என் மலர்
நீங்கள் தேடியது "Pralayanathar Temple"
- சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு லிங்கம் மற்றும் நந்திக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர். சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது.
தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பி.ஜே.பி. விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம்.வி.எம்.குழும தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளிமயில், எம்.வி.எம். தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன் டாக்டர்.மருது பாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி கோவிலிலும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.






