search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசுகள்"

    • வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் குழுவிற்கு போட்டிகள் நடைபெற்றன.
    • வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மகளிர் திட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கவிதை கட்டுரை ஓவிய போட்டிகள் நடைபெற்றன.

    இதையடுத்து பரிசளிக்கும் விழா மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வரவேற்றார்.

    நிர்வாக கணக்கு திட்ட உதவிஅலுவலர் முருகேசன், உதவித்திட்ட அலுவலர் சரவணன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு தலைமை திட்ட இயக்குனர் முருகேசன் பரிசுகள் வழங்கினார்.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
    • மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவல ர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 58 மனுக்களும், முதியோர் உதவி த்தொகை தொடர்பாக 46 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 29 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 102 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 18 மனுக்களும், இதர மனுக்கள் 157 ஆக மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் நியாய விலைக்கடையின் பணியாளர்கள் மற்றும் எடையாளர்களில் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையிலும், பணிபுரி ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிட ஆணையிடப்ப ட்டது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 2022 -ம் ஆண்டிற்கு கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொழுதூர் நியாய விலைக்கடை விற்பனை யாளருக்கு முதல்பரிசு ரூ.4,000 மற்றும் திருமுட்டம் நியாய விலைக்கடை விற்பனையாளாருக்கு   2-ம் பரிசு ரூ.3,000 மற்றும் குறிஞ்சிப்பாடி நியாயவிலைக்கடை எடையாளருக்கு முதல்பரிசு ரூ.3,000 மற்றும் வேப்பூர் நியாய விலைகடை எடையாளருக்கு 2 -ம் பரிசு ரூ.2,000 என பரிசுத்தொகைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.தொடர்ந்து தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் விழுப்புரம் கோட்த்தின் மூலம் கடலூர் பனங்காட்டு பகுதி ஐ-இல் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 240 வீடுகளில் பயனாளி பங்களிப்பு தொகை முழுவதும் செலுத்திய 9 பயனாளிகளுக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் வீடுகளு க்கான ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கற்பகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் குமாரதுரை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
    • ஆட்டோ டிரைவர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    உலக ரெட்கிராஸ் தினத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளைக்கு கடந்த ஆண்டு பல்வேறு வகையில் உதவிகள் புரிந்த பாரத ஸ்டேட் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, ஐசிஐசிஐ பவுண்டேஷன், ஆர்கிடெக் அருண் பாலாஜி, துணை இயக்குனர் சுகாதாரம் டாக்டர் நமச்சிவாயம், பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் டாக்டர் வேல்முருகன், மத்திய மருந்து ஆய்வாளர் கவியரசன், முதல் நிலை மருந்து ஆய்வாளர் சுபத்ரா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன், இன்ஸ்பெக்டர் சந்திரா, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

    முன்னதாக இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி வளாகத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்)டாக்டர் சுகபுத்ரா, ரெட்கிராஸ் கொடியினை ஏற்றி வைத்து, ரெட்கிராஸ் இயக்கத்தை தோற்றுவித்த ஜீன்ஹென்றிடூனாந் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரெட்கிராஸ் சுகாதார பெட்டகத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்.

    உலக ரெட்கிராஸ் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூனியர் ரெட்கிராஸ் மாணவர்களுக்கு தனித் திறன் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.

    குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் யூத் ரெட்கிராஸ் மாணவர்களிடம் ரெட்கிராஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் ரெட்கிராஸ் வளாகத்தில் பொதுமக்களுக்கு நீர் மோரும், அரசு ராசாமிராசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இசிஆர்சி மையத்தில் பராமரிப்பில் உள்ள மனநலம் குன்றிய நபர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் ரெட்கிராஸ் உறுப்பினர்கள் டாக்டர். ராதிகா மைக்கேல், டாக்டர். சிங்காரவேலு, டாக்டர். தமிழரசன், ஜெயக்குமார், அரிஸ்டோ வீரா, ஸ்டாலின் பாபு, கோவி மோகன், முனைவர் பிரகதீஷ், ஜான்ஸ்டீபன், செல்வராணி, பயோகேர் முத்துக்குமார், இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார், ரெட்கிராஸ் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.

    • சிராங்குடி அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு வகை திருவிழா நடைபெற்றது.
    • திருவிழாவில் கேப்ப கம்பு, சோளம், கேழ்வரகு, மோர் உள்ளிட்ட உணவுகள் வைக்கப்பட்டன.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிராங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவு வகை திருவிழா நடைபெற்றது.

    இந்த உணவு வகை திருவிழாவில் கேப்ப கம்பு, சோளம், கேழ்வரகு, மோர் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

    இந்த விழாவிற்கு சிராங்குடி தலைமையாசிரியர் ஞானம்மாள் தலைமை ஏற்றார்.

    ஆசிரியர் டேனியல் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் சிறப்பு விருந்தி னராக மூத்தாக்குறிச்சி தலைமையாசிரியர் செல்வராணி, பி.டி.ஏ ஆசிரியர் ரெத்தினப் பிரியா , (பாத்திமா மரியம் பள்ளி) தனியார் பள்ளி ஆசிரியர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் உணவு வகை மாற்றம் பற்றியும் உணவு வகை மாற்றத்தினால் மனிதனின் ஆயுள் காலம் குறைவது பற்றியும் முக்கியமானவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும் முக்கியமான வர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

    இறுதியாக சிறந்தவர்களாக உணவு திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.

    இதில் ஆசிரியர் கண்மணி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.
    • கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி முன்னிலை வகித்தார்.

    பேராசிரியர் திலகர் வரவேற்றார்.

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை பேராசிரியர் வெற்றிச்செல்வன் கருத்துரையாற்றினார். நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஜேஸீஸ் தலைவர் செந்தில், வழக்கறிஞர் அரசு தாயுமானவன் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

    சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு பேசு கையில், மாணவ பருவம் என்பது மகிழ்ச்சியானது மட்டுமல்ல பொறுப்பு மிகுந்ததாகும்.

    கல்லூரி படிப்பு என்பது நமது வாழ்க்கையின் ஆதாரம், எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடியது. அரசு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் போட்டி தேர்வு எழுதவேண்டும்.

    அதற்கான மனநிலையை இப்போதே ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

    அதற்காக தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும்.

    இக்கல்லூரி மேம்பாட்டி ற்காக அரசு மூலம் பல திட்டங்களை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.

    இக்கல்லூரியை சிறப்பு வாய்ந்ததாக மாற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றார்.

    இதையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் தனியார் கம்பெனிகளில் தேர்வு செய்யப்பட்டதற்கான நியமன உத்தரவை வழங்கி னார்கள்.

    மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், பேராசிரியர் அலெக்ஸாண்டர் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    பேராசிரியர் யோக பிரகாசம் நன்றி கூறினார்.

    பேராசிரியர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    • சூரியனை சுற்றி வரும் கோள்கள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.
    • அறிவியல் வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வடக்கு நாட்டாணிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றத்தை சேர்ந்த கலைச்செல்வன் விண்வெளி அறிவியல், தொலைநோக்கி அறிவியல், ராக்கெட் ஏவுதல் குறித்தும் சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

    அறிவியல் வினாடி வினா நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் என்.திருஞானம், கே.கலியமூர்த்தி, தனு.முருகேசன், உஷாதேவி, வேளாங்கண்ணி ஞானதிரவியம், கரோலின் ஆரோக்கியமேரி, தாமரைச்செல்வி, மகேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி நிர்வாகி ராதா ஆனந்தகுமார் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
    • சுபா கல்யாண் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் பண்டார சிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    பள்ளி நிர்வாகியும், செயலருமான ராதா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்விக்குழு தலைவர் சுப்பையா, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் முருகேஸ்வரி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவி சொர்ணப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுபா கல்யாண் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாளராக உடன்குடி வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, குலசேகரன்ப ட்டினம் ஊராட்சி துணைத்தலைவர் வக்கீல் கணேசன், புனித அன்னாள் பள்ளி, இந்து அருள்நெறிப் பள்ளி ஆகியவற்றின் தலைமையாசிரியர்கள் தேவ ஈருதய ஆல்பர்ட், சண்முகக்குமார், தமிழக ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ஜாஸ்பர் இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பல்வேறு கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.

    மானாமதுரை செர்டு சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் நடந்த விழாவையொட்டி மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. திருப்புவனம் புதூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

    காவல்துறை சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி பேரணியை தொடங்கி வைத்தார். நரிக்குடி சாலையில் பேரணி நிறைவடைந்தது. அதன் பின்னர் நடந்த விழாவில் செர்டு சமூக சேவை நிறுவன இயக்குநர் எல்.பாண்டி வரவேற்றார்.

    ஒருங்கிணைப்பாளர் போதும்பொண்ணு, சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி உள்ளிட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பேசினர். வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.
    • சோழன்குறிச்சி வல்லரசு முதலிடம் பிடித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ் பல்கலை கழகத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியைத் துணைவேந்தா் திருவள்ளு வன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

    இதில், 250-க்கும் அதிகமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    இவா்களில் சோழன்கு றிச்சி வல்லரசு முதலிடமும், ஏலாக்குறிச்சி சதீஷ்குமாா் இரண்டாமிடமும், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை மாணவா் தவக்குமாா் மூன்றாமிடமும் பெற்றனா்.

    இவா்களுக்கு பதிவாளா் (பொ) தியாகராஜன் பரிசுகள் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் துவாரா கே.ஜி.எப்.எஸ். மண்டலத் தலைவா் மணிராஜ், மக்கள் தொடா்பு அலுவலா் முருகானந்தம், பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    முன்னதாக, பல்கலை க்கழக மக்கள் தொடா்பு அலுவலா் முருகன் வரவேற்றாா்.

    முடிவில் நிறுவன வா்த்தகப் பிரிவு தலைவா் சிவா நன்றி கூறினாா்.

    • தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயமும் நடைபெற்றது.
    • 1 முதல் 4 இடம் பிடித்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    பேராவூரணி ஆவணம் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தின் முதல் போட்டியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், சிங்கப்பூர் தொழிலதிபர் செல்வராசு, தென்னங்குடி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.அன்பழகன், அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஷ்குமார் மற்றும் பொன்காடு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பெரிய மாடு பந்தயத்தில் 14 வண்டிகள், நடு மாடு பந்தயத்தில் 19, பூஞ்சிட்டு மாடு பந்தயத்தில் 47 வண்டிகள் பங்கு பெற்றது. அதனைத் தொடர்ந்து பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இதில் 12 குதிரை வண்டிகள் ஓடியது. தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயம் நடைபெற்றது.

    தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பங்கேற்றது.

    போட்டியில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாமிடம், நான்காவது இடத்தில் வந்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கொடி பரிசாக ஆட்டு கிடா, செல்போன் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை தனவேந்தன் ஒருங்கிணைத்தார்.

    பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பந்தயங்களை கண்டுகளித்தனர்.

    • ராஜபாளையத்தில் கிராமப்புற பண்பாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

    ராஜபாளையம்

    விவேகானந்தக் கேந்திரமும், ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் ராஜபாளையம் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவில் கிராமப்புற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கிளைத் தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கேந்திரக்கிளைப் பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு இடையேயான ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார். 32 பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் 80 மாணவ மாணவியர்கள் பரிசுகள் பெற்றனர். கோவில்பட்டி கேந்திர கிளை ஒருங்கிணைப்பாளர் பரமகுரு ேபசினார்.

    போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • சமத்துவ பொங்கல் திருவிழா வாழ்த்து மடலினை கலெக்டர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், அலிவலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார். விழாவில் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், மிதிவண்டி போட்டி, கனியும் கரண்டியும், பெண்களுக்கான கோலப்போட்டி போன்ற போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    தொடர்ந்து, சமத்துவ பொங்கல் திருவிழா வாழ்த்து மடலினை கலெக்டர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, துணை இயக்குநர் பொன்னியசெல்வன், வட்டாட்சியர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், புவனேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் மணிகண்டன், வாசுகி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×