search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழிசை சௌந்தரராஜன்"

    • இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.
    • தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள்.

    தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து தை திருநாளை கொண்டாடினார். அப்போது பாஜக தொண்டர்கள் சிலர் இது அக்கா பொங்கல், கவர்னர் அக்கா பொங்கல் என கோஷமிட்ட நிலையில், இடை மறித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இது ராமர் பொங்கல், அயோத்தி ராமர் பொங்கல் என தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு சிரிப்பாலை ஏற்பட்டது.

    பொங்கல் விழாவையொட்டி அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

    தனியார் பள்ளிகள் அனைத்திலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தி கற்றுத்தர ஏன் இந்த பாரபட்சம். இந்தியை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறுகிறார்கள். இந்தியை யாரும் திக்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை யாரும் ஏற்றுக் கொள்ளவே இல்லை என்று சொல்லு போது இதுதான் சமச்சீர் கல்வி இல்லாமல் போகிறது. தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் பல மொழிகளை கற்கிறார்கள். அரசு பள்ளி குழந்தைகளுக்கு அது தமிழகத்தில் மறுக்கப்படுகிறது.

    தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் இந்தி கற்றுதரப்படுகிறது என்பதை தெளிவுப்படுத்தினால் தமிழகத்தில் இரு மொழி கொள்கை இருக்கிறதா? மூன்று மொழி கொள்கை இருக்கிறதா? பல மொழி கொள்கை இருக்கிறதா? இல்லையென்றால் பொய் மொழி கொள்கை இருக்கிறதா? என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் பெண் முதல்வருக்கு நடந்த கொடுமையை இந்நாள் முதல்வர் நடக்கவே இல்லை என்று சொல்லலாமா?
    • பெண் பெருமையை பேசத் தெரியாதவர்கள் எப்படி பெண் உரிமையை பேணிக்காப்பார்கள்?

    நாடு முழுவதும் நாளை 76வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கவர்னர் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

    சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். என் சுதந்திரத்தை அடைந்து விட்டோம்!

    பெண் சுதந்திரத்தையும் அடைந்து விட்டோம் எனக் கொண்டாடும் வேளையில் பெண் சுதந்திரம் கிடைத்துவிட்டது என அட்டகாசமாய் ஆர்ப்பரிப்போம்.

    ஆம் ஆள்பவர்களில் பெண்கள் இருக்கிறார்கள்.

    ஆளுநராகவும் பெண்கள் இருக்கிறோம்...

    நீதித்துறையிலும் பெண்கள் இருக்கிறார்கள்....

    நிதி அமைச்சராகவும் பெண்ணே இருக்கிறார்....

    ராணுவத்தில் பெண்கள் இருக்கிறார்கள்- பலர் ஆணவத்தை அழித்து ஆளுமையில் பெண்கள்.....

    ஆம்...

    வலிமை பெற்று வருகிறோம்.

    ஆனால் வலிகள் போக்கி வாழ்கிறோமா?

    சில ஆண்டுகளுக்கு முன்னாள் தமிழக சட்டமன்றத்தில்....

    சட்டங்கள் ஆளவந்த பெண் தலைமை சட்டமன்றத்திலேயே தாக்கப்பட்டார்.....

    அரசியலில் சிங்கமாய் நின்ற பெண் தலைவர் அசிங்கப்படுத்தப்பட்டார், தாக்கப்பட்டார் பெண் உரிமைப் பேசும் நாட்டில் பெண் துகில் உரிக்கவும் முயற்சிகள் நடந்தன....

    ஆக இது போல் கொடுமையான நிகழ்வுகள் நடக்கக்கூடாது என எண்ணலாம் -ஆனால் இதுபோல் நிகழ்வே நடக்கவில்லை என்று சொல்லலாமா?

    முன்னாள் பெண் முதல்வருக்கு நடந்த கொடுமையை இந்நாள் முதல்வர் நடக்கவே இல்லை என்று சொல்லலாமா?

    இந்தக் கொடுமையை பாராளுமன்றத்தில் சொன்ன பெண் நிதி அமைச்சர் நம் தமிழ்ப்பெண் நிதி அமைச்சர்...

    இந்த பாரத தேசத்தின் நிதி அமைச்சராக ஒரு தமிழ்ப்பெண் என பலரும் பெருமைகொள்கையில்

    சிவாவாக இருக்கும் ஒருவர் அவரை சிறுமைப்படுத்துகிறார்.....

    1991-ஆம் ஆண்டு வரை லண்டனில் இருந்தவருக்கு என்ன தெரியும் என்கிறார்....

    1991-இல் சிறுவனாக இருந்தவரை வாரிசாக இருப்பதால் வாரி அணைத்து அமைச்சராக ஆக்கியுள்ளவர்கள் பேசுகிறார்கள்...

    ஆனால் அரசியலில் இருந்து அமைச்சராக உயர்ந்தவரை இழித்தும்,பழித்தும் பேசுகின்றனர் .பெண் பெருமையை பேசத் தெரியாதவர்கள் எப்படி பெண் உரிமையை பேணிக்காப்பார்கள்?

    நேற்று அமைச்சரானவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என ஆணவத்துடன் கூறுகிறார் பாலுவான பாராளுமன்ற உறுப்பினர்....

    நேற்று உதித்த மகனை அமைச்சராக்கிவிட்டு...

    கற்று தேர்ந்த பெண் அமைச்சரை பரிசகிக்கிறார்கள்...

    ஆவணத்துடன் சரியாக நிதி, நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் நிதி அமைச்சர் தமிழ்ப்பெண் நிதி அமைச்சரை ஆணவத்துடன் நிந்திக்கிறார்கள்!

    பெண்களை முன்னேற்றுவதற்கே கழகம் என்பவர்கள்- பெண்களுக்கு களங்கம் தானே கற்பிக்கின்றனர்....

    இவர்கள் பேசும் பெண்ணுரிமையும் இதுதான்....

    இவர்கள் பேணும் பெண்ணுரிமையும் இதுதான்.....

    பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் உரிமையும் இதுதான்....

    77-வது சுதந்திர தினத்திலும் பெண் கொடுமை மறைக்கப்படுகிறது.... பெண் பெருமை மறுக்கப்படுகிறது....

    இது தமிழரின் குணமல்ல....

    இது தமிழகத்தை தற்போது ஆள்பவர்களின் குணம்....

    பெண்ணினமே எழுவாய்....

    அதிகம் அரசியலுக்கு வருவாய்.....

    அழிக்க முடியாத சரித்திரம் படைப்பாய்....

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பியபோது தவறி விழுந்தார்.
    • உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர்.

    இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடலோரத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    அதன் துவக்க விழா இன்று காலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி அருகே நடைபெற்றது. விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து, உரையாற்றி விட்டு தனது காருக்கு திரும்பிய தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (கூடுதல் பொறுப்பு) டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், கார்பெட் தடுக்கி கால் தவறி கீழே விழுந்தார்.

    உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும், பாதுகாவலர்களும் பதட்டம் அடைந்து அவரை தூக்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சினை..
    • மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது.

    புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கேக் வெட்டினார்கள். பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 




    புதுச்சேரி வளர்ச்சி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு நல்ல நிர்வாகம், நல்ல ஆட்சி நடப்பதுதான் காரணம். எனவே ஒன்றும் நடக்கவில்லை என்பதெல்லாம் உண்மை அல்ல. முதலமைச்சருடன் சுகாதார மேம்பாட்டுக்காக ஆலோசனை நடத்தியுள்ளேன். கொரோனாவுக்கு மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் குறித்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. ஏழை மாணவர்களின் நிலை உயர இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் நசுக்கப்படும் என்பதெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலும் தமிழ் படிக்கலாம். கடந்த 10 வருடமாக தமிழை ஏன் கட்டாய பாடமாக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. 


    மாநில அந்தஸ்து விவகாரத்தில் எம்.பி.யாக இருந்தவர்கள் எல்லாம் பாராளுமன்றத்தில் இதற்காக எத்தனை முறை பேசினார்கள்? புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மாநில அந்தஸ்து விவகாரம் பல ஆண்டு பிரச்சினை. அதை உடனடியாக செய்ய முடியாது.

    அதற்காக பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும். அங்கு அனுமதிபெறவேண்டும். இது அரசியலுக்காக சொல்லப்படுகிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையானது கிடைக்கிறது. நாங்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுகிறோம். ஆனால் நான் சார்ந்த தமிழகத்தின் முதலமைச்சர் இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க மறுக்கிறார் என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அவரவர்களுக்கு தேவையான மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் வேண்டும்.
    • இதை சொன்னவுடனேயே மொழி திணிப்பு என்று சிலர் தவறாக முன் நிறுத்துகிறார்கள்.

    டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வார விழாவில் கலந்து கொண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு தமிழிசை அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: 


    மொழியை வைத்து அரசியல் செய்வதை விட்டு விட்டு, அவரவர்களுக்கு என்ன மொழி தேவையோ அந்த மொழியை கற்றுக் கொள்கிற சுதந்திரம் அவர்களுக்கு இருக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்றுக் கொள் என்ற சொன்னவுடனேயே அதை திணிப்பு என்று தவறாக முன் நிறுத்துகிறார்கள், இது திணிப்பு அல்ல. இனிப்பான தமிழை அனைவரும் கற்க வேண்டும். நம் தமிழை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் புதுப்பித்துள்ளார்.
    • கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது

    காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை செல்லும் எல்லோரும் காசி– ராமேஸ்வரம் என்ற சொல்வது மிகவும் பிரபலமானது. ராமேஸ்வரத்திற்கு வந்தபின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற கலாச்சார, ஆன்மீக இணைப்பை பிரதமர் மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளார்.

    காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம்காலமாக இருந்து வருவதாகும். காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம் காலமாக இருந்த தொடர்பை பிரதமர் நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார்.

    இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாச்சார நிகழ்வுகளை பார்க்கும் போது கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

    மகாகவி பாரதியின் பேரனை காசியில் சந்தித்தேன். தமிழ் சங்கமம் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக காசியில் உள்ள பாரதி சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

    வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது தேசிய கீதம் ஒலித்த பின்பு நிகழ்ச்சி தொடங்கியது. பின்பு நான் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இடம்பெறாமல் இருப்பதா? என்று எடுத்துக்கூறி மனோன்மணியம் பெ‌.சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பாடினேன். இதை அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி வரவேற்றது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் செயல்படுத்தி இருக்கலாம்.
    • அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    எப்படி புற்று நோய் உடலுக்கு கெடுதலோ அதுபோல தீவிரவாதம் என்பது தேசத்தின் புற்று நோய். அதை அப்படியே  விட்டு விட்டால், அது தேசம் முழுவதும் பரவி விடக் கூடாது. அதனால்தான் என்.ஐ.ஏ.அலுவலகம் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

    மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் தீவிரவாதத்தையும், தீவிரவாத முயற்சிகளையும் கட்டுப்படுத்த முடியும். ஆகவே இதில் அரசியல் புகுத்தாமல், எந்த சமூகத்தை சார்ந்தவர், எந்த இயக்கத்தை சார்ந்தவர் எந்த பின்புலத்தை சார்ந்தவர் என்று இல்லாமல் தீவிரவாதத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும். அப்போதுதான் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பாதுகாப்பை தர முடியும். ஒட்டுமொத்தமாக தீவிரவாதம் இல்லாத பாரத தேசம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வெளிநாடுகளில் எல்லாம் இரண்டு முதல் 4 மொழிகள் அரசாட்சி மொழியாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு தமிழிசை கூறியதாவது:

    சிதம்பரம் இன்னைக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா...நேற்றுதான் வந்தாரா...முந்தாநாள் வந்தாரா...பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட அரசாங்கத்தில் அங்கமாக அவர் இருந்து வந்துள்ளார். இதை ஏன் அன்றைக்கு அவர் சிந்திக்கவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் பல நடைமுறைகளை செயல்படுத்தி இருக்கலாம். அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பதுதான் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன், நான் அந்த முயற்சியில் ஈடுபட்டேன்.
    • தமிழ் வழியில் மருத்துவ கல்விக்கான புத்தகம் தயாரிக்க குழு அமைக்கப்படும்.

    புதுச்சேரியில் நடைபெற்ற மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழாவில் பங்கேற்ற துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- புதுச்சேரியில் தமிழில் மருத்துவக் கல்வியை கொண்டு வர முதலமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை செய்து குழு அமைக்கப்படும்.

    மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வியை கொண்டு வந்தது போல், தமிழிலும் மருத்துவக் கல்வியை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழுமையாக தமிழ் மருத்துவக் கல்லூரியை கொண்டு வர முடியாவிட்டாலும், விருப்பப்பட்டவர்கள் தமிழ் வழியில் படிப்பதற்கு புத்தகம் தயாரிப்பதற்காக குழு அமைக்கப்படும்.

    சுமார் 6 மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரி புத்தகங்களை தமிழில் தயாரிப்பதற்கு அத்தனை முயற்சிகளும் எடுக்கப்படும். ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன், நான் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தாய் மொழியான நம் தமிழ் மொழி மருத்துவக் கல்வியை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும், ஒரு மருத்துவர் என்ற முறையில் செய்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அகில இந்திய தேர்வுகளை எதிர் கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம்.
    • மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள்.

    தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழசை சௌந்தராஜன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 

    தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தேசிய கல்வி கொள்கையில் குறைபாடுகள் இருந்தால் அதை அரசிடம் சுட்டிக் காட்டலாம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சொல்வது சரியானதாக இருக்காது.

    தேசிய கல்விக் கொள்கையை அரசியலாக்க வேண்டாம் என்றே நான் சொல்கிறேன். அனைவருக்கும் ஒன்றுபட்ட சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை தயார் செய்வது அவசியம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    அதை முழுவதும் படித்து விட்டு எதனால் மறுக்கிறீர்கள் என்று கருத்து சொல்ல வேண்டும். மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து குழு அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்ட பின்னரே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது பள்ளி குழந்தைகளின் மேம்பாட்டிற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகள் தேர்வு எழுத தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
    • முன்னணி நடிகர்களும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கி வருகிறார்.

    தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பயனாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார் இதில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். 


    மேலும் சிரஞ்சீவி அறக்கட்டளை சார்பில் இதுவரை 9,30,000 யூனிட் இரத்தம் மற்றும் 4,580 ஜோடி கண்தானம் செய்ததற்காக அப்போது ஆளுநர் பாராட்டு மற்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.

    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து வரும் சிரஞ்சீவியை பின்பற்றி மற்ற முன்னணி நடிகர்களும் ஏழை, எளிய கலைஞர்களுக்கும், மக்களுக்கும் உதவ வேண்டுமென தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்கிறார்.
    • மத்திய மந்திரிகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பு.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று நினைவு தபால் தலையை வெளியிடுகிறார். தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இதைப் பெற்றுக் கொள்கிறார்.

    மத்திய தகவல் தொடர்பு துறை இணை மந்திரி தேவுசிங் ஜெய்சிங்பாய் சவுகான், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி, தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

    மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவர் எஸ்.ராஜேந்திர குமார் மற்றும் மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

    • பகவான் கிருஷ்ணர், அன்பு, இரக்கம், நீதி மற்றும் கடமை ஆகியவற்றின் பெருமதிப்பை கற்றுக் கொடுத்தார்.
    • கிருஷ்ணரின் போதனைகள் பல தலைமுறைகளைக் தாண்டி இன்றும் பொருந்துவதாக இருக்கிறது.

    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், தமிழ்நாடு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகவான் கிருஷ்ணர், பல்வேறு அவதாரங்களாலும், வாழ்க்கை நிலைகளாலும், அன்பு, இரக்கம், நீதி மற்றும் கடமைகள் ஆகியவற்றின் பெருமதிப்பை நமக்கு கற்றுக் கொடுத்தார்.

    உலக நன்மைக்காக, அடுத்த 25 ஆண்டுகளில் இந்திய நாட்டை ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுகின்ற பணியில் நம் நாடு அடியெடுத்து வைத்திருக்கும் இந்தப் பொற்காலத்தில், அறவாழ்வுக்கான ஒரு வழியாக, முழுமையாகவும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் நமது கடமையை மேற்கொள்ள வேண்டும் என்கிற அவரது செய்தி, இன்று நம் அனைவருக்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது.

    இந்த நன்னாளில், உலகின் வழிகாட்டியாகப் பரிணமிக்கவுள்ள நம் தேசத்தின் விழுமிய லட்சியத்தை நிறைவேற்றுவதற்கு, நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு, நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது 


    பகவான் கிருஷ்ணர், அன்பு, இரக்கம், நீதி மற்றும் கடமை ஆகியவற்றின் பெருமதிப்பை நமக்கு கற்றுக் கொடுத்தார்.தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிகளைச் செய்வதுதான் நமது கடமை. அதன் முடிவுகளை இறைவனிடத்தில் விட்டுவிட வேண்டும் என்ற தத்துவத்தை போதித்தவர் ஸ்ரீகிருஷ்ண பகவான்.

    கிருஷ்ணரின் போதனைகள் பல தலைமுறைகளைக் தாண்டி இன்றும் பொருந்துவதாக இருக்கிறது. நாம் நம்முடைய கடமையை நேர்மையாகவும், அர்ப்பணிப்போடும், விருப்பு-வெறுப்பு இல்லாமலும் செய்வதற்கு நமக்கு வழிகாட்டி வருகிறது.

    பகவான் ஶ்ரீகிருஷ்ணர் நமக்கு காட்டிய உண்மை, நேர்மை ஆகிய பாதைகளை பின்பற்றி சமூகத்திற்கு நாம் தன்னலமற்ற சேவை செய்ய வேண்டும். இந்த இனிய நாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும், வளமும், ஒற்றுமையும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×