என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம், கொளத்தூர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
- பக்தர்கள் சிவபுராணம் பாடினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு சாமிக்கும் நந்திபகவானுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பிரதோஷ நாயகர் உட்பிரகார உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சிவபுராணம் பாடியபடி சென்றனர்.
இதேபோல் கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
Next Story






