search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்த்தாண்டம் அருகே"

    • பொதுமக்கள் பிடித்து போலீசில ஒப்படைத்தனர்
    • தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு தொடுகுளம் பகுதியை சேர்ந்தவர் லேகா (வயது44). இவர் நட்டாலம் தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று தபால் நிலையத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக மாமூட்டுகடை - பாண்டியன் விளைச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நெட்டி யான்விளை பகுதியில் வைத்து, லேகாவின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் பதிவு எண் இல்லாத இருசக்கர வாக னத்தில் வந்து கொண்டிருந்த மர்ம நபர், திடீரென அவரது மோட்டார் சைக்கிளில் மோதி கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லேகாகத்தி கூச்சலிட்டுள்ளார்.

    உடனே உஷாரான அந்த மர்மநபர், லேகாவின் கன்னத்தில் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி கீழே தள்ளி விட்டு, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கத்தாலி செயினை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென் றுள்ளார். இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள், அவரை துரத்தி பிடித்தனர்.

    பின்பு அவருக்கு தர்ம அடி கொடுத்து மார்த்தாண் டம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐரேனிபுரம் ஆரியூர் கோணம் சங்கர்(33) என்பதும், மரவேலை செய்து வருபவர் எனவும் தெரியவந்தது.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், பறித்த தாலி செயினை பொதுமக்கள் துரத்திய போது அங்கு ஒரு தோப்பில் வீசி விட்டதாக தெரி வித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்தனர். அவர் தூக்கி வீசப்பட்ட தாலி செயினை தேடி வருகின்றனர் .

    • மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது
    • இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது

    நாகர்கோவில் : மார்த்தாண்டம் நல்லூர் காரவிளை பகுதியில் ஒரு பிரிவினரின் கல்லறை இருந்து வருகிறது. அந்த கல்லறைக்கு வழி சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தக்கலை சப்-கலெக்டருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவினரையும், தக்கலை சப்-கலெக்டர் கவுசிக் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விசாரணைக்கு ஒரு தரப்பினார் ஆஜ ராகி உள்ளனர். மறு தரப்பினர் விசாரணைக்கு ஆஜரா காததால், ஆஜராகா தவர்களை பிடித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், மார்த்தாண்டம் போலீசார் ஒரு தரப்பை சேர்ந்த தங்கப்பன் என்பவரை பிடித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து தங்கப்பனின் ஆதரவாக ஒரு தரப்பினர், போலீஸ் நிலை யத்தில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட னர். 

    • மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார்.
    • 2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே ஞாறான்விளை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்தவர் ராஜஸ்ரீ (வயது 37). இவர் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வில் வாழைநார் பயிற்சி வகுப்பிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜஸ்ரீயின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×