search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதோஷ வழிபாடு"

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பகவதி மலையடிவாரத்தில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன் பன்னபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது.

    இதில் ஓம் சக்தி அம்மா கலந்து கொண்டு அம்மன், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்து தீபாராதனை காண்பித்தார்.

    பூஜையில் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளைகள் தலைவர் தமிழ்புகழேந்தி செய்திருந்தார்.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பர மேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவி யங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பர மேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவி

    யங்களால் அபிஷேகம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி

    வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆல யத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வ நாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வட பழனி யாண்டவர் கோவிலில் எழுந்த

    ருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் பிர

    தோஷ விழாவில் கலந்து கொண்டு

    சாமி தரிசனம் செய்தனர். பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுகவனேஸ் வரருக்கும் நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
    • பிரதோஷங்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    சேலம்:

    சேலத்தில் உள்ள பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுகவனேஸ் வரருக்கும் நந்திகேஸ்வர ருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. பிரதோஷங்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    பிரதோஷத்தில் முக்கிய நிகழ்வாக சிவன்-பார்வதி சமேதமாக கோவில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இந்த ஆனி மாதத்தில் கடந்த 1-ந் தேதியும் நேற்றும் சனி பிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
    • சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவில் உள்ளது.

    இங்கு நேற்று ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனையொட்டி நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகளும், மகா தீபாராதனை யும் நடைபெற்றது.

    பின்னர் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கமுதி கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தீஸ்வரருக்கு மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர், திருநீறு, பால், தேன், தயிர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் 500-க்கும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கமுதி மண்டலமாணிக்கத்தில்

    உள்ள அரும்பவளநாயகி சமேத கைலாசநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • சிறப்பு தீபாராதனை நடைபெற்றது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் ேகாவில் மற்றும் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நேற்று நந்திபகவானுக்கு சனிமகா பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நந்திபகவானுக்கு பல்வேறு வகையான பொருட்கள் மூலம் அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோயில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு நடைபெற்றது.இதனை முன்னிட்டு நந்திக்கு 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பா.ஜ.க. விவசாய அணி மாநில செயலாளர் மணிமுத்தையா, கவுன்சி லர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன், தக்கார் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவேடகம் ஏடகநாத சுவாமி கோவிலில் நடந்த வழிபாட்டில் சனி பிரதோஷ சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.

    இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவால வாநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்க ளில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    • பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம்

    பெரம்பலூர்

    சனி பிரதோஷத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சனி பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் நல்லது நடக்கும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு நேற்று மாலை பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தீஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் சனி பிரதோஷத்தையொட்டி பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிபட்டனர். ஆனி மாத 2-வது பிரதோஷமும் வருகிற 15-ந்தேதி சனிக்கிழமையில் தான் வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • சிறப்பு அபிஷேகம் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் அமைந்துள்ள மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மூலவர் ஆதி மஹாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    மாலையில் நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பக்தர்கள் சிவபுராணம் பாடினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கும் நந்திபகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சிவபுராணம் பாடியபடி சென்றனர்.

    இதேபோல் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    • பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும்.
    • பிரதோஷத்தையொட்டி அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

    பல்லடம் :

    சிவாலயங்களில் பிரதோஷ நாளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். சிவபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

    பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு அபிஷேக பூஜை, சிறப்பு யாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தையொட்டி அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை கோட்டைவிநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • புதன்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டா னேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு திரியோதசி தினத் தில் பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். வைகாசி மாதம் முதல் திரியோதசி தினமான நேற்று புதன்கிழமை மாலை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை களை தொடர்ந்து மகாதீபாராதனையும் பின்னர் நந்திதேவரின் இரு கொம்பு களுக்கு இடையே சிவனின் நடனக்காட்சி காணும் ஐதீக நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்த ருளி பிரகார வலம்வரும் நிகழ்ச்சியும் அருள்பிர சாதம் வழங்கும் நிகழ்ச்சி யும் நடந்தது.

    ×