என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
- குழந்தைகளை பார்க்க வர கூடாது என்றும் கூறியதை தொடர்ந்து மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
- இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை
இரணியல் :
இரணியல் அருகே ஆளூர் தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43). பீரோ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுக்கும் கடந்த 11 வருடங்கள் முன்பு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.
இந்த நிலையில் மணி கண்டன் அடிக்கடி குடித்து விட்டு மனைவி வீட்டிற்கு சென்று தகராறு செய்து வருவதாக ராஜாக்கமங்க லம் புகார் அளித்த தையும், குழந்தைகளை பார்க்க வர கூடாது என்றும் கூறியதை தொடர்ந்து மணிகண்டன் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்ப டுகிறது.
நேற்று இரவு தனது தாயா ரிடம் வாழ பிடிக்க வில்லை என்று போனில் கூறிய மணிகண்டன் வீட்டிற்கு போகவில்லை. இதனை அடுத்து அவர்கள் அக்கம் பக்கம் தேடியபோது அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மணி கண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் செல்லத்தாய் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.






