search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர போராட்ட வீரா்கள் புகைப்பட கண்காட்சி - ஆர்வமுடன் பார்வையிடும் மாணவர்கள்-பொதுமக்கள்
    X

    சுதந்திர போராட்ட வீரா்கள் புகைப்பட கண்காட்சி - ஆர்வமுடன் பார்வையிடும் மாணவர்கள்-பொதுமக்கள்

    • நாம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரா்கள் ஏராளமாக உள்ளனா்.
    • 100 சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

    திருப்பூர் :

    மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சாா்பில் திருப்பூரில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் தொடா்பான புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி தொடங்கியது. திருப்பூா், கருவம்பாளையத்தில் உள்ள ஏ வி எஸ். மஹாலில் நடைபெற்ற இக்கண்காட்சிதொடக்க விழாவில், தருமபுரி மத்திய தகவல் தொடா்பகத்தின் கள விளம்பர அலுவலா் பிபின் எஸ்.நாத் வரவேற்புரையாற்றினாா்.

    சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நாம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரா்கள் ஏராளமாக உள்ளனா்.

    நமது நாட்டுக்காக போராடியவா்கள் பலரை நாம் அறியாமல் இருந்தோம். தியாகிகளின் வரலாறு மற்றும் தியாகங்கள் குறித்து நாம் அறிந்து கொள்ள இத்தகைய கண்காட்சிகள் அவசியமாகும். இந்த கண்காட்சி மாணவா்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

    இதைத்தொடா்ந்து பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற 14 மாணவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் மத்திய அரசின் நலத்திட்டங்களின்கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ. 4.50 லட்சம் வழங்கப்பட்டது. 3 மாணவா்களின் கல்விக் கடனுக்காக ரூ.65.07 லட்சம் வழங்கப்பட்டது.

    இந்தக் கண்காட்சியில் திருப்பூா் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 100 சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்திய அஞ்சல் துறை, கனரா வங்கியின் சுயவேலைவாய்ப்பு நிறுவனம், காச நோய் தடுப்பு, பொது சுகாதாரத் துறை சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி 5-ந் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரையில் நடக்கிறது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள் இலவசமாகப் பாா்வையிடலாம்.

    கண்காட்சி தொடக்க விழாவில் திருப்பூா் மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் விஜயதனசேகா், மத்திய மக்கள் தொடா்பக தொழில்நுட்ப உதவியாளா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×