கள்ளக்குறிச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி

விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு தமிழ்நாடு அரசு செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகைப்பட கண்காட்சியில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்த ப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகளையும் 400க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com