search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் விடுமுறை"

    • சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது.
    • திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர்.

    தென்காசி:

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் திங்கள் கிழமை விடுமுறை எடுத்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

    சென்னையில் வசிக்கும், லட்சக்கணக்கான தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே, தென்மா வட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான நெல்லை, பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சிறப்பு ரெயிலை தாம்பரம்-நெல்லை இடையே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்க இருக்கிறது.

    சென்னை முதல் நெல்லை வரை ஒரு வழிபாதை இருக்கும்போதும் ஒரே சிறப்பு ரெயில் தான் இயக்கப்பட்டது. தற்போது சென்னையில் இருந்து நெல்லை வரை இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் சூழலிலும் ஒரே ஒரு சிறப்பு ரெயில் இயக்குவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    குறைந்த கட்டணம், கழிப்பறை வசதி, நிம்மதியான தூக்கம், சரியான நேரம் ஆகியவற்றுடன் பாதுகாப்பானதும் என்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

    திட்டமிட்ட பயணம் என்றால், ரெயில்களில் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து விடுகின்றனர். அப்படியும் இணைய தளம் மூலம் ஆன்லைனில் அதிக அளவில் பதிவு செய்வதாலும், முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் இடங்கள் பூர்த்தியாகி விடுகின்றன.

    இதனால், தட்கல் டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு மையங்களில் காத்திருக்கும் சாமானியர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் நெரிசல் அதிகமாக உள்ள மார்க்கங்களில், கூடுதல் ரெயில்கள் விட்டால் நன்றாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    இதுகுறித்து தென்காசியை சார்ந்த ரெயில் பயணிகள் கூறுகையில்,

    தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பில் 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் ஒரே ஒரு ரெயிலை மட்டும் இயக்குவது வேதனை அளிக்கிறது.

    சென்னையில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதிப்படும் நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழ மைகளில் சென்னையில் காலியாக இருக்கும் ரெயில் பெட்டிகளை பயன்படுத்தி தாம்பரத்திலிருந்து மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் சுதந்திர தினம் முடிந்து சென்னை செல்வதற்கு செவ்வாய் கிழமை நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.

    தற்போது சென்னை- நெல்லை இடையே கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு எந்த ஒரு இடையூறும் இல்லை என்பதால் சிறப்பு ரெயில்கள் அதிகமாக இயக்க முடியும். எனவே பயணிகளின் நலன் கருதி தென்னக ரெயில்வே கூடுதல் சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அலைமோதும் பயணிகள் கூட்டத்தை பார்த்ததும் விமான நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.
    • பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படும்.

    சென்னை:

    விமானம் மட்டும் உயரே உயரே பறப்பதில்லை. அதன் கட்டணமும் உயரே உயரே பறந்து கொண்டிருக்கிறது.

    வருகிற திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் லீவு போட்டால் போதும் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், விடுமுறையை கொண்டாட செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு ஏராளமானோர் செல்கிறார்கள்.

    இந்த இடங்களுக்கு செல்லும் ரெயில்கள் எதிலும் டிக்கெட் இல்லை. இதனால் உள்ளூர் விமானங்களுக்கு படையெடுக்கிறார்கள். அலைமோதும் பயணிகள் கூட்டத்தை பார்த்ததும் விமான நிறுவனங்களும் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளன.

    வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.5 ஆயிரம் வரை தான் கட்ட ணம் இருக்கும். ஆனால் இப்போது ரூ.16 ஆயிரம். இதேபோல் திருவனந்தபுரத்துக்கு அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் கட்டணம் இருந்தது. இப்போது ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கும் சாதாரணமாக ரூ.5 ஆயிரம் தான் கட்டணம். தற்போது ரூ.15 ஆயிரம். இதேபோல் தூத்துக்குடிக்கும் ரூ.12 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு பற்றி விமான நிறுவனங்கள் ஏஜென்சிகளிடம் விசாரித்தபோது, பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்படும். மதுரையை பொறுத்தவரை கோர்ட்டுக்கு செல்பவர்கள், முக்கிய பிரமுகர்கள் செல்வது என்று வரவேற்பு அதிகமாகவே இருப்பதால் இந்த கட்டணங்கள் சமீப காலமாக உயர்ந்தே இருக்கிறது.

    கட்டணம் உயர்வாக இருந்தாலும் எந்த விமானத்திலும் டிக்கெட் இல்லை என்பதுதான் நிலைமை என்றனர்.

    • தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
    • சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    அரசு பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

    வருகிற 28-ந்தேதியுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவதால் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் என கடந்த 2 வார இறுதியிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலித்தனர். அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வசதி இல்லாத ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

    அரசு பஸ்களிலும் தற்போது கூட்டம் அதிகரித்து வருகிறது. கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் அரசு பஸ்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். மே மாதத்தில் பயணம் செய்ய மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மே தினம் 1-ந்தேதி (திங்கட் கிழமை) அரசு விடுமுறை நாட்களான வருகிற 29 (சனிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) 30-ந் தேதியை அடுத்து வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.

    இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். 3 நாட்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து இருப்பதால் பிற போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.

    இன்னும் 1½ மாதத்திற்கு பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதக்கூடும். அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், 'முன்பதிவு அதிகரித்ததால் பிற போக்குவரத்து கழகத்தின் மூலம் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். அதனால் முன்பதிவை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

    • கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர்மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகனநிறுத்தும் இடங்கள் நிரம்பி வழிந்தன.
    • மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது

    திருப்பூர் :

    வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்ற பெருமை திருப்பூருக்கு உண்டு. இங்கு வருகிறவர்களுக்கு உடனுக்குடன் பின்னலாடை நிறுவனங்களில் வேலையும் கிடைத்து விடும். இதனால் திருப்பூருக்கு தினமும் வேலை தேடி பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் எல்லாம் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். மற்ற நாட்களில் திருப்பூரில் தங்கியிருப்பார்கள்.

    இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் பலரும் தங்களத சொந்த ஊர்களுக்கு சென்றனர். 5 நாட்கள் வரை தொடர் விடுமுறை என்பதால், தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதுபோல் வெளியூர்களுக்கு சென்ற பலரும் தங்களது வாகனங்களை பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி சென்றதால், வாகன நிறுத்தும் இடங்களும் நிரம்பி வழிந்தன. இதுபோல் வாகன நிறுத்தும் இடங்களில தரை தளம் சரியாக இல்லாமல் மண் தளமாக இருப்பதால், மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தரைதளங்களை சீரமைத்து சரியான முறையில் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.

    அதோடு, புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட தொடர் விடுமுறை, கோடை விடுமுறையிலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிவார்கள், இந்த ஆண்டு சனி, ஞாயிறு, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என விடுமுறை விடப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதலே புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அண்டை மாநிலம் மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்தனர்.

    இதனால், மணக்குள விநாயகர் கோவில், கடற்கரை சாலை, படகுத்துறை, பூங்காக்கள், அரவிந்தர் ஆசிரம்,பிரெஞ்சு குடியிருப்பு பகுதி என அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளை காண முடிந்தது.

    பயணிகள் அதிக வருகையால் புதுவையில் சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை அறைகள் இல்லை. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விடுதி அறைகள் கிடைத்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்டுகள் அனைத்தும் நிரம்பியது.

    இதனால் பல சுற்றுலா பயணிகள் அறை கிடைக்காமல் தவித்தனர். புதுவை மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்ள விடுதிகளுக்கு படையெடுத்தனர். இன்னும் சிலர் புதுவையில் தங்க முடியாமல் அருகிலுள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், கடலூரில் தங்கி புதுவைக்கு வந்தனர்.

    • விவேகானந்தர் மண்டபத்தை ஒரேநாளில் 6 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
    • படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுதந்திர தினத்தையும் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    அவர்களை கவரும் வகையிலும், சுதந்திர தினத்தை முன்னிட்டும் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மற்றும் காமராஜர் நினைவு இல்லங்களில் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேசியக் கொடியில் உள்ள மூவர்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்தது.

    இதனை ரசித்துப் பார்த்த சுற்றுலா பயணிகள், சூரியன் உதயமாகும் காட்சியையும் பார்த்து மகிழ்ந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.தொடர்ந்து விவேகா னந்தர் நினைவு மண்ட பத்தை பார்வையிட்டனர்.

    இங்கு சுதந்திர தின விழாவை முன்னிட்டு 310 தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன. இதனையும் சுற்றுலா பயணி கள் பார்த்து ரசித்தனர்.

    கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 10-30 மணிக்கு பிறகே படகு போக்குவரத்து தொடங்கிய தால் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்து அதன்பிறகு மண்டபத்தை பார்வையிட்டனர்.

    நேற்று ஒரே நாளில் விவேகானந்தர் மண்ட பத்தை 6 ஆயித்து 100 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு உள்ளனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்,திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

    • சென்னை கோய ம்பேடு பஸ் நிலையம் உட்பட பல்வேறு பஸ் நிலை யங்களில் பொது மக்களின் கூட்டம் அலை மோதியது.
    • இரவு நேரம் சிற்றுண்டிகளில் விற்பனை அதிகமாக இருந்தது.

    விழுப்புரம்:

    நாடு முழுவதும் 75- வது சுதந்திர தின விழா வருகிற 15-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு சிறப்பம்சங்கள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுதந்திர தின விழாவிற்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அரசு அறிவித்துள்ளது. மேலும் அரசு விடுமுறை அளித்தது போல் வங்கிகள் மற்றும் பிரபல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளது. இந்தத் தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக பல்வேறு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு நேற்று மாலை முதலே புறப்பட்டு சென்றனர். இதனால் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் உட்பட பல்வேறு பஸ் நிலையங்களில் பொது மக்களின் கூட்டம் அலை மோதியது. இதே போல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில்வே ஜங்ஷன்களில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலைய த்தில் பயணிகளின் எ ண்ணிக்கை அதிகமானதால் பஸ்களில் ஒருவருக்கொருவர் முண்டி அடித்து கொண்டு ஏறினர். மேலும் இந்த தொடர் விடு முறை எதிரொலியாக சென்னை யில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி, சேலம் ,மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊருக்கு ஏராள மான அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று இரவு முழுவதும் சென்றது. இதனால் சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இருக்கும் நான்கு சுங்க சாவடிகள் வரை பஸ்களில் கார்களில் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொது மக்களின் நீண்டதூரம் வரிசை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேலாக இருந்தது. மேலும் நேற்று மாலை முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமானதால் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரம் சிற்றுண்டிகளில் விற்பனை அதிகமாக இருந்தது. குறிப்பாக நெடுஞ்சா லைத்துறை சிற்றுண்டிகளில் கூட்டம் அலைமோதியது. தொடர் விடுமுறை எதிரொலியால் பஸ்,ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் இரவு வீசிய குளிர்ந்த காற்று இதமான சூழ்நிலையை ரசித்தபடி பயணிகள் அனை வரும் பஸ்களில் கார்களில் பயணித்தனர். 

    ×