மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார்.2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ (வயது 37). இவர் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com