search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதோஷ வழிபாடு"

    • சோழவந்தான், தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

     சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழ வந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி கோவிலில் வைகாசி மாத பிரதோஷ விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திக்கு பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரவிச்சந்திர பட்டர், பரசு ராம சிவாச்சாரியார், அய்யப்பன் ஆகியோர் பூஜைகளை செய்தனர்.

    பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாக னத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் கோவிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர்.

    இந்த வழிபாட்டில் பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத்தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, வள்ளி மயில், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நம்புதாளை கோவிலில் நந்திக்கு அபிஷேகம் நடந்தது.

    இதேபோல திருவேடகம் ஏலவார்க்குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் சோழவந்தானை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெற்றது.

    அதன்படி தொண்டி அருகே நம்புதாளையில் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவாலயமான அன்னபூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் நந்திக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பழங்கள், விபூதி, சந்தனம், அபிஷே கப்பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து உற்சவமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. பெண்கள் பலர் விரதமிருந்து கோவிலை வலம் வந்தனர்.

    பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமி நாதன் ஆகியோர் செய்தி ருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிர சாதமாக வழங்கப்பட்டது.

    தொண்டி அருகே திருவாடானை ஆதிரெத்தி னேஸ்வரர், தீர்த்தாண்ட தானம் சர்வதீர்தேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.

    • சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு லிங்கம் மற்றும் நந்திக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர். சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது.

    தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பி.ஜே.பி. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம்.வி.எம்.குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன் டாக்டர்.மருது பாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி கோவிலிலும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    • சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்:

    குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.இதேபோல், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவ புரீஸ்வரர், மேட்டுமருதூார் ஆரா அமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பெரியபாலம் நதி ஈஸ்வரர், சின்னரெட்டியபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர், தோகை மலை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இடையபட்டி ரத்தினகிரீஸ்வரர், கழுகூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது,

    கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மூலவர் ஆதி மஹாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
    • பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முதலில் நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி வீதி உலா நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது

    இதேபோல் தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • தொண்டி, திருவாடானை, சோழவந்தான் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.



    சோழவந்தான் பிரளயநாதர் கோவில் பிரதோஷ விழாவில் சுவாமி வலம் வந்த காட்சி.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரனேசுவரி சமேத நம்பு ஈசுவரர் கோவிலில் நந்திக்கு பால், பழம், பன்னீர், இளநீர், தயிர், விபூதி, அரிசி மாவு, அபி ஷேக பொடி, பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    உற்சவ மூர்த்தி சுவாமி வீதி உலா நடந்தது. பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, காலபைரவர், நாகநாதர் மற்றும் கல்யாண நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு சர்க்கரைப்பொங்கல், எள் சாதம், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமி நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

    இதேபோல் திருவாடானை ஆதிரத்தினேசுவரர், ஓரியூர் சேயுமானோர், தீர்த்தாண்ட தானம் சர்வ தீர்த்தேசுவரர், தளிர் மருங்கூர் சிவாலயம், தொண்டி சிதம்பரேசுவரர் சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. சனீசுவரலிங்கம் நந்திகேசு வரருக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர்.

    ஏற்பாடுகளை பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில் பட்டி மருததோதைய ஈசுவரர் கோவிலிலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலிலும், தென்கரை அகிலாண்டே சுவரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈசுவரர் கோவிலிலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது.

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ஆதி மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் ஆதி மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு, அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷபூஜை நடந்தது.

    வைகை ஆற்றுகரையில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர் கோவிலில் நந்திக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமி பிரகாரம் வலம்வந்து தீபாராதனை நடந்தது.

    சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திரமவுளீசுவரருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. பரமக்குடி ரோட்டில் உள்ள குறிச்சி வழிவிடு பெரிய நாச்சியம்மன் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர் காசிநந்திக்கு மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.

    மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், இடைக்காட்டூர் ஆழி மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர் கோவில்களிலும் பங்குனி மாத முதல் பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • பவானி சங்கமேஸ்வரர், காசி விசுவநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    • இதில் மூலவருக்கு முன் உள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் காசி விசுவநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    இதில் மூலவருக்கு முன் உள்ள நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. தொடர்ந்து பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    சங்கமேஸ்வரர் கோவிலில் மணிகண்ட குருக்கள், காசி விசுவநாதர் கோவிலில் சிவா சிவாச்சாரியார் ஆகியோர் மூலம் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.

    இதில் பவானி, குமாரபாளையம், காளிங்கராயன் பாளையம், லட்சுமி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர்.

    • சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.
    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    உடுமலை :

    உடுமலையில் சனி பிரதோஷத்தை முன்னி ட்டு உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில், சோழீஸ்வரர் சன்னதியில் சோழீஸ்வரருக்கும், நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

    பிரதோஷ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கே ஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகம் செய்து ரத்தின லிங்கேஸ்வரர் சந்தனக்காப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    எலையமுத்தூர் பிரிவு புவன கணபதி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, ருத்ரப்பா நகரில் உள்ள பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், சிவன் சன்னதி, பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையத்தில் உள்ள சித்தாண்டீஸ்வரர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.குறிச்சிக்கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கேஸ்வரர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது.மடத்துக்கு ளம் கடத்தூரில் அமரா வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அர்ச்சு னேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.கொழுமத்தில் உள்ள தாண்டேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவி ல்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் மற்றும் நந்தியம் பகவானை தரிசனம் செய்தனர்.

    • காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார்.
    • உலகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது. காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில்,அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×