search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி ஆண்டு விழா"

    • விழாவில் மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடை பெற்றது.
    • பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் 33-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் கோவை மல்லெர் பல் மருத்துவமனையின் தலைமை பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் திருமலைவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவி ஹர்சிதாஸ்ரீ வரவேற்று பேசினார். மழலையர் வகுப்பு மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடை பெற்றது. மாணவி ஸ்வேதா விழாவை தொகுத்து வழங்கினார்.

    ஆலோசகர் உஷா ரமேஷ் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். பாரத்கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

    செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குநர் ராதா பிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுச் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

    கடந்த 2022 - 2023-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயின்ற மாணவ -மாணவிகளுக்கு கல்வியில் முதலிடம் மற்றும் 2-ம் இடம் பெற்றவர்களுக்கு தேர்ச்சிக்கான விருதும், பல்துறை விருது, உத்வேக விருது, வருகை பதிவேட்டிற்கான விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் திருமலை வேலு சிறப்புரையாற்றினார்.

    மாணவி சந்திய பிரியா நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை பாரத்கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஐ.எஸ்.ஆர்.ஓ. விஞ்ஞானி பங்கேற்பு
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி துணை முதல்வர் அவ்வை சிதம்பரம் வரவேற்றார். பள்ளி தலைவரும், தாளாளருமான நாகராஜன் தலைமை தாங்கி பேசினார்.

    தொடர்ந்து பள்ளி முதல்வர் அமுதா ெஜயந்த் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகள் கோபிகா, அனு பாலா ஆகியோர் பள்ளியை பற்றியும், மாண வன் முகம்மது ஷபான் வ.உ.சி.யை பற்றியும் பேசினர். விழாவுக்கு மகேந்திர கிரியில் உள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. உந்துவிசை வளா கத்தின் விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டார். அவரை பள்ளியின் ஆலோசகர் சுப்ரமணியம் அறிமுகப்படுத்தினார்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், அவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு கையாள வேண் டும் என்று அறிவுறுத்தி விஞ்ஞானி ஆசீர் பாக்கிய ராஜ் பேசினார்.

    தொடர்ந்து 10, 11, 12-ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ -மாணவிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் அவர் பரிசுகளை வழங்கினார். பின்னர் பள்ளி துணை தலைவர் கோபாலன் நினைவு பரிசை வழங்கினார்.

    தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், யோகா, கராத்தே ஆகியவை நடை பெற்றன. முடிவில் ஆசிரியர் பினிஸ்குமார் நன்றி கூறினார்.

    இந்த விழாவில் பள்ளி செயலாளர் சுப்ரமணியம், இணை செயலாளர் முத்து, பொருளாளர் நடேஷ், வக்கீல் சதீஸ்குமார், உறுப்பி னர்கள் சங்கர், மாரிதாஸ், ஆறுமுகம், ஆசிரிய, ஆசிரி யைகள், மாணவ-மாணவி கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் முதன்மை மேலாளரும், மூத்த விஞ்ஞானியுமான சிவ சுப்ரமணியன் கலந்து கொண்டார்.
    • மேலும் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 4 பாடங்களில் சதம் அடித்த மாணவி சரண்யா ஸ்ரீ என்பவருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் -மதுரை ரோடு யானைத்தெப்பம் பகுதியில் டி.பி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியின் 33வது ஆண்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைவர் ராஜப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் வளசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். நாட்டாமை ராக்கி, நாட்டாமை பொன்னுலிங்க நாடார் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் முதன்மை மேலாளரும், மூத்த விஞ்ஞானியுமான சிவ சுப்ரமணியன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

    விஞ்ஞானத்தில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. உலகமே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாணவர்கள் அறிவியல் கற்க ஆர்வம் காட்ட வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் விஞ்ஞானம் சார்ந்த அறிவுரை வளர்க்க ஊக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    மேலும் பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வில் 4 பாடங்களில் சதம் அடித்த மாணவி சரண்யா ஸ்ரீ என்பவருக்கு விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ராஜேஷ் கண்ணன், பள்ளி முதல்வர் ரத்னகலா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பங்கேற்பு
    • வி.ஐ.டி. உயர்கல்வி திட்டத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் ஸ்பிரிங்டேஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    பள்ளி முதல்வர் ஆனந்தி ராஜேந்திரன் வரவேற்று பேசுகையில்:-

    2017-18-ம் ஆண்டில் 400 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளி அனைவரின் உழைப்பினால் இன்று 2,200 மாணவர்கள் படித்து வருகின்றனர் என்றார்.

    சிறப்பு அழைப்பாளராக வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநா தன் கலந்து கொண்டு பள்ளியில் இந்த ஆண்டு கல்வி தொடர் புடைய இணை செயல்பாடுகளில் சாதனை புரிந்த மாணவ- மாணவிகளுக்கும், மாஸ்டர்ஜீ-யில் பயின்று பல்வேறு உயர்ப டிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரொக்கத்தொகை, பரிசு, கோப்பைகள் வழங்கினார். அவர் பேசுகையில், பள்ளி கல்வியின் வளர்ச்சி மற்றும் தரம் ஒரு நாட்டின் உயர்கல்வியில் வளர்ச்சி, தரத்தையும் நிச்சயம் உயர்த்தும்.

    மேலைநாடுகளுக்கு இணையாக இந்தியாவில் கல்விக்கு செலவு செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

    வி.ஐ.டி.யில் கடந்த ஆண்டு படித்த அனைத்து மாணவர்களும் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்ற. னர். 84 நாடுகளில் வி.ஐ.டி. மாணவர்கள் வேலை செய்கிறார்கள். விரைவில் ஸ்பிரிங்டேஸ் பள்ளியை இந்தியா திரும்பி பார்க்கும் நிலை நிச்சயம் வரும்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த பள்ளியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்க ளுக்கு வி.ஐ.டி. சார்பில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்றார்.

    விழாவில் ஸ்பிரிங்டேஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் வி.ஐ.டி. உயர்கல்வி திட்டத்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இதில், பள்ளி துணை முதல்வர் சில்லிசுக் கலா, ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்பிரிங்டேஸ் பள்ளிக்கல்வி இயக்குனர் ரம்யா சிவக்குமார் செய்திருந்தார்.

    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று, பள்ளியின் பெருமைகளை எடுத்துக் கூறினார். ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • பள்ளியின் 35 வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
    • முன்னதாக பள்ளி மாணவர்களின் நாட்டியம், நாடகம், யோகா, கவிதை, நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்னகாவனம் பாரதி நர்சரி பிரைமரி பள்ளியின் 35 வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் பொன் தாமோதரன், பொன்னேரி நகர வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னதாக பள்ளி மாணவர்களின் நாட்டியம், நாடகம், யோகா, கவிதை, நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கலை நிகழ்சிகள் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த பிள்ளையார்குப்பம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் மனோகுமார் வரவேற்றார்.

    சோளிங்கர் வட்டாரக் கல்வி அலுவலர் சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்தி, ஒன்றிய துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அ.மா.கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் கருணகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் நிகழ்ச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன், கண்ணகி நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

    • பள்ளி நிர்வாகி ராதா ஆனந்தகுமார் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
    • சுபா கல்யாண் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் பண்டார சிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    பள்ளி நிர்வாகியும், செயலருமான ராதா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்விக்குழு தலைவர் சுப்பையா, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் முருகேஸ்வரி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவி சொர்ணப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சுபா கல்யாண் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாளராக உடன்குடி வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி, குலசேகரன்ப ட்டினம் ஊராட்சி துணைத்தலைவர் வக்கீல் கணேசன், புனித அன்னாள் பள்ளி, இந்து அருள்நெறிப் பள்ளி ஆகியவற்றின் தலைமையாசிரியர்கள் தேவ ஈருதய ஆல்பர்ட், சண்முகக்குமார், தமிழக ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ஜாஸ்பர் இம்மானுவேல் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பல்வேறு கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
    • பல்வேறு கலைத்திறன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–-மாணவியர் மற்றும் சிறந்த பெற்றோர்க ளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்த பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில், வெறும் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால், பள்ளி மூடப்படும் நிலையில் இருந்தது. இதற்கு பிறகு இப்பள்ளிக்கு நிய மிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோரது முயற்சியால், படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். துணைத் தலை வர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜி மற்றும் சமூக ஆர்வலர்கள் கவி ஞர்மன்னன், பழனிசாமி, அப்பாத்துரை, மகாலிங்கம், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்வேறு கலைத்திறன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–-மாணவியர் மற்றும் சிறந்த பெற்றோர்க ளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாணவ–-மாணவிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவிய முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை இயக்குநர் கோபால்சுவாமி மற்றும் தன்னார்வ லர்க ளுக்கு, பள்ளியின் சார்பில் பாராட்டு தெரி விக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.

    • முன்னாள் பள்ளி மாணவருமான டாக்டர் ஜி.விவேகானந்தன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
    • முடிவில் ஜேசீஸ் நர்சரி-பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

     காங்கயம் :

    காங்கயம் சிவன்மலை  ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 42-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி துணைத்தலைவர் ஏ.உமாதேவி அர்ச்சுனசாமி தலைமை தாங்கினார். காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஸ்குமாரும்,சேலம் எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் மூத்த சிறுநீரக மருத்துவ ஆலோசகரும்,முன்னாள் பள்ளி மாணவருமான டாக்டர் ஜி.விவேகானந்தன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    கவுரவ விருந்தினர்களாக காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர், சிவன்மலை ஊராட்சி தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் சிவன்மலை ஊராட்சி துணைத்தலைவர் டி.சண்முகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பள்ளி தாளாளர் சி.பழனிசாமி வரவேற்றார்.

    அகாடமிக் இயக்குனர் பி.சாவித்திரி, எஸ்.ஜானகிசவுந்தர்ராஜன், ஜி.மகேஸ்வரி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    மேலும் 2022-ம் ஆண்டு 10,12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களையும், பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளையும், பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற வைத்த ஆசிரிய-ஆசிரியைகளையும் டாக்டர் ஜி.விவேகானந்தன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவில் பள்ளி தலைவர் ஏ.கோபால், பொருளாளர் பி.மோகனசுந்தரம், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏ.ஆர்.அசோகன், வி.பி.கொங்குராஜன், எஸ்.மதியழகன், ஆர்.ஏ.மகாலிங்கம், ஆனந்விஷ்ணு மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். முடிவில் ஜேசீஸ் நர்சரி-பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

    • முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது.
    • முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33-ம் ஆண்டு பரிசளிப்பு விழா நடந்தது. நாடார் உறவின்முறை தலைவர் ஏ.எம்.டி. சிவகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவி சேர்மன் வயணப்பெருமாள், ராமமூர்த்தி, கணேசன், அசோகன், செல்வகுமார், பெருமாள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் அய்யாசாமி வரவேற்றார். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி உதவி சேர்மன் வயணப் பெருமாள் பரிசு வழங்கி பாராட்டினார். விளையாட்டுப் போட்டியில் முதல் 3 இடங்களில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவில் தாசில்தார் சிவகுமார், டி.எஸ்.பி. சின்னகண்ணு, பள்ளியின் பொருளாளர் எஸ்.முத்து முருகன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் காந்தி ராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, முன்னாள் என்.சி.சி. அலுவலர் எஸ். துரைப்பாண்டியன், கல்விக்குழு உறுப்பினர்கள் மணிக்குமார், பாண்டி குமரன், நாகராஜன், மாதவன், ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலாளர் டி.ரவீந்திரன் நன்றி கூறினார்.

    • ஆண்டு விழாவிற்கு பள்ளி தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அருகே உள்ள சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் நம்மாழ்வார் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் முந்தைய தினம் பல்வேறு போட்டிகள் நடந்தது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கவிஞர் அருள் பிரகாஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி நிர்வாக அலுவலர் குருநாதன் நன்றி கூறினார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

    ×