search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை பறிப்பு"

    • கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.
    • புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடு த்து மல்லியம்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது ஊரில் இருந்து புளியம்பட்டி வார சந்தைக்கு காய்கறி பொருட்களை வாங்க வந்துள்ளார்.

    பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு மல்லியம்பட்டி க்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் சிறிது நேரம் அமர்ந்துள்ளார். இதனையடுத்து பொன்னம்மாள் தனது ஊர் செல்வதற்கு அரசு பஸ் வந்தவுடன் அதில் ஏறி டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு தலை சுத்தி மயக்கம் வந்ததாக கூறுபடுகிறது.

    உடனே அருகில் இருந்தவர்கள் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். பின்பு சிறு தூரம் சென்றதும் மூதாட்டி மயக்கம் தெளிந்து பார்த்த பொழுது பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது அவருக்கு தெரிய வந்தது. பதட்டம் அடைந்த மூதாட்டி அலறினார்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகள், டிரைவர், கண்டெக்டர் உட்பட அனைவரும் தேடி பார்த்தபோது நகை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மூதாட்டி பொன்னம்மாள் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் பஸ் நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விடுதி பெண் காப்பாளரிடம் நகை பறிப்பு முயற்சி-2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் எம்.ரெட்டியப்பட்டி அருகே யுள்ள சிலுக்கப்பட்டி பகுதி யில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த அரசு பெண்கள் மேல்நி–லைப்பள்ளி விடுதி காப்பா ளர் சுப்புலட்சுமி (வயது 58) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கள் நகை பறிப்பு முயற்சி யில் ஈடுபட்டனர்.

    சுதாரித்துக்கொண்ட அவர் நகையுடன் தப்பினார். இதுகுறித்து எம். ரெட்டியப் பட்டி போலீசில் சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள ஒரு சி.சி.டி.வி. காட்சிப்பதிவு களை கொண்டு நகை பறிப்பு சம்பவத்தில் ஈடு பட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு வாலிபர் களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட தில் அவர்கள்தான் பெண் விடுதி காப்பாளர் சுப்பு லட்சுமியுடம் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் ரெட்டையூரணி பகுதியை சேர்ந்த யுவஸ்ரீதர் (23), பரமக்குடி மணிநகர் பகுதி யைச் சேர்ந்த ஆதீஸ்வ ரன் (18) என்பதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கலைவாணி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • கண்காணிப்பு காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள செந்தில் ஜனதா நகரை சேர்ந்தவர் கலைவாணி (வயது 65).

    இவர் இன்று அதிகாலை உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து தப்பி சென்றார்.

    இது குறித்து கலைவாணி சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா க்களில் பதிவான காட்சி களை ஆய்வு செய்தனர்.

    அதில் அதிகாலை 3.05 மணிக்கு வரும் டிப்டாப் உடை அணிந்து வரும் வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் நிறுத்தப்ப ட்டிருந்த ஆட்டோவிற்குள் ஏறி அமர்ந்து கொள்கிறார்.

    3.40 மணி அளவில் வீட்டு வாசலில் கோலம் போட்ட கலைவாணியிடம் இருந்து செயினை பறித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதனை வைத்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார்.
    • 2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ (வயது 37). இவர் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழில்போட்டி காரணமாக வியாபாரியை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு கும்பல் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 43). இவர் மினி வாகனம் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வருகிறார். வேடசந்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறார். இவருக்கும் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தண்ணீர் நிறுவனத்திற்கும் இடையே தொழிற் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் ஜெயராமன் தண்ணீர் வண்டியுடன் லைனுக்கு சென்றார். கேதையறும்பு அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து எங்கள் பகுதியில் தண்ணீர் சப்ளை செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஜெயராமனை சரமாரியாக தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடினர். இதனையடுத்து காயமடைந்த ஜெயராமனை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியானதால் அந்த வழியாக சென்றவர்கள் உதவி செய்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை அருகே உள்ள குரும்பபாளையம் வையாபுரி நகரை சேர்ந்தவர் தேசிகன். இவரது மகன் அருணகிரிதரன் (வயது 23). இவர் தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் எம்.பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சரவணம்பட்டியில் உள்ள நண்பர்களை பார்ப்ப தற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிள் கோவை- சத்தி ரோட்டி கரட்டுமேடு அருகே சென்ற போது பெட்ரோல் காலியானது.

    இதனையடுத்து அருண கிரிதரன் மோட்டார் சைக்கிளை தள்ளிச் சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அருணகிரிதரனுக்கு உதவி செய்தனர்.

    அவர்கள் மோட்டார் சைக்கிளை டோக் செய்து சென்றனர். அப்போது அவர் அருணகிரிதரன் கழுத்தில் அணிந்து இருந்த 1 அரை பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி செய்வது போல நடித்து கல்லூரி மாணவரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • பார்வதி (வயது 60) சம்பவத்தன்று இவர் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையம் வந்தார்.
    • அங்கு வேலையை முடித்து மீண்டும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார்.

    சேலம்:

    சேலம் ஒமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி பார்வதி (வயது 60) சம்பவத்தன்று இவர் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு வேலையை முடித்து மீண்டும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார். அப்போது கருப்பூர் அருகே சென்றபோது அவரது கழுத்தில் இருந்த 2½ பவுன் செயின் மாயமானது. இதனால் பதறிபோன பார்வதி கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்வதி அருகில் இருந்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் வாலிபரை மிரட்டி நகையை பறித்து சென்றவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்க ரையை சேர்ந்தவர் மாரிமுத்து (32). இவர் தனது குழந்தைக்கு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், ராஜேஸ், சவுந்தர் ஆகியோர் குடிபோதையில் அவரை வழிமறித்து பணம் கேட்டனர்.

    அதற்கு மாரி முத்து பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தனர்.

    மேலும் இதுகுறித்து யாரிட மும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த மாரி முத்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை காதலிப்பதாக கூறி வலை வீசியுள்ளனர்.
    • பெண்ணிடம் மிரட்டி 600 கிராம் தங்க நகை, ரூ.35 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.

    கூடலூர்:

    இடுக்கி மாவட்டம் கட்டப்பணையைச் சேர்ந்தவர் மேத்யூ ஜோஸ் (வயது 36). ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் குமுளி செங்கரையைச் சேர்ந்த ஷகிர் (24) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை காதலிப்பதாக கூறி வலை வீசியுள்ளனர்.

    இதில் திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களும் இவர்கள் வலையில் விழுந்துள்ளனர். அவர்களை தங்கள் இடத்துக்கு வரவழைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து பின்னர் அதனையே அவர்களிடம் காட்டி பணம் பறிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தனர்.

    கடந்த ஜூன் மாதம் அரியானாவைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் 2 பேரும் நட்பாக பழகி பின்னர் தங்கள் வலையில் விழ வைத்தனர். அந்த பெண்ணை குமுளிக்கு வரவழைத்து லாட்ஜில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    மேலும் அதை வீடியோவாக எடுத்து அந்த பெண்ணிடம் மிரட்டி 600 கிராம் தங்க நகை, ரூ.35 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் குமுளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விசாரணை அதிகாரிகளாக இருந்த குமுளி இன்ஸ்பெக்டர் அனுப்மோன், டி.எஸ்.பி. குரியாகோஸ் ஆகியோர் குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதை அறிந்ததும் அவர்கள் டெல்லிக்கு தப்பி ஓடினர். இருந்த போதும் அவர்கள் செல்போன் எண்களை ட்ரேஸ் செய்து 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் கடந்த மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது டி.எஸ்.பி. குரியாகோஸ் என்பவரையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் அறிமுகம் ஆனார்.

    புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு மாதவரம் தட்டாங்குளம் ரோட்டை சேர்ந்த சந்திப் சோலாங்கி (23) என்பவர் கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் அறிமுகம் ஆனார்.

    இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இந்த நிலையில் மாணவியிடம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பரப்புவதாக சோலாங்கி மிரட்டல் விடுத்து 10 பவுன் நகை வாங்கியதாக தெரிகிறது.

    மேலும் அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஏழுமலையான் நகர் பகுதியை சேர்ந்தவர் ரதிகுமாரி. இவர் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணி செய்து வருகிறார். நேற்று இரவு அவர் மகளுடன் அருகில் தாய் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார். ஏ.ஏ.எம். நகர் அருகில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென ரதிகுமாரியை தாக்கி அவர் அணிந்து இருந்த நகையை பறித்தனர்.

    இதில் நகை அறுந்ததில் 3 பவுன் செயினுடன் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்
    • இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இரணியல் :

    இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கில் ஜெயிலில் இருந்த ஒரு நபரை நீதிமன்றம் அனுமதி பெற்று காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அப்போது அவர் தலக்குளம், கள்ளியங்காடு பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்டவர் என தெரிய வந்தது. விசாரணையில் அவர் முளகுமூடு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின் ராஜ் (வயது 42) என்பதும், திருவட்டார் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டபோது கொலை செய்தது தெரியவந்தது. மேலும் நாகர்கோவில் பிரபல துணிக்கடையின் பின்புறம் நடந்த செயின் பறிப்பு வழக்கில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கில் சம்பந்தப்பட்ட விபரம் தெரியவந்தது. அவரை இரணியல் நீதிமன்றம் முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    ×