என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகைப்பட கண்காட்சியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார்.
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
- அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சிைய பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
- முதல்- அமைச்சரால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அமைக்க ள்ள முதல்-அமைச்சரின் முத்தான திட்டங்கள் குறித்த அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
இதனை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையேற்று திறந்து வைத்தார், ராம நாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்-அமைச்சர் முத்தான திட்டங்கள் குறித்த ''ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி" என்ற தலைப்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த புகைப்பட கண்காட்சியில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் முதல்- அமைச்சரால் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.
மேலும் முதல்-அமைச்சர் தலைவர்களுடன் சந்தித்த புகைப்படங்கள், தொழில் முதலீட்டாளர்களுடன் சந்தித்த புகைப்படங்கள், தொழில் முதலீட்டருக்கான வெளிநாடு சென்று தலைவர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன அதிபர்களுடன் சந்தித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதே போல் அரசின் மற்ற துறைகளில் வழங்கப்பட்ட திட்டங்களின் பயன்கள் குறித்து கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி ஆலோசனையின் பேரில் செய்தி-மக்கள் தொடர்பு பணியாளர்கள் புகைப்படகண்காட்சி அரங்கில் நின்று கொண்டு புகைப்பட விளக்கத்தினை பொதுமக்களுக்கு தெரிவித்தனர்.
ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் புகைப்பட கண்காட்சியினை கண்டுகளித்தனர்.






