என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

காளியம்மன்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ–மாணவியர்.
காளியம்மன்புதுார் அரசு பள்ளி ஆண்டு விழா

- வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
- பல்வேறு கலைத்திறன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–-மாணவியர் மற்றும் சிறந்த பெற்றோர்க ளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில், வெறும் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால், பள்ளி மூடப்படும் நிலையில் இருந்தது. இதற்கு பிறகு இப்பள்ளிக்கு நிய மிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோரது முயற்சியால், படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். துணைத் தலை வர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜி மற்றும் சமூக ஆர்வலர்கள் கவி ஞர்மன்னன், பழனிசாமி, அப்பாத்துரை, மகாலிங்கம், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு கலைத்திறன், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–-மாணவியர் மற்றும் சிறந்த பெற்றோர்க ளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாணவ–-மாணவிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. பள்ளியின் மேம்பாட்டிற்கு உதவிய முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை இயக்குநர் கோபால்சுவாமி மற்றும் தன்னார்வ லர்க ளுக்கு, பள்ளியின் சார்பில் பாராட்டு தெரி விக்கப்பட்டது. முடிவில் ஆசிரியை புவனேஸ்வரி நன்றி கூறினார்.