search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப.சிதம்பரம்"

    • ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் செயல்படுத்தி இருக்கலாம்.
    • அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    எப்படி புற்று நோய் உடலுக்கு கெடுதலோ அதுபோல தீவிரவாதம் என்பது தேசத்தின் புற்று நோய். அதை அப்படியே  விட்டு விட்டால், அது தேசம் முழுவதும் பரவி விடக் கூடாது. அதனால்தான் என்.ஐ.ஏ.அலுவலகம் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

    மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் தீவிரவாதத்தையும், தீவிரவாத முயற்சிகளையும் கட்டுப்படுத்த முடியும். ஆகவே இதில் அரசியல் புகுத்தாமல், எந்த சமூகத்தை சார்ந்தவர், எந்த இயக்கத்தை சார்ந்தவர் எந்த பின்புலத்தை சார்ந்தவர் என்று இல்லாமல் தீவிரவாதத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும். அப்போதுதான் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பாதுகாப்பை தர முடியும். ஒட்டுமொத்தமாக தீவிரவாதம் இல்லாத பாரத தேசம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வெளிநாடுகளில் எல்லாம் இரண்டு முதல் 4 மொழிகள் அரசாட்சி மொழியாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு தமிழிசை கூறியதாவது:

    சிதம்பரம் இன்னைக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா...நேற்றுதான் வந்தாரா...முந்தாநாள் வந்தாரா...பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட அரசாங்கத்தில் அங்கமாக அவர் இருந்து வந்துள்ளார். இதை ஏன் அன்றைக்கு அவர் சிந்திக்கவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் பல நடைமுறைகளை செயல்படுத்தி இருக்கலாம். அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பதுதான் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மயிலாப்பூரில் காய்கறி வாங்கும் வீடியோவை மத்திய நிதி மந்திரி வெளியிட்டிருந்தார்.
    • மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வீடியோ குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்.

    திருப்பூர்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கியதுடன்  அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார். அங்குள்ள வியாபாரிகளிடம் காய்கறி விலை குறித்து அவர் விசாரித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான சிதம்பரம் கூறியுள்ளதாவது:

    கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்கு பணவீக்கம் காரணமாக விலைவாசி உயரும் என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநரே ஒப்புக் கொள்கிறார். மயிலாப்பூர் சந்தைக்கு சென்று (மத்திய நிதி மந்திரி) காய்கறி விலையை விசாரித்தால் மட்டும் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
    • பணவீக்கத்தை பற்றி நிர்மலா சீதாராமன் கவலைப்படவில்லை.

    புதுடெல்லி:

    கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சாமானிய மக்களிடமிருந்து நிதி மந்திரி மிக விலகி நிற்கிறார் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், பணவீக்கம் என்னுடைய தலையாய கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது! உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.

    • ஒரே நுழைவுத் தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
    • இப்படியே போனால் நாளைக்கு ஒரு நாடு ஒரே பத்திரிக்கை என்றுகூட அறிவித்துவிடுவார்கள்.

    காரைக்குடி:

    முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நானும் என்னுடைய கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம். ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம். இது ஒரு நாடுதான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு நாட்டிற்குள் பல மாநிலங்கள் இருகின்றன, பல மொழிகள் இருக்கின்றன, பல கலாச்சாரம் இருக்கிறது, பல வரலாறுகள் இருக்கின்றன, பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.

    நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நான் ஒரு காரணத்தைத்தான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகிறேன். ஒரு மாநிலம் தன்னுடைய நிதியில் இருந்து தன்னுடைய மாநில மக்களுக்காக தன்னுடைய பொறுப்பில் கல்லூரி நிறுவினால், அதில் எந்த மாணவர்களை சேர்ப்பது என்று அந்த மாநிலத்திற்கு முடிவு எடுப்பதற்கு அதிகாரம் கிடையாதா? இது என்ன வேடிக்கை? எந்த நாட்டில் இதுபோன்ற சமஸ்டி முறை நிலவுகிறது?

    சும்மா பொம்மை அரசாக மாநில அரசுகள் இருக்கும், மத்திய அரசுதான் எல்லா முடிவும் எடுக்கும் என்றால்... என்ன சமஸ்டி அரசு முறை? பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே நீட்டை எதிர்க்கலாம்.

    இப்போ 'நீட்' 'கியூட்' என எல்லா தேர்வுகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில அரசில் ஒரு உயர்கல்வி அமைச்சர் எதற்கு? உயர்கல்வி துறை எதற்கு? மத்திய அரசே மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவுவது போல் எல்லா கல்லூரிகளையும் மத்திய அரசுதான் நிறுவும் என்று அறிவிக்கலாமே?

    மாநில அரசுக்கு வேறு வேலையே கிடையாதா, மாநில அரசுகள் எல்லாம் நகராட்சிகளாக, பேரூராட்சிகளாக குறைக்கப்படுமா? இதை எல்லாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதனுடைய விளைவுகளை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாடு ஒரே அடையாள அட்டை, ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரு நாடு ஒரு தேர்வு, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரு கலாச்சாரம், ஒரு நாடு ஒரு பழக்கவழக்கம், ஒரு நாடு ஒரு உடை... இது எங்கே போய் நிற்கும் என்றால் ஒரு நாடு ஒரு கட்சி என்று வந்துவிடும். ஒரு நாடு ஒரு தலைவர் என்று வரும்.

    இந்த விபரீதத்தை உணர்ந்து கொள்ளாமல் இருந்தால் மிகப் பெரிய தவறு. இந்த விபரீதத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். எதற்காக மொழி வாரியாக மாநிலங்கள் என்று நம்முடைய மூத்த தலைவர்கள் அன்று பிரித்தார்கள்? அந்தந்த மாநிலத்தில் உடைய மக்கள் அவர்கள் பல பொருள்களில் சுயாட்சி பெற்ற அமைப்பாக சுயமாக சிந்தித்து சுயமாக முடிவு எடுக்கக்கூடிய அமைப்பாக மாநில அரசுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதை எல்லாம் கெடுப்பதற்கு அழிப்பதற்குத்தான் இந்த ஒரு நாடு ஒரே... என்ற நிலைப்பாடு. நாளைக்கு உங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு ஒரு நாடு ஒரே பத்திரிக்கை என்று அறிவித்துவிடுவார்கள். ஒரு நாடு ஒரு தொலைக்காட்சி என்று அறிவிப்பார்கள்.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரே நாடு, ஒரே தேர்வு என்பது முற்றிலும் ஆபத்தானது.
    • இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது.

    காரைக்குடி:

    முன்னாள் மத்திய நிதி மந்திரியும், ராஜ்யசபா உறுப்பினருமான ப.சிதம்பரம் இன்று காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்வு என்பது முற்றிலும் ஆபத்தானது. அதை தொடக்கத்திலேயே கடுமையாக எதிர்க்க வேண்டும். இல்லை என்றால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பார்கள். இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது.

    நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. 18 முதல் 25 வயதுடையவர்கள் 25 சதவீதம் பேர் வேலை யில்லாமல் உள்ளனர். 5ஜி ஏலம் மூலம் 5 லட்சம் கோடி வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1.56 லட்சம் கோடிதான் ஏலம் போய் உள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளது.

    பா.ஜனதா அரசால் புதிய திட்டத்தை கொண்டுவர முடியாது. அவர்களால் இருக்கின்ற திட்டத்தை அழிக்கத்தான் முடியும்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும். அதில் தலைவராக என்னை தேர்ந்தெடுக்க 101 சதவீதம் வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனாவால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 23-ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு பேரணியாக சென்றனர்.

    புதுடெல்லி:

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே, ராகுல் காந்திக்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்திற்கு இடது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற பேரணியில் காவலர் தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நியமனம் செய்து ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #PChidambaram #RahulGandhi
    புதுடெல்லி :

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்கும் முயற்சிகளில் பல்வேறு விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. பாஜகவிற்கு எதிராக உள்ள மாநில கட்சிகளை ஒன்றினைத்து மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளிலும் காங்கிரஸ் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கட்சியில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பர குழு மற்றும் ஒருங்கினைப்பு குழு என்ற மூன்று குழுக்களை கடந்த மாதம் அமைத்தார். இந்த குழுக்களில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

    இந்நிலையில், அந்த குழுக்களுக்கு தலைவர் மற்றும் ஒருங்கினைப்பாளர்களை நியமித்து ராகுல் காந்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அதில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவராக மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தேர்தல் அறிக்கை குழு ஒருங்கினைப்பாளராக ராஜீவ் கௌடா, விளம்பர குழு தலைவராக ஆனந்த் சர்மா, விளம்பர குழு ஒருங்கினைப்பாளராக பவன் கேரா, தேர்தல் ஒருங்கினைப்பு குழு தலைவராக முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ.கே அந்தோனி, ஒருங்கினைப்பு குழுவின் ஒருங்கினைப்பாளராக முன்னாள் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். #PChidambaram #RahulGandhi
    பிரதமர் மோடி அரசு காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் இந்திரா காந்தி சாலையில் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வல்லம்ராஜன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    காமராஜர் மறைந்து 42 ஆண்டுகளாகிறது காமராஜர் பெயரை சொன்னால் ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது. காமராஜர் எளிய குடும்பத்தில் பிறந்த படிக்காத மேதை. வாழும் தெய்வம், அவர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒருபாடம் அவர் பெயரில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது மத்தியில் 31 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 69 சதவீத வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

    இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா 6 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் இங்கு தற்போது நடக்கிற நிகழ்வுகள் கொடுமைகளை பார்க்கும்போது வாஜ்பாய் ஆட்சி நடக்கவில்லை. முஸ்லிம்கள், தலித்துகள், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் பாரதிய ஜனதா ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

    மோடி ஆட்சியில் இந்தியா விபரீதமான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி பேசி போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது.

    என்னை 4 பேர் படுக்கையில் தூக்கி செல்லும் போது தான் என் குரல் நிற்கும். என் பேனா எழுதுவது நிற்கும். அனைத்து சமுதாயத்தினரும் அச்சத்தில் வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறைகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் கூடுதல் வரி பிடித்தம் செய்ததன் மூலம் ரூபாய் 10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அந்தப் பணம் எங்கே போனது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன் என்று மோடி கூறினார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றார் இதையெல்லாம் அவர் செய்திருக்கிறாரா? இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

    பயிர் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரீமியம் தொகை வசூலிக்கிறார்களோ அந்த அளவு இழப்பீடு தர வேண்டும். 2016-17 ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.12 ஆயிரம் கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே ஆண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை ரூ.5ஆயிரம் கோடி தான் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    மோடி அரசின் இதுபோன்ற திட்டங்களால் இந்திய பொருளாதாரம் வலுவிழந்து உள்ளது. பண மதிப்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதி கெட்டுள்ளது. தமிழக அமைச்சர் எம்.சி. சம்பத் சட்டசபையில் பேசும்போது பண மதிப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இது இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புள்ளிவிவரம். இந்தியா முழுவதும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வியாபாரிகள் நிம்மதியின்றி உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது என்று யோசித்து பார்க்க வேண்டும் தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு பேர் உள்ளனர் இவர்களிடம் கணக்கு கேட்க ஆள் இல்லாததால் மகிழ்ச்சியுடன் உள்ளனர். சத்துணவு முட்டை வழங்கும் திட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி நேரு குடும்பம் பதவிக்காக அலைகிறது என்று கூறி வருகிறார். ஆனால் 1989-ம் ஆண்டிற்கு பிறகு சுமார் 29 ஆண்டுகளாக இந்த நேரு குடும்பத்தில் யாரும் அரசு பொறுப்புக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருந்தது. அண்டை நாடுகளுடன் நல்லுறவு இருந்தது வல்லரசு நாடுகள் உதவியாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை என்னைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவில் எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் அச்சமில்லாத வாழ்க்கை தான் சுதந்திரம் இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. பாரதிய ஜனதா கட்சி அல்லாத ஆட்சி அமையும் பட்சத்தில் அந்த நிலை ஏற்படுத்தித் தருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    வெளிநாட்டில் வாங்கிய சொத்துகளின் விவரங்களை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்று குற்றம் சுமத்தி கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் மற்றும் மருமகள் மீது சிறப்பு கோர்ட்டில், வருமான வரித்துறை புகார் மனுவை தாக்கல் செய்துள்ளது.
    சென்னை:

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துகள் வாங்கியுள்ளதாகவும், இந்த சொத்துகள் வாங்கிய விவரங்களை நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும், தங்களது வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ம் ஆண்டு கருப்பு பண தடுப்புச்சட்டத்தை கொண்டு வந்தார்.

    இந்த சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. அதாவது, இங்கிலாந்து நாட்டில், ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பு கொண்ட 2 சொத்துகளும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.

    இதை எதிர்த்து நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.


    இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர் கடந்த 3-ந்தேதி விசாரித்தனர். அப்போது, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தலாம். அதேநேரம், கருப்பு பண தடை சட்டத்தின் கீழோ அல்லது வருமானவரிச் சட்டத்தின் கீழோ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்போது, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை முதன்மை இயக்குனர், வருகிற ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில், கருப்பு பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக புகார் மனுவை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில், வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த புகார் மனுவை சிறப்பு கோர்ட்டு பரிசீலித்து ஏற்றுக்கொண்டு பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பும் என்று கூறப்படுகிறது.
    ×