ராஜபாளையத்தில் கிராமப்புற பண்பாட்டு போட்டிகள்

ராஜபாளையத்தில் கிராமப்புற பண்பாட்டு போட்டிகள் நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
ராஜபாளையத்தில் கிராமப்புற பண்பாட்டு போட்டிகள்
Published on

ராஜபாளையம்

விவேகானந்தக் கேந்திரமும், ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் ராஜபாளையம் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவில் கிராமப்புற பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கிளைத் தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா போட்டிகளைத் தொடங்கி வைத்தார். கேந்திரக்கிளைப் பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு இடையேயான ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார். 32 பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில் 80 மாணவ மாணவியர்கள் பரிசுகள் பெற்றனர். கோவில்பட்டி கேந்திர கிளை ஒருங்கிணைப்பாளர் பரமகுரு ேபசினார்.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com