உலக மகளிர் தின விழா

உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர்.
உலக மகளிர் தின விழா
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உலக மகளிர் தின விழா நடந்தது.

மானாமதுரை செர்டு சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் நடந்த விழாவையொட்டி மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பேரணி நடந்தது. திருப்புவனம் புதூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

காவல்துறை சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி பேரணியை தொடங்கி வைத்தார். நரிக்குடி சாலையில் பேரணி நிறைவடைந்தது. அதன் பின்னர் நடந்த விழாவில் செர்டு சமூக சேவை நிறுவன இயக்குநர் எல்.பாண்டி வரவேற்றார்.

ஒருங்கிணைப்பாளர் போதும்பொண்ணு, சார்பு ஆய்வாளர் பாண்டீசுவரி உள்ளிட்ட மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள் பேசினர். வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த பெண்கள் அனுபவங்களை விளக்கினர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com