search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்பட கண்காட்சி"

    • பேரணியை இன்று காலை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.
    • வாகனத்தில் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஜூலை 18 தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணியை இன்று காலை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணி பெங்களூர் சாலை வழியாக சென்று மாங்கனி வளாகத்தில் தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்பட கண்காட்சி அரங்கிற்கு சென்றது. அப்போது கலெக்டர் சரயு சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகள் தமிழ்நாடு நாள் குறித்த புகைப்பட கண்காட்சியையும், செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அதிநவீன வீடியோ வாகனத்தில் தமிழ்நாடு நாள் குறித்த குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதையும் பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், வருவாய் கோட்டாட்சியர் பாபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர மன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை சீனிவாசன், துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, வட்டாட்சியர் சம்பத், நகராட்சி அலுவலர்கள், அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1. 11.1956 -ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்தது. இந்த நிலையில் ஜூலை 18- ம் நாள் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. இதனை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை இன்று( 18 ந்தேதி) முதல் வருகிற 23- ந்தேதி வரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கூடுதல்கலெக்டர் மதுபாலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தமிழ்நாடு நாள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இப் பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்பரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்
    • நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள்

    நாகர்கோவில்

    சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்பட கண் காட்சி நடைபெற்றது.

    இதில் முதல்-அமைச்ச ரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியது,

    முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டம், புதிய வேளாண்காடு வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது, காலை உண வுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத் தப்பட்டது.

    இதனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
    • 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகைப்பட கண்காட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்த ப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    • அரசு அருங்காட்சியகத்தில் பழந்தமிழரின் பாரம்பரிய இசை
    • சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக இசை தினத்தை முன்னிட்டு பழந்தமிழரின் பாரம்பரிய இசை கருவிகளின் புகைப்பட கண்காட்சி தொடங்கப் பட்டுள்ளது. மிக தொன்மையான செழித்த இசை பாரம்பரியம் இந்தியா வின் கலாச்சாரத்தில் ஆழ மாக வேரூன்றி உள்ளது. இசை இல்லாத விழாவோ, சடங்கோ ஒன்று கூட கிடையாது.

    வெவ்வேறு தனித்துவ மான பெயர், வடிவம், கட்டுமானம், நுட்பம் மற்றும் தரம் ஆகியவற்றை கொண்ட இசைக்கருவிகள் சுமார் 500-க்கும் மேல் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள் ளன. இந்திய இசை கருவிகள் அடி இசைக் கருவிகள், காற்று இசைக் கருவிகள், நரம்பு இசைக் கருவிகள் என 3 வகையாக பிரிக்கப்ப டுகின்றன.

    இதில் நரம்பு இசைக் கருவிகளுக்கு நீண்ட பாரம்பரியமும் அதில் வகைகளும் உண்டு. மனித வரலாற்றில் அடி இசைக் கருவி ஆதியில் தோன்றிய முதல் இசைக்கருவிகள். அதன் பின் காற்று இசைக் கருவிகள் தோன்றின. கடைசி யில் நரம்பு இசைக்கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்படும் முறை வாரியாக இசைக் கருவிகள் நாட்டுப்புற இசைக்கருவிகள், போர் இசைக்கருவிகள், கோவில் இசை கருவிகள் மற்றும் செவ்வியல் இசைக் கருவிகள் என 4 வகையாக பிரிக்கப்படுகின்றன.

    செவ்வியல் இசை கர்நா டக இசை, ஹிந்துஸ்தானி இசை என 2 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. சுரக்காய், மூங்கில், பிரம்பு, பலாமரம், கட்டு மரங்கள் கருங்காலி, செம்மரம் மண் பாண்டம், கன்று செம்மரி, எருமை மற்றும் உடுப்பு தோல், வெள்ளி, வெண்கலம், பித்தளை, தாமிரம், இரும்பு ஆகியவை இசைக்கருவி களின் பல்வேறு பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட் டன. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பழந்தமி ழர்களின் தொல் இசை கருவியான செங்கோட்டு யாழ், எருது யாழ், விற்குடி யாழ், மயில் யாழ் போன்ற பல்வேறு இசை கருவிகளின் புகைப்படங்களை இக்கண் காட்சியில் காணலாம்.

    நேற்று தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியினை மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கண்காட்சி ஜூலை மாத இறுதி வரை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் (கூடுதல் பொறுப்பு) சத்திய வள்ளி தெரிவித்து உள்ளார்.

    • கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
    • 21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செல்வி, தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மக்கள் தொடர்பாக புதுச்சேரி கள அலுவலக துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார்.சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, 

    கடந்த ஆண்டு தமிழகம், புதுவை, அந்தமான் ஆகிய இடங்களில் 73 நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அரசின் மக்கள் நலன் திட்டங்கள் மக்களை சென்றடைவது மற்றும் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றது. இந்த ஆண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கிறது. இவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வருங்கால சந்ததியினர் வாழ தகுயில்லாத சூழ்நிலைஉருவாகும். மேலும் மாணவர்கள் அனைவரும் பாடபுத்தகத்துடன் பொது அறிவு புத்தகங்களையும் சேர்த்து படித்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல வேலைக்கு செல்ல முடியும். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசுகையில், 

    21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். இவற்றை மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு குடும்ப உறுப்பினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த படிப்பும், பொது அறிவையும் வளர்த்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழலாம் உடல் ஆரோக்கியம் மற்றும் படிப்பு ஆகிய இரண்டும் இருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம் என கூறினார். முன்னதாக மாவட்ட கலெக்டர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
    • ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியை பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தொடங்கி வைத்தார்.

    அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணியை பா.ஜ.க.வினர் தொடங்கி தீவிரமாக மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து தற்போதே தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

    இதன் ஒரு கட்டமாக இந்த புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், நிர்வாகிகள் முருகன், சங்கீதா, குமரன், பாலமுருகன், நகர் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சவுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • பொதுமக்கள் திரண்டு பார்த்தனர்
    • உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட அண்ணா பஸ் நிலையத்தில் அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்து றையின் சார்பில் புகைப் படக் கண்காட்சி நடைபெற்றது.

    கிராமப்புற மக்களுக்கான அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள், முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டது,

    உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

    பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்
    • தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    உலக பாரம்பரிய நாள் நினைவு சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான உலக நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இது கலாச்சார பாரம் பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் உலக பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 -ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    உலக பாரம்பரிய நாளின் முக்கிய நோக்கம், வரலாற்று கட்டிடங்கள், நினைவு சின்னங்கள் மற்றும் தொல் பொருள் தளங்கள் போன்ற கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதாகும்.

    அந்நாளை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரிய தளங்களின் புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.

    யுனெஸ்கோ என்று அழைக்கப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு என்பது நமது வளமிக்க கலாச்சார மற்றும் வரலாற்று வம்சாவளியை பாதுகாக்கும் மற்றும் உலகம் முழுவதும் அமைதியை பரப்பும் ஒரு அமைப்பாகும். இந்த சிறப்பு அமைப்பு உலகெங்கிலும் உள்ள மிகவும் மதிப்புமிக்க மனிதனால் உருவாக்கப்பட்ட புதையல்களை பாதுகாப்பதில் மகத்தான நடவடிக்கைகளை எடுக்கிறது.

    இந்தியாவில் யுனெஸ்கோ 30 உலக பாரம்பரிய தளங்களை பட்டிய லிட்டுள்ளது. அதில் நான்கு தமிழ்நாட்டை சேர்ந்தவை. அவை தஞ்சாவூரில் உள்ள பிரிஹதீஸ்வரர் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஷ்வரர் கோவில், மகாபலிபுரத்தில் உள்ள நினைவு சின்னங்களின் குழு, நீலகிரி மலை ரெயில்வே ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் அவற்றப்பற்றிய விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.

    இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்த கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி கூறுகையில், நம் முன்னோர்கள் விட்டு சென்ற பொருட்களும், இடங்களும் தான் நம் பாரம்பரிய சொத்துக்கள்.

    அவற்றை நாம் பத்திரமாக பேணி பாதுகாக்க வேண்டும் என்கிற உணர்வினை இன்றைய தலைமுறை யினருக்கு தெரிவிப்பதே இந்த கண்காட்சியின் நோக்கம் என்றார்.

    இந்த கண்காட்சியினை இருளப்பபுரம் செப்பீல்டு இனோவெட்டிவ் சி.பி.எஸ்.சி.பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் மாணவர்களுக்கு அருங்காட்சியகம் முழுவதும் சுற்றி காட்டப்பட்டு வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவங்கள் எடுத் துரைக்கப்பட்டன. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி ஏப்ரல் மாதம் முழுமையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரிவித்துள்ளார்.

    • கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி. திட்டம்,
    • புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள்

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை யின் சார்பில் புகைப்படக் கண்காட்சி திங்கள் நகரில் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி. திட்டம், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை முதல்வர் தேரில் பார்வையிட்டது. இன்னுயிர் காப்போம் நம் மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் திட்டம். புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின்போது காலமானவர்களின் வாரி சுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது. காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்தும், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் திங்கள்நகரில் காட்சிப்படுத் தப்பட்டது.

    பல்வேறு திட்டங் கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர் புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண் காட்சி யினை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

    • பட்டிமன்றத்தை சந்தனக்குமார் நடுவராக இருந்து நடத்தினார்.
    • விழாவை தென்காசி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி தென்காசி ஐ.சி.ஐ. பள்ளியில் வைத்து நடைபெற்று வருகிறது. அதில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கம் குறித்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

    நெருங்கி வரும் தமிழக அரசின் ஈராண்டு சாதனையில் மக்கள் மனங்களைக் கவர்ந்தது தொழிற் புரட்சியா? சமூக நலத்திட்டங்களா? என்னும் தலைப்பில் பட்டி மன்றத்தின் நடுவராக பலபத்திர ராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தனக்குமார் தலைமையில் நடைபெற்றது. தொழிற்புரட்சியே எனும் தலைப்பில் தென்காசி முதுகலை தமிழாசிரியர் காளிராஜ், சங்கரன்கோவில் பட்டதாரி ஆசிரியர் உமா ஆகியோரும் சமூக நலத்திட்டங்களே எனும் தலைப்பில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பிச்சையம்மாள். சங்கரன்கோவில் வையாபுரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் மாரிமுத்து ஆகியோரும் பட்டிமன்ற சிறப்புரை ஆற்றினார்கள்.

    விழாவினை தென்காசி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தென்காசி வட்டார நூலகர் பிரம நாயகம், கிளை நூலகர் சுந்தர், மகேஷ் கிருஷ்ணன் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். தென்காசி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் பட்டிமன்றத்தில் பேச்சாளராக கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
    • புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் இலஞ்சி, குற்றாலம், மேலகரம் ஆகிய பேரூராட்சிகளில் தூய்மையான நகரங்களுக்கான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உடன் இணைந்து தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா,சதன் திருமலை குமார் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து மாலையில் தென்காசி ஐ.சி.ஐ. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் நடத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ்,தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, தி.மு.க. நிர்வாகி செங்கோட்டை ரஹீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மகளிர் திட்ட இயக்குனர் குருநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×