 நாட்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பார்வையிட்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திமக்கள் தொடர்பு அலுவலர் மோகன், உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் ஜனார்த்தனன் செய்திருந்தனர்.

    • பொதுமக்கள் அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்க ளான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக் கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக் கப்பட்டதை நேரில் பார்வை யிட்டது.

    இன்னுயிர் காப்போம் நம் மைக்காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம். கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினருக்கு நில உரிமை ஆணை வழங்கி யது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலை யங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவி னர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது.

    முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின் சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களில் பணியின்போது கால மானவர்களின் வாரிசுதா ரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இல வச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி யினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ராமநாதபுரத்தில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முஸ்தாரி ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி" அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க திரைப்படம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் திரையிடப்பட்டது.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், , உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முஸ்தாரி ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய திட்டங்கள், அரசின் நல திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பாக புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் மோரமடுகு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது. இதில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த அரசின் புதிய திட்டங்கள், அரசின் நல திட்ட உதவிகள் வழங்கியது தொடர்பாக புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் அரசின் சிறப்பு திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது.
    • இந்த கண்காட்சியை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பார்வையிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமிர்த பெருவிழா 3 நாட்கள் நடந்து வருகிறது. இதில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

    சிவகங்கையில் விடுபட்ட, அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் சிலரின் புகைப்படங்களை சேர்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செல்வமணி, கோபி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
    • நடிகை ஹேமமாலினி எம்.பி. தொடங்கிவைத்தார்

    திருச்சி

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளி–நாட்டு விமான சேவை–கள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களை அதிக அள–விலான பயணிகள் பயன்ப–டுத்தி வருகிறார்கள்.

    இங்கு இந்தியாவின் பெரு–மையை பறைசாற்றும் வகையில் பல்வேறு விதமான புகைப்படம் மற்றும் வீடியோ கண்காட்சிகளை அமைத்து பொது மக்களுக்கு இந்தி–யாவின் பெருமை குறித்து அறியும் வகையில் விமான நிலைய ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.

    அந்த வகையில் இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டே–லின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை திருச்சி–யில் இருந்து விமான மூலம் சென்னை செல்ல இருந்த மாநிலங்களவை உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான ஹேமமாலினி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகள் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி, துணைப் பொது மேலாளர் கோபால–கிருஷ்ணன், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் ஹரிசிங் நயல், முனைய மேலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பெருமையை அறியும் வகையில் புகைப்படங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பய–ணிகள் அனைவரும் பார்த்து ரசித்தனர்.

    • கலெக்டர் அரவிந்த் பேச்சு
    • மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது

    நாகர்கோவில்:

    குழித்துறை நகராட்சிக்கு ட்பட்ட பம்மம் பகுதியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி இன்று நடைபெற்றது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனம ழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க ப்பட்டதை நேரில் பார்வையிட்டது.

    இன்னுயிர் காப்போம்,– நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம்,

    காணி பழங்குடியினர்க ளுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது, மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது,

    முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உணவுத்திட்டம்,

    புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு த்துறையின் சார்பாக அமைக்க ப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
    • இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் இன்று அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது.

    இன்று முதல் மூன்று நாட்கள் வரை நடைபெறும் இந்த கண்காட்சியை கல்யாணசுந்தரம் எம்.பி, துரை சந்திரசேகரன் எம். எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருச்சி மத்திய மக்கள் தொடர்பகம் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் வரவேற்றார். இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வாழ்த்துரை வழங்கினார்.

    இந்த கண்காட்சியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்து சுதந்திரப் போராட்டப் போராட்டத்தில் பங்குபெற்ற ஏ.வி. ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி, வாணியம்மாள், சொர்ணம்மாள், கணபதி, வாட்டாகுடி இரணியன் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக வரலாறு குறித்து அவர்களின் புகைப்படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது.

    இதேபோல் பிரதம மந்திரி முத்ரா திட்டம், கிசான் கிரெடிட் கார்டு திட்டம், வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

    இந்த வரலாறை பார்த்து தெரிந்து கொள்வதற்காக கல்லூரி மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை பார்த்து தெரிந்து கொண்டனர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் சத்தியா, முன்னாள் கவுன்சிலர் வீரையன், ஒன்றிய செயலாளர் முரசொலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய மக்கள் தொடர்பகம் ஆனந்த பிரபு நன்றி கூறினார்.

    ×