search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewel stolen"

    • கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.
    • புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடு த்து மல்லியம்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது ஊரில் இருந்து புளியம்பட்டி வார சந்தைக்கு காய்கறி பொருட்களை வாங்க வந்துள்ளார்.

    பின்னர் பொருட்களை வாங்கிவிட்டு மல்லியம்பட்டி க்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் சிறிது நேரம் அமர்ந்துள்ளார். இதனையடுத்து பொன்னம்மாள் தனது ஊர் செல்வதற்கு அரசு பஸ் வந்தவுடன் அதில் ஏறி டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தார். அப்போது அவருக்கு தலை சுத்தி மயக்கம் வந்ததாக கூறுபடுகிறது.

    உடனே அருகில் இருந்தவர்கள் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். பின்பு சிறு தூரம் சென்றதும் மூதாட்டி மயக்கம் தெளிந்து பார்த்த பொழுது பொன்னம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது அவருக்கு தெரிய வந்தது. பதட்டம் அடைந்த மூதாட்டி அலறினார்.

    அப்போது பஸ்சில் இருந்த பயணிகள், டிரைவர், கண்டெக்டர் உட்பட அனைவரும் தேடி பார்த்தபோது நகை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மூதாட்டி பொன்னம்மாள் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையம் சென்று தனது தங்க சங்கிலி நகை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் பஸ் நிலையம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விநாயகர் கோவிலுக்கு வந்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
    • வழக்கு பதிவு செய்து உடுமலை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை யசோதா ராமலிங்கம்லே அவுட்டை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 80). இவர் காந்திநகரில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வந்துவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த இரண்டு பேர் அவருடைய கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இது குறித்து ராஜம்மாள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உடுமலை போலீசார் மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மூதாட்டியிடம் செயின் பறித்துள்ளனர்
    • மிட்டாய் கடை ஒன்று நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    திருச்சி புலிவலம் வேங்கை மண்டலம் அம்பலக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி சீதா (வயது 76). இந்த மூதாட்டி மூவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகாமையில் மிட்டாய் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஒரு வாலிபர் பிஸ்கட் வாங்க வந்தவர் போல் நடித்து அந்த மூதாட்டி அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்து விட்டார்.

    வழக்கம்போல் கடையில் சீதா உட்கார்ந்து இருந்தபோது ஒரு வாலிபர் அங்கு வந்தார். பின்னர் அவர் ஒரு பிஸ்கட் பாக்கெட் கேட்டார். அந்த மூதாட்டி பிஸ்கட்டை எடுக்க திரும்பிய போது அந்த வாலிபர் மூதாட்டியின் வாயை கையால் பொத்தி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தார். அடுத்த நொடி அங்கு தயாராக நின்ற வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் இரு ஆசாமிகளும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீதா புலிவலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் நகையை பறித்து சென்றார்.
    • சின்னக்கோட்டக்குப்பம் ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டையில் பட்டப்பகலில் நடந்து சென்ற மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் நகையை பறித்து சென்றார்.

    புதுவையை அடுத்த தமிழகப்பகுதியான சின்னக்கோட்டக்குப்பம் ரெயின்போ கார்டன் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கலியம்மாள் (வயது 67). ஓய்வு பெற்ற தபால் அதிகாரி. நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் மதியம் லாஸ்பேட்டையில் உள்ள தனது மகளை பார்க்க கலியம்மாள் வீட்டில் இருந்து நடந்து வந்தார்.

    சாமிப்பிள்ளை தோட்டம் ஆதிசங்கர் வீதியில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் திடீரென கலியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்தான். கலியம்மாள் அதிர்ச்சியடைந்து அலறல் சத்தம் போடுவதற்குள் அந்த வாலிபர் செயினுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டான்.

    இதனால் செயினை பறிகொடுத்த கலியம்மாள் இது குறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 10 கிராம் எடையுள்ள செயினை பறித்தனா்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரை சோ்ந்தவா் செல்லப்பா மகள் சூரியா. இவா் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தா். அப்போது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் சூா்யா கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் எடையுள்ள செயினை பறித்தனா். இதைகண்ட சூா்யா கூச்சலிட்டாா். அதற்குள் செயினை பறித்த திருடா்கள் அங்கியிருந்து தப்பி ஓடி விட்டனா். இதுகுறித்து சூா்யா மழையூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து வழக்குபதிவு செய்த மழையூா் காவல் உதவி ஆய்வா ளா் ரவி, செயினை பறித்த திருடா்களை தேடிவருகிறாா்.

    • கணவருடன் பைக்கில் சென்ற மனைவியின் கழுத்தில் கிடந்த நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வன்னிமடை பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி (வயது 42).

    இவர் சம்பவத்தன்று தனது கணவருடன் அருப்புக்கோட்டை அஜித்நகரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.

    அருப்புக்கோட்டை-பந்தல்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்தனர்.

    ராமசாமி விலக்கு பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் மாரீஸ்வரியிடம் சேலை சக்கரத்தில் சிக்கி இருப்பதாக கூறியுள்ளனர். இதனை நம்பி கணவன்-மனைவி மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் நிறுத்தினர்.

    அப்போது மர்ம நபர்கள் திடீரென்று மாரீஸ்வரி கழுத்தில் கிடந்த 2 பவுன் 4 கிராம் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×