என் மலர்
உள்ளூர் செய்திகள்

கமுதி அருகே மண்டல மாணிக்கம் அரும்பவள நாயகி சமேத கைலாச நாதர் கோவிலில் நடைபெற்ற சனிப் பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சனி பிரதோஷ வழிபாடு
- கமுதி கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று சனிப்பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தீஸ்வரருக்கு மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர், திருநீறு, பால், தேன், தயிர் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் 500-க்கும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கமுதி மண்டலமாணிக்கத்தில்
உள்ள அரும்பவளநாயகி சமேத கைலாசநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






