மார்த்தாண்டம் ஓட்டலில் தொழிலாளியை குத்திக் கொன்றவரை பிடிக்க போலீசார் தீவிரம்

ஓட்டலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியதுகுத்தி கொலை செய்யும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மார்த்தாண்டம் ஓட்டலில் தொழிலாளியை குத்திக் கொன்றவரை பிடிக்க போலீசார் தீவிரம்
Published on

குழித்துறை :

மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை பம்மத்தில் உள்ள ஓட்டலில் தென் தாமரைகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது50) மற்றும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

நேற்று மாலை 2 பேரும் பணியில் இருந்தபோது, சப்ளை செய்வதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்ப டுகிறது. இதில் ஆத்திர மடைந்த கணேசன், ஓட்ட லில் இருந்த கத்தியை எடுத்து ராதா கிருஷ்ணனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அதற்குள் ராதாகிருஷ்ணன் பரி தாபமாக இறந்துவிட்டார்.

ராதாகிருஷ்ணன் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஓட்டலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

தப்பியோடிய கணேசனை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அவரை பல இடங்களில் தேடி வருகின்றனர்.

கணேசனின் சொந்தஊர் ெநல்லை மாவட்டம் ஆலங்குளம் என்பதால், அவர் அங்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று தேடுதல் ேவட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

இதற்கிடையில் ஓட்டலில் ராதா கிருஷ்ணனை துரத்தி துரத்தி கணேசன் குத்தி கொலை செய்யும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com