தொண்டி, திருவாடானை, சோழவந்தான் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

தொண்டி, திருவாடானை, சோழவந்தான் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
நம்புதாளை நம்பு ஈசுவரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நம்புதாளை நம்பு ஈசுவரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
Published on

சோழவந்தான் பிரளயநாதர் கோவில் பிரதோஷ விழாவில் சுவாமி வலம் வந்த காட்சி.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரனேசுவரி சமேத நம்பு ஈசுவரர் கோவிலில் நந்திக்கு பால், பழம், பன்னீர், இளநீர், தயிர், விபூதி, அரிசி மாவு, அபி ஷேக பொடி, பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

உற்சவ மூர்த்தி சுவாமி வீதி உலா நடந்தது. பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, காலபைரவர், நாகநாதர் மற்றும் கல்யாண நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு சர்க்கரைப்பொங்கல், எள் சாதம், சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை வாசு, கருப்பசாமி, சுவாமி நாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் திருவாடானை ஆதிரத்தினேசுவரர், ஓரியூர் சேயுமானோர், தீர்த்தாண்ட தானம் சர்வ தீர்த்தேசுவரர், தளிர் மருங்கூர் சிவாலயம், தொண்டி சிதம்பரேசுவரர் சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி சிவன் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. சனீசுவரலிங்கம் நந்திகேசு வரருக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர்.

ஏற்பாடுகளை பா.ஜ.க. விவசாய அணி மாநில துணைத்தலைவர், எம்.வி.எம். குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் மருதுபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் திருவேடகம் ஏடகநாதர் கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவில் பட்டி மருததோதைய ஈசுவரர் கோவிலிலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலிலும், தென்கரை அகிலாண்டே சுவரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈசுவரர் கோவிலிலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலிலும் பிரதோஷ விழா நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com