search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி"

    • கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார்.
    • கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கால சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துண்டி (வயது 53) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குரால் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிக்கும் தமிழ்ச்செல்வன் நிலத்தில் உள்ள கிணற்றின் ஓரத்தில் இருந்த செடிகளை துண்டி வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தவரை அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து தூக்கிப் பார்த்த போது துண்டி இறந்து விட்டார் என தெரியவந்தது. இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாகராஜ் வீட்டிற்கு செல்லவில்லை.
    • போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடுகுளிகுண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது42) கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் கடலூர் ஆல்பேட்டை பெண்ணையாறு மேம்பாலம் பணிக்கு வந்தார். வேலை முடிந்து கடந்த மாதம் 29-ந் தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். ஆனால் நாகராஜ் வீட்டிற்கு செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கோவிந்தம்மாள் கடலூர் புதுநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    • வீட்டை விட்டு பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
    • மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    குழித்துறை :

    மார்த்தாண்டம் போலீஸ நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு சங்கரம்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துநாயகம் (வயது 85), தொழிலாளி. இவர் வீட்டை விட்டு பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் இவரது மகன் ஜேம்ஸ் (51) ,வாடகை வீட்டில் தேடி சென்று உள்ளார். அப்போது முன் பக்க கதவு அடைத்திருந்துள்ளது, இதனால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டுள்ளார்.இதை எடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • குழந்தை இல்லாத விரக்தியிலும் இருந்துவந்தாராம்
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்

    என். ஜி. ஓ. காலனி :

    சுசீந்திரம் அருகே உள்ள தேவகுளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாலையப்பன் (வயது 59), தொழிலாளி.இவரது மனைவி லட்சுமி ( 50), தேவகுளம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆயா வாக பணிபுரிந்து வருகிறார்.

    மாலையப்பன் உடல்நிலை சரியில்லாமலும், குழந்தை இல்லாத விரக்தியிலும் இருந்துவந்தாராம். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி லட்சுமி, அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மாலையப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாலையப்பன் இன்று அதிகாலை பரிதாப மாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி லட்சுமி, சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் தாசன் (வயது 62). கூலி தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    அப்போது குடி போதையில் மது பானம் என நினைத்து ரப்பர் பால் உறைய வைக்கும் ஆசிட்டை குடித்து விட்டார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். அவரை அவர் மகன் சுஜின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்பு தாசன் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டீக்குடிக்க சென்ற போது பரிதாபம்
    • செந்தில்குமாரை தாக்கி கத்தியால் குத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலத்தில் இன்று அதிகாலையில் டீக்குடிக்க சென்ற கட்டிடத் தொழிலாளியை மர்மநபர்கள் வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவில் வீதியில் வசிப்பவர் செந்தில்குமார் (வயது 45). திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கட்டிடப் பணியாளரான இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அதே வீதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்ற போது, மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி, செந்தில்குமாரை தாக்கி கத்தியால் குத்தினர். இதில் மார்பு, இடுப்பு, வயிறு பகுதியில் காயமடைந்த செந்தில்குமார் ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்ய திட்டமிட்டனரா, அல்லது தொழில் போட்டியால் கொலை முயற்சி நடைபெற்றதா அல்லது குடும்பத் தகராறா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஓட்டலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது
    • குத்தி கொலை செய்யும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை பம்மத்தில் உள்ள ஓட்டலில் தென் தாமரைகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது50) மற்றும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    நேற்று மாலை 2 பேரும் பணியில் இருந்தபோது, சப்ளை செய்வதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்ப டுகிறது. இதில் ஆத்திர மடைந்த கணேசன், ஓட்ட லில் இருந்த கத்தியை எடுத்து ராதா கிருஷ்ணனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அதற்குள் ராதாகிருஷ்ணன் பரி தாபமாக இறந்துவிட்டார்.

    ராதாகிருஷ்ணன் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஓட்டலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    தப்பியோடிய கணேசனை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அவரை பல இடங்களில் தேடி வருகின்றனர்.

    கணேசனின் சொந்தஊர் ெநல்லை மாவட்டம் ஆலங்குளம் என்பதால், அவர் அங்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று தேடுதல் ேவட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    இதற்கிடையில் ஓட்டலில் ராதா கிருஷ்ணனை துரத்தி துரத்தி கணேசன் குத்தி கொலை செய்யும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • காவேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி குப்பம்மா (40). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.
    • வளையபட்டி-தூசூர் சாலையில் உள்ள குருப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா பீமநாயக்கனூர் காவேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி குப்பம்மா (40). இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேஷ் வளையபட்டி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். வளையபட்டி-தூசூர் சாலையில் உள்ள குருப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது நாய்கள் சாலையின் குறுக்கே திடீரென ஓடி வந்துள்ளது. இதை பார்த்த வெங்கடேஷ் பிரேக் போட்டதில் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கடேஷின் மனைவி குப்பம்மா மோகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • குழந்தைகளை பார்க்க வர கூடாது என்றும் கூறியதை தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
    • இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    இரணியல் :

    இரணியல் அருகே ஆளூர் தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). பீரோ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 வருடங்கள் முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.

    இந்த நிலையில் மணி கண்டன் அடிக்கடி குடித்து விட்டு மனைவி வீட்டிற்கு சென்று தகராறு செய்து வருவதாக ராஜாக்கமங்க லம் புகார் அளித்த தையும், குழந்தைகளை பார்க்க வர கூடாது என்றும் கூறியதை தொடர்ந்து மணிகண்டன் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்ப டுகிறது.

    நேற்று இரவு தனது தாயா ரிடம் வாழ பிடிக்க வில்லை என்று போனில் கூறிய மணிகண்டன் வீட்டிற்கு போகவில்லை. இதனை அடுத்து அவர்கள் அக்கம் பக்கம் தேடியபோது அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மணி கண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் செல்லத்தாய் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • நிலத்தில் கிழங்கு வெட்டுவதற்காக வேலைக்கு சென்றிருந்தார்.
    • பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கந்தன் இறந்துவிட்டதாக கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே தும்பை கிராமத்தை சேர்ந்தவர் கந்தன்(45) தொழிலாளி. இவர் கொசப்பாடி கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் கிழங்கு வெட்டுவதற்காக வேலைக்கு சென்றிருந்தார். அங்கு கிழங்கு வெட்டிக் கொண்டிருந்தபோது திடீரென கந்தன் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கந்தன் இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் கந்தன் மனைவி மாதவி அளித்த புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • இந்திய தூதரக முயற்சியால் சின்னையாவின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
    • வேலைதேடி வெளிநாடு சென்ற தொழிலாளி சடலமாக ஊர் திரும்பியது கிராம மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சின்னையா(45). கூலித்தொழிலாளி. இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மாரிச்செல்வம்(14), கவிவர்மன்(11), பிரநிஷா(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கம்பி கட்டும் வேலைக்காக ஈராக் சென்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி சின்னையா தற்கொலை செய்து கொண்டதாக மனைவி கோகிலாவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என நத்தம் தாசில்தார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

    இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பூங்கொடி உறுதி அளித்தார். இந்நிலையில் தன்னைபற்றி சிலர் அவதூறு பரப்பியதால் தற்கொலை செய்து கொண்ட வாட்ஸ்அப் மூலம் சின்னையா தகவல் அனுப்பியுள்ளார். இந்திய தூதரக முயற்சியால் சின்னையாவின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்தஊருக்கு வந்தது.

    சின்னையாவின் உடலை பார்த்து மனைவி கோகிலா மற்றும் குழந்தைகள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வேலைதேடி வெளிநாடு சென்ற தொழிலாளி சடலமாக ஊர் திரும்பியது கிராம மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கிங்ஸ்லின் சுதித் பரிதாபமாக இறந்தார்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே உள்ள அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் கிங்ஸ்லின் சுதித் (வயது 35), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கிங்ஸ்லின் சுதித் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து அவர் வெளியே சென்றார். அதன்பிறகு இரவில் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் கிங்ஸ்லின் சுதித் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்தவர்கள் அவரது உறவினர் சிங் என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து கிங்ஸ்லின் சுதித்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை கிங்ஸ்லின் சுதித் பரிதாபமாக இறந்தார். அவரது தாயார் லைசம்மாள் புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×