search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் புகைப்பட கண்காட்சி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

     கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் பார்வையிட்டார்.

    கள்ளக்குறிச்சியில் புகைப்பட கண்காட்சி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
    • 21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 4 நாட்கள் புகைப்பட கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். சுகாதார பணிகள் இணை இயக்குநர் ராஜா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் செல்வி, தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மக்கள் தொடர்பாக புதுச்சேரி கள அலுவலக துணை இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார்.சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,

    கடந்த ஆண்டு தமிழகம், புதுவை, அந்தமான் ஆகிய இடங்களில் 73 நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் அரசின் மக்கள் நலன் திட்டங்கள் மக்களை சென்றடைவது மற்றும் மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றது. இந்த ஆண்டும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் பாதிக்கிறது. இவ்வாறு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வருங்கால சந்ததியினர் வாழ தகுயில்லாத சூழ்நிலைஉருவாகும். மேலும் மாணவர்கள் அனைவரும் பாடபுத்தகத்துடன் பொது அறிவு புத்தகங்களையும் சேர்த்து படித்தால் மட்டுமே வாழ்க்கையில் நல்ல வேலைக்கு செல்ல முடியும். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசுகையில்,

    21 பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடைசெய்துள்ளது. அவற்றை பொதுமக்கள் நடைமுறையில் கடைபிடிக்க வேண்டும். இவற்றை மாணவ, மாணவிகள் தெரிந்து கொண்டு குடும்ப உறுப்பினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த படிப்பும், பொது அறிவையும் வளர்த்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறலாம். சத்தான உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக வாழலாம் உடல் ஆரோக்கியம் மற்றும் படிப்பு ஆகிய இரண்டும் இருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம் என கூறினார். முன்னதாக மாவட்ட கலெக்டர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×