சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பார்வையிட்டார்.
சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி
Published on

சிவகங்கை

சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் சார்பில் சுதந்திர தின அமிர்த பெருவிழா 3 நாட்கள் நடந்து வருகிறது. இதில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

சிவகங்கையில் விடுபட்ட, அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் சிலரின் புகைப்படங்களை சேர்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் எம்.எல்.ஏ. வழங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செல்வமணி, கோபி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com