search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்பவனி"

    • உத்திரிய மாதா ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரை மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா கடந்த 6, ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மாதா கோவிலின் முக்கிய திருவிழாவான தேர்பவனி நேற்று விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேரினை மகாராஷ்டிர மாநிலம் மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவ பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.

    தேரானது வேளாங்கண்ணி கடற்கரை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றபொழுது இருபுறமும் நின்றிருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித உத்திரியமாதா,செபஸ்தியர், அந்தோணியர் ஆகிய தேர் மீது மலர்களை தூவி தங்க ளுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

    • தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன
    • தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது.

    குன்னூர்,

    குன்னூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு தேர்பவனி திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து புனித அந்தோணியார் சர்ச்சில் இருந்து தேவாலயம் வடிவமைப்பில் தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் திருவுருவ சிலையுடன் தேர்பவனி நடந்தது. அந்தோனியார் கோவிலில் தொடங்கிய தேர்பவனி குன்னூர் மவுண்ட் ரோடு, ஒய்.எம்.சி கார்னர், மார்க்கெட், டாக்சி ஸ்டாண்ட், பஸ் நிலையம் வழியாக மீண்டும் மவுண்ட் ரோடு வந்து தேவாலயம் சென்றடைந்தது. குன்னூர் அந்தோணியார் தேர்பவனியில் இந்துக்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தேரானது முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
    • பக்தர்கள் ஆடு, மாடுகளை காணிக்கையாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த கோகூரில் ஆங்கிலேயர்க ளால் கட்டப்பட்ட நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்தோணி யார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டுத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும். இந்த ஆண்டுக்கான ஆண்டுத் திருவிழா கடந்த ஜூன்6-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நடைபெற்றது. இதனையொட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அந்தோணியார், மாதா, சம்மனுசு ஆகியோர் எழுந்தருளினர்.

    முன்னதாக, ஆலய பங்குத்தந்தை தேவ சகாயம் தலைமையில் நவநாள், ஜெபம் உள்ளிட்ட சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. பின்னர் சப்பரத்தை புனிதம் செய்து துவக்கி வைத்தார். ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய சப்பரம் வாத்திய இசை முழக்கத்தோடு முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் பல்லாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சாம்பிராணி சட்டியை கையில் ஏந்திய படியும், ஆடு மாடு உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கியும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இந்த தேர் பவனியில் சுற்று வட்டாரமின்றி வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரம் கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று புனித அந்தோணியாரை வழிப்பட்டனர்.

    • மதுரை கரிமேடு அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது.
    • நாளை அன்னதானம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை கரிமேடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடந்தது.

    மாலையில் ஆலய பங்குத்தந்தை ஜோசப் தலைமையில் உதவி பங்குத் தந்தை சின்னதுறை, டி.நோபிலி பள்ளி முதல்வர் அருட்தந்தை அடைக்கல ராஜா, துணை முதல்வர் அருட்தந்தை ஆனந்த், மதுரை உயர்மறை மாவட்ட பணிக்குழுக்களின் செயலர் அருட்தந்தை சந்தியாகு ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.

    பின்னர் திருப்பலி முடிந்ததும் புனித அந்தோ ணியார் உருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனி நடந்தது. கரிமேடு மார்க்கெட், புதுச்சிறை வீதி, மேலப் பொன்னகரம் முக்கிய வீதி, ராஜேந்திரா மெயின் ரோடு, ஆரப்பா ளையம், ஞான ஒளிவுபுரம் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

    இன்று மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி நிறைவேற்றப்படும். அதன் பின்னர் கொடியிறக்கப் பட்டு திருவிழா நிறைவு பெறும். நாளை அன்னதானம் நடக்கிறது.

    • கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
    • மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக, கொடி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து, தஞ்சை மறை மாவட்ட பரிபாலர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17ந் தேதி நடைபெற உள்ளது.

    • விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
    • தேர்பவனியில் ஏராளமான பங்கு மக்கள், பேரவையினர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் நாள் திருவிழாவில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினார். விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது.

    விழாவின் 10-ம் நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலி, 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, 10 மணிக்கு திருப்பலி, பகல் 12 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, இரவு 7 மணிக்கு தேரில் திருப்பலி ஆகியவை நடைபெற்றது. தேர்பவனியில் ஏராளமான பங்கு மக்கள், பேரவையினர் கலந்துகொண்டனர்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டான்லி சகாயம், உதவி பங்குதந்தை யர்கள் ரெஜின், ஸ்டாலின், பங்குபேரவை துணை தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் எம்.என்.ராஜ பாலன், துணை செயலாளர் கலாமேரி, பொருளாளர் ஆன்றோஸஸி மற்றும் பங்குபேரவையினர், அருட் சகோதரிகள், பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.

    • தொண்டி சிந்தாத்திரை அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.
    • பங்கு இறைமக்கள் கலந்துகொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை எதிரே உள்ள புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை சவரிமுத்து தலைமையில் நடந்தது. சிவகங்கை வட்டார அதிபர் ஜேசுராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

    மேத்தா, முத்துமாலை, மரிய அந்தோணி, ஸ்டீபன், ஜான்பால், ஜோசப் ராஜா, குழந்தை யேசு, அன்பரசு, ஜோசப் லூர்துராஜா ஆகியோர் நவ நாள் திருப்பலி நடத்தினர்.

    விழா நிறைவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் திருப்பலி நடத்தி குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடந்தது. முகிழ்தகம், ஆர்.சி.நகர், வட்டாணம் தெற்கு தோப்பு, வெள்ளாளக் கோட்டை, வேலங்குடி, நரிக்குடி, கோடி வயல், சின்னத்தொண்டி காந்தி நகர், சவேரியார்பட்டினம், விளக்கனேந்தல், புடனவயல், புதுக்குடி, தண்டலக்குடி, தொண்டி, செங்காலன் வயல் ஆகிய பங்கு இறைமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம், திருக்காவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் புகழ் பெற்ற புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்டு, தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா தளங்களில் ஒன்றான இந்த பழமை வாய்ந்த ஆலயத்தில் 53 அடி உயரமுள்ள பித்தளையிலான மாதா சொரூபம், ஜெபமாலை பூங்கா அமைந்து உள்ளது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தின் 292-ம் ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 22 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக மாலை 7 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் தேர்திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குதந்தை அதிபர் தங்கசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட்ட அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். வாணவேடிக்கை , வாத்தியங்கள் முழங்க தேர்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

    தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் வேண்டுதலாக ஆடு, கோழி, விளை நிலங்களில் விளைந்த விளைபொருட்களை காணிக்கையாக செலுத்தினர். திருவிழா குறித்து பங்குத்தந்தை கூறுகையில், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    மேலும் பக்தர்கள் தங்களின் உடல் நோயை தீர்க்க, மந்திரிக்கப்பட்ட மாதா எண்ணையையும், மாதா குளத்து மண்ணையும் பெற்று செல்கின்றனர், இன்று இரவு 7 மணிக்கு உய்யகொண்டான் திருமலை பங்குதந்தை அம்புரோஸ் தலைமையில் தேர்திருப்பலியும் தேர்பவனியும் நடைபெறும். மே1-ந்தேதி காலை 6 மணிக்கு பங்குதந்தை தங்கசாமி மற்றும் உதவி பங்குதந்தை ஞான அருள்தாஸ் ஆகியோரால் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவடைய உள்ளது என்று கூறினார்.

    திருவிழாவை முன்னிட்டு டி.எஸ்.பி. சங்கர்கணேஷ் தலைமையில், திருமானூர் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கியமேரி மேற்பார்வையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமானூர் எஸ் ஐ கட்டுப்பாட்டில் 30 சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்றது. திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமையில் மருத்துவக்குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

    • ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது
    • திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பலியும், நடைபெற்று வந்தது.

    திருமானூர்:

    அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான 1716-ம் ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சொரூபம் அமையபெற்றுள்ள திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தின் 292-வது ஆண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து புனித அடைக்கல அன்னை திருஉருவ கொடி ஏலாக்குறிச்சி ஊரைசுற்றி ஊர்வளமாக வந்து கொடிமரத்தி ஏற்றப்பட்டது.திருவிழாவின் தொடர்ச்சியாக திருப்பலியும், நடைபெற்று வந்தது. நிகழ்ச்சியின் முக்கிய விழாவான தேர்பவனி இன்று இரவு நடைபெறுகிறது.கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட உள்ள அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை தொடங்கவைக்க உள்ளார்.

    பங்குதந்தை அதிபர் தங்கசாமி திருவிழாவை பற்றி கூறுகையில்.ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு ஆந்திரா. கர்நாடகா. கேரளா. பாண்டிச்சேரி மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். மேலும் மாற்று மதத்தினர் கோவிலுக்கு வந்து தங்களின் உடல் நோயை தீர்க்க மாதா எண்ணெயும் மாதா குளத்து மண்ணையும் பெற்று செல்வார்கள். திருவிழாவிற்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளும், மின்விளக்கு வசதிகளும் செய்து வருகிறோம் என்று கூறினார்.


    • சோழவந்தான் அருகே புனித ஜெர்மேனம்மாள் தேர்பவனி நடந்தது.
    • வாடிப்பட்டி, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள ராயபுரம் கிராமத்தில் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 110-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கொடி பவனி, ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது. நேற்று இரவு திருவிழா திருப்பலி, தேர் பவனி, நற்கருணை ஆசீர் நடந்தது. மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ராயபுரம் திருவிழா இரவு முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளித்தது. இன்று (ஞாயிறு) புதுநன்மை விழா, தேர் பவனியும், நாளை (திங்கட்கிழமை) காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். சமயநல்லூர் டி.எஸ்.பி. பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். சோழவந்தான், வாடிப்பட்டி, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுகாதாரம், குடிநீர் வசதிகளை ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மூன்று நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்றது.

    முதல் நாள் மாலையில் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் முன்னிலையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.

    2-வது நாள் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் காலை, மதியம், மாலை திருப்பலி மற்றும் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இரவு கலை நிகழ்ச்சிகள் வான வேடிக்கை முழங்கிட மணங்கமலும் மலர்கள் மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனே கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது.

    முன்னதாக பாபநாசம் மேல வீதியில் புனித செபஸ்தியாருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    3வது நாள் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி முன்னிலையில் திருவிழா திருப்பலி மற்றும் திருப்பலி நடைபெற்றது மாலை கொடி இறக்கம் நடைபெற்றது திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் , இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் அருள் சகோதிரிகள் பங்கு பேரவை அன்பியங்கள் , பங்கு இறை மக்களை, பங்கு கிளை கிராம இறை மக்கள் செய்திருந்தனர்.

    • திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்தெழுந்த நிகழ்வை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இதனை முன்னிட்டு நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனை திருப்பலி நடைபெற்றது.

    அதன்படி தஞ்சை திரு இருதய பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை நள்ளிரவு வழிபாடு மறைமாவட்ட பரிபாலகரும், ஆயருமான (பொறுப்பு) சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பாஸ்கார் திருவிழிப்பு சடங்குகளான புதுநெருப்பு, புனித தீர்த்தம் புனிதம் செய்யும் சடங்குகள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர். திருப்பலி முடிந்தவுடன் வியாகுல அன்னை ஆலய முகப்பில் இயேசுவின் உயிர்த்த காட்சி நடைபெற்றது. தொடர்ந்து உயிர்த்த ஆண்டவரின் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.முடிவில் ஈஸ்டர் பாண்டிகை வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்க ளிலும் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ×