search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிதாபம்"

    • அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
    • உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஜவுளிகடை தெரு சேர்ந்தவர் சண்முகம் (வயது 58) விவசாயி. மேலும் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை திருத்துறைப்பூண்டி அருகே அண்ணாநகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு சென்ற ெரயில் சண்முகம் மீது மோதியது.

    இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

    • காப்பு காட்டில் மரம் வெட்டிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வெட்டியா ந்தொழுவம் கிராமத்தில் அடந்த காப்பு காடு உள்ளது.

    இந்த காப்பு காட்டில் தைலம் மரங்கள் வெட்ட கரூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித மில் என்ற நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.

    மேலும் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த அய்யசாமி உள்ளிட்ட 25 நபர்கள் ஆரணி அடுத்த வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் தைலம் மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இன்று வெட்டியாந்தொழுவம் காப்புகாட்டில் தைலம் மரங்களை வெட்டிய போது எதிர்பாரதவிதமாக மரம் அய்யசாமி மீது மரம் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் அய்யாசாமியை உடன் இருந்த கூலி தொழிலாளிகள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே அய்யசாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தகவலிறந்து வந்த ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் வழக்கு பதிந்து சக தொழிலாளிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ஆரணி அருகே மரம் வெட்டிய போது தொழிலாளி மீது விழுந்ததில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இறந்த அய்யசாமிக்கு செல்வியம்மாள் என்ற மனைவியும் வெங்கடேஷ், பிரகாஷ் என்ற 2 மகன்களும் கவிதா என்ற மகளும் உள்ளனர்.

    • ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
    • சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபா ண்டியன் (வயது 37).

    இவர் மணக்குடி கடைத்தெரு அருகே சாலை ஓரத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்று ள்ளார்.

    அப்போது அந்த வழி யாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாரத விதமாக மோதியது.

    இதில் சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தலைஞாயிறு போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி ரமணி பரிதாபமாக இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை அனில்நகரை சேர்ந்தவர் ரமணி (வயது 50). இவர் சி.ஆர்.சி போக்குவரத்து துறையில் கேசியராக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமணி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • . இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
    • அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.எல்.புரம் புது நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர்பண்ருட்டி- சென்னை சாலைெரயில்வே மேம்பாலம் பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார்நேற்று இரவு இவர் திருச்செந்தூர்எக்ஸ்பிரஸ் ெரயிலில்ஏறி திருச்செந்தூ ருக்கு பயணம் செய்தார். அப்போது பண்ருட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் என தவறி விழுந்தார். அப்போது ரமேஷ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பலியானார்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமலை நாதன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவி த்தனர்.

    கடலூர:

    சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது50) தொழிலாளி. இவர் சிதம்பரத்தி லிருந்துகந்தமங்கலம் திருமலை நாதன் கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போதே திடீரென வலிப்பு ஏற்பட்டு விழுந்து ள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர்

    உடனே ஆட்டோவில் இவரை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவி த்தனர். இதனையடுத்து இவரது மனைவி வைஜெய ந்திமாலா சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்கள். 

    • ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27).

    இவர் கடந்த 1-ம் தேதி இரவு திருமருகல் முடிக்கொண்டான் ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் ராஜேஷ் தலையில் பலத்த காயமடைந்தார்.

    காயமடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
    • செல்லும் வழியிலேயே ருத்திர மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    பட்டுக்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ருத்திர மூர்த்தி (வயது 27).

    பொன்னவராயன் கோட்டை கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி தனலட்சுமி (32) உள்பட பலரும் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சியில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில், நேற்று பணிகள் முடிந்து ருத்திர மூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்ப கிளம்பினார்.

    அவருடன் தனலட்சுமியும் வருவதாக கூறியதையடுத்து இருவரும் பைக்கில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

    அப்போது, தம்பிக்கோட்டை பாமணி ஆற்றுப்பாலம் அருகே பஞ்சராகி நின்ற காரை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக எதிரே முத்துப்பேட்டை நோக்கி வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    உடனே, ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ருத்திர மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும், படுகாயமடைந்த தனலட்சுமி மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்திர மூர்த்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்ண்டுகொண்டு வருகின்றனர்.

    • மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடுகிறார்கள்
    • தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்கிறது

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே முளகுமூடு, மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் டக்ளஸ் (வயது 55). கூலி தொழிலாளி.

    டக்ளசின் மனைவி வனஜா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு டக்ளஸ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு பொருள் வாங்க முளகுமூட்டுக்கு சென்றார். அப்போது முப்பதாங்கல் மெயின் ரோட்டில் வரும் போது எதிரே வந்த வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட டக்ளசை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது சம்மந்தமாக மனைவி வனஜா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் உடலை கைப்பற்றி தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் டக்ளஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் ஏது என அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    • இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (வயது 17). இவருடைய நண்பர் பிரேம்குமார். இவர்கள் 2 பேரும் பெரும்பாக்கத்தில் இருந்து கெடிலம் செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவலம் அய்யனார் கோவில் என்ற இடத்தை கடக்கும்போது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அருள் பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த பிரேம்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சுபஸ்ரீ என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.
    • தங்கராசு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டை கிராமத்தை சேர்ந்த தனுக்கோடி மகள் சுகாமதி(வயது 43).

    இவரது குடும்பத்தினருக்கும், அதே ஊரை சேர்ந்த வினோத் மனைவி சுபஸ்ரீ(23) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது.

    இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறின்போது சுகாமதியையும், அதே ஊரை சேர்ந்த அவரது சித்தப்பா தங்கராசு(70) என்பவரையும் சுபஸ்ரீ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சிலர் தாக்கி உள்ளனர்.

    இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த தங்கராசுவை அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராசு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    துகுறித்து தங்கராசுவின் அண்ணன் மகள் சுகாமதி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார், சுபஸ்ரீ உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த சமயத்தில் இப்ராஹிம் காரில் இருந்து இறங்கி பக்கிங்காம் கால்வாயில் குளிக்க சென்றுள்ளான்.
    • மரக்காணம் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகிவற்றுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் இ.பி. சாலையில் வசிப்பவர் பாபு. இவர் தனது மகன் இப்ராஹிம் (வயது 15) என்பவரை காரில் அழைத்துக் கொண்டு மரக்காணம் மேட்டு தெரு பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றுள்ளார் அப்போது பாபு தனது காரை பக்கிங்காம் கால்வாய் ஓரம் நிறுத்தி உள்ளார். அந்த சமயத்தில் இப்ராஹிம் காரில் இருந்து இறங்கி பக்கிங்காம் கால்வாயில் குளிக்க சென்றுள்ளான். அவன் குளிக்க சேர்ந்த சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்கி மாயமாகி விட்டான். இதனைப் பார்த்த அவனது தந்தை பாபு மகனைத் தேடி உள்ளார். ஆனால் அவன் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து பாபு தனது உறவினர்கள் மரக்காணம் போலீஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகிவற்றுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து காவல்துறை, தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மாயமான பள்ளி மாணவன் இப்ராஹீமை கால்வாயில் தேடி வந்தனர். ஆனால் நேற்று இரவு வரை அவன் கிடைக்கவில்லை. இன்று காலை மீனவர்களின் உதவியுடன் மாயமான மாணவனை தேடினர். அப்போது மாணவன் இப்ராஹிம் இறங்கி குளித்த அதே இடத்தில் சேற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டான். இதனால் அவனது உடலை மட்டும் இன்று காலை மீனவர்கள் மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த மாணவன் மரக்காணத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிர் இழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    ×